இன்றைய சிந்தனை : கடவுள் எல்லோரிலும் செயலாற்றுகிறார்

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் கடவுள் இருக்கிறார். அவர்களின் செயல்கள் மூலம் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் இருப்பதை காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்கு சாட்சி. ஏனெனில் அவர்கள் செய்வது குற்றமா? குற்றமில்லையா? என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றது.

கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டோ? எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்க கெட்டுப்பொயினர். நல்லது செய்பவர் யாருமில்லை; ஒருவர்கூட இல்லை’. அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி; அவர்களது நாக்கு வஞ்சகமே பேசும். அவர்கள் உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு”

இரத்தம் சிந்துவதற்கு அவர்கள் கால்கள்; விரைகின்றது. பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன; அமைதி வழியை அவர்கள் அறியார்.அவர்களது மனக்கண்களில் இறையச்சம் இல்லை.

சிற்பி செதுக்கியசிளையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே! ஆயினும் சிற்பி தான் செதுக்கிய ஊமைச் சிலைகளாகிய கைவேளைகளிலே நம்பிக்கை வைக்கிறார். மரக்கட்டையிடம் ” விழித்தெழும் ” என்றும் ஊமைக் கல்லிடம் “எழுந்திரும்”” என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ கேடு ! அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே ஆனால், ஆண்டவர் தம் புனிதக் கோவிலில் வீற்றிருக்கின்றார். அவர் திருமுன் மண்ணுலகெல்லாம் மௌனம் காப்பதாக.அபக்கூக்கு 2:18,19

உயிரோடு எழுந்த இறைவா!!

நீர் மரித்தீர்,அடக்கம் பண்ணப்பட்டீர். ஆனாலும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்து இன்றும் எங்கள் மத்தியில் எங்கள் உள்ளத்தில் பேசிக்கொண்டு இருக்கிறீர். உமதுக் கண் பூமி எங்கும் உலாவிக்கொண்டும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் செயலாற்றுகிற தேவனாக இருக்கிறீர். சிற்பி செதுக்கும் எந்த சிலையிலும் நீர் இல்லை என்று மக்கள் உணர்ந்து செயல்பட அவர்கள் உள்ளத்தில் அவர்களின் மனசாட்சியின் மூலம் பேசி யாவரும் மனந்திரும்ப உதவிச் செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.