இது கடவுள் ஆணை… கடைப்பிடிக்கனும்

மத்தேயு 23:13-22

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

உலகில் பொய்கள் மலிந்துவிட்டன. ஆகவே பொய்யை மறைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த சிலர் கண்டுபிடித்தது தான் இந்த ஆணை. ஆணை இடுதல் என்பது பொய்யை வித்தியாசமான விதத்தில் உண்மையாக்குவது. இப்படிப்பட்ட சூழலில் வசிக்கும் நமக்கு வாழ்வு கொடுக்கும் இறைவார்த்தை ஆணையிடுவது அவசியமற்றது. அது இனி வேண்டாம் மிகவும் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்கிறது. ஆகவே கேளீர்.. கேளீர்… ஆணையிடும் போது இரண்டு விதமான ஆபத்துக்கள் வழக்கமாக நேரிடுகின்றன.

ஆபத்து 1: உண்மை இறக்கிறது
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. அதற்காகவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்.என்று சொன்ன நம் பெருமான் இயேசுவின் இலக்கு உடைகிறது. உண்மை இறக்கிறது. பொய் வாழ்கிறது. ஆகவே பொய்யான தோற்றம் அங்குமிங்கும் உதயமாகிறது. இது இறையரசிற்கு உகந்ததல்ல.

ஆபத்து 2: நம்பகத்தன்மை இறக்கிறது
என்னைப் பற்றி பிறர் வைத்திருக்கும் உயர்வான எண்ணம் உடைகிறது. ஆகவே நான் மிகவும் மலிவான நபராக மாறுகிறேன. என்னுடைய மதிப்பு அப்படியே குறைகிறது. கடவுள் நம் வாழ்க்கைக்கு மதிப்பெண் வழங்கும்போது அவர் வெற்றிக்கான மதிப்பெண்களை நமக்கு வழங்க முடிவதில்லை. ஆகவே வாழ்வில் தோல்வி கிட்டுகிறது.

மனதில் கேட்க…
1. நான் ஆணையிடுவதால் எதுவும் வளர்ச்சி இருக்கிறதா? பொய்யாணை இட்டதனால் என் மதிப்பு குறைந்திருக்கிறது அல்லவா?
2. இனி ஆணையிடமாட்டேன் ஆண்டவரே என்னை மன்னிப்பீரா?

மனதில் பதிக்க…
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி(யோவா 18:37)

~  அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.