இன்றைய சிந்தனை : கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது;அதுவே ஏற்புடையது. தி.பா.147:1

யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர். தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர். ஏனெனில் அவரே விண்ணையும், மண்ணையும், கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர். என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! ஆண்டவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார். பசியாயிருக்கிரவர்களுக்கு ஆகாரங்கோடுக்கிறார். கட்டுண்டவர்களைக் விடுதலையாக்குகிறார்.

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார். தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார். நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். அனாதைப் பிள்ளைகளையும் கைம் பெண்களையும் ஆதரிக்கின்றார். நாடு கடத்தப்பட்டோரை கூட்டிச் சேர்க்கின்றார். உடைந்த உள்ளத்தை குணப்படுத்துகின்றார். அவர்களின் காயங்களை கட்டுகின்றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.

அவரே வல்லமையுள்ளவர். அவருடைய நுண்ணறிவு அளவிடமுடியாது.எளியோருக்கு ஆதரவு அளித்து பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.ஆகையால் ஆண்டவருக்கு நன்றி செலுத்து பாடுங்கள்.நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.

நாம் இந்த உலகில் ஒவ்வொருநாளும் வாழ்வது அவரது கிருபையே ஆகையால் எந்த நிலையிலும் அவரை போற்றி துதித்து ஆராதிப்போம். அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் அவரைப் போற்றுகிறது. அனைத்து உயிர்களும் அவரைப் புகழ்கின்றது.அவரின் சாயலில் அவரைப்போல் படைக்கப்பட்ட நாம் எவ்வளவு அதிகமாக போற்றவேண்டும் புகழவேண்டும் என்று உங்கள் இதயத்தில் ஆராய்ந்து பார்த்து இன்னும்,இன்னும் அதிகதிகமாக புகழ்ந்து பாடுவது நல்லது,அதுவே ஏற்புடையது.

எங்கள் அன்பின் தெய்வமே!!

எங்கள் உயிர் உள்ள மட்டும் உம்மையே போற்றிடுவோம். எங்கள் வாழ்நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடிக் கொண்டாடுவோம். நீரே இரக்கமும்,கனிவும்,உடையவர்.எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர் நீரே. எங்கள் மன்றாட்டை கேட்பவரும் நீரே. எங்களுக்காக வழக்காடி மீட்கும் தெய்வமும் நீரே, ஒவ்வொருவரின் உள்ளத்தையும் சந்தோசத்தினாலும் ,சமாதானத்தினாலும் நிரப்பி ஆட்கொண்டு வழிநடத்தி காத்தருளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இன்ப நாமத்தில் வேண்டுகிறோம் அன்பின் தெய்வமே!

ஆமென்!அல்லேலூயா!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.