ஆண்டவரே!உம் பலிபீடத்தை வலம் வருவேன்.( திருப்பாடல்கள் ) 26 : 6

ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்து அவர் பலிபீடத்தண்டையில் வரும் யாராயிருந்தாலும் எதற்காகவும் கலங்கவும்,அஞ்சவும்,தேவையில்லை. அவரை நோக்கி நமது உள்ளத்தை உயர்த்தி அவரைப் பற்றிக்கொள்பவர் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. ஏனெனில் அவர் இரக்கமும்,
பேரன்பும்,கொண்டவர்.அவருடைய பீடத்தண்டையில் அடைக்கலான் குருவிக்கும், சிட்டுக்குருவிக்கும் கூட அடைக்கலம் உண்டாம் .தி.பா.84:3. அப்படியிருக்க அவருக்கென்று அவரைப்போல் படைக்கப்பட்ட நமக்கு எவ்வளவு அடைக்கலம் உண்டு என்பதை அறிந்துக்கொள்வோம்.

ஆண்டவரின் இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றவர்கள். அவர்கள் எப்பொழுதும் அவரைப் புகழ்ந்துக்கொண்டே இருப்பார்கள். நம்முமுடைய சரீரமே ( உடலே ) ஆண்டவரின் ஆலயமாக இருக்கிறது. ஆண்டவரின் ஆவியானவர் நம் இதயத்தில் குடியிருக்கிறார் என்று                  1 கொரிந்தியர் 3 : 16 ல் வாசிக்கிறோம். ஆகையால் நாம் உண்மை உள்ளவர்களாய் அவருக்கு பயந்து கீழ்படிந்து நடப்போமானால் அப்பொழுது நம்மை முற்றிலும் பொறுப்பெடுத்துக்கொண்டு நம் கால் கல்லில் இடராதபடிக்கும்,ஒரு தீங்கும் அணுகாத படிக்கும் நம்மை காத்துக்கொள்வார்.

ஆண்டவரின் பீடத்தண்டையில் போகாமல் அவரை நோக்கி பாராமல் இருந்தால் எப்படி நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்?வேதம் சொல்கிறது அவரை நோக்கி பார்த்த ஒருவராவது வெட்கப்பட்டு போனதில்லை. ஆகையால் தான் சீமோன் பேதுரு, ஆண்டவரே!நாங்கள் யாரிடம் போவோம்?நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே இருக்கிறது என்று யோவான் 6 : 68 ல் சொல்கிறார். இந்த பேதுருவைப் போல் நாமும் அவரையே பற்றிக்கொண்டு, அவரின் பீடத்தையே வலம் வந்து நம் தேவைகள் யாவையும் பெற்றுக்கொள்வோம். வாழ்வுதரும் உணவு நானே என்று சொன்ன இயேசுகிறிஸ்துவை,வானிலிருந்து இறங்கி வந்து தம் உடலாகிய அப்பத்தை நமக்கு புசிக்க கொடுத்து நம்மை மீட்டுக்கொண்ட அவரின் பாதத்தை நாமும் தினமும் முத்தம் செய்து நம்மையே ஜீவபலியாக அவரின் பீடத்தில் படைப்போம்.

அன்பும்,இரக்கமும்,உள்ள இறைவா!

உமது பாதைகளை அறிய செய்தருளும்.உமது வழிகளை எங்களுக்கு கற்பித்தருளும்.நீர் நல்லவர்,நேர்மையுள்ளவர். எங்கள் பாவங்களை யும்,குற்றங்களையும்,மன்னித்து உமது பலிபீடத்தை வலம் வர உதவி செய்தருளும். ஆண்டவரே!உமது பெயரின் பொருட்டு எங்கள் குற்றங்களை மன்னித்தருளும். எங்கள் சிறுமையையும்,வருத்தத்தையும்,நீர் காண்கிற தேவனாய் இருக்கிறீர்.எங்கள் துன்பம் அனைத்திலும் இருந்துக் காத்துக்கொள்ளும்.எங்களுக்காக நீர் சிலுவை சுமந்து இரத்தம் சிந்தி மீட்டதை நாங்கள் ஒருபோதும் மறவாமல் நன்றி உள்ளவர்களாக வாழ போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பரம தந்தையே! ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.