உடன் பணியாளர்களாக…

இன்றைய நற்செய்தியிலே, இயேசுவின் பணிவாழ்வில் அவரோடு உடனுழைத்தவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு தரப்பட்டிருக்கிறது. இயேசுவின் திருத்தூதர்கள் மற்றும் பெண் சீடர்களைப்பற்றியும், அவர்கள் யார்? என்பது பற்றியும், நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசு தனிமனிதராக பணி செய்யவில்லை. அவருடைய பணிவாழ்வில் பலருக்கும் பங்கு இருந்ததை இது நமக்கு தெளிவாக்குகிறது.

இந்த உலகத்தில் பொதுநலத்தோடு மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையான மக்களுக்கு, களத்தில் இறங்கி உதவி செய்ய முடியாது. இதற்கு அவர்களது பணி, குடும்பம், சூழ்நிலை தடையாக இருக்கலாம். ஆனால், தங்களால் இயன்றதை பொருளாகவோ, பணமாகவோ கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அதில் அவர்களுக்கு நிறைவு இருப்பதாக உணர்கிறார்கள். இரண்டாவது வகையான மக்களும் நேரடியாக முழுநேரத்தையும், முழுமூச்சியோடு இறங்க வாய்ப்பில்லாதவர்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களது உடனிருப்பு மூலமாக, சிறு,சிறு உதவிகள் மூலமாக எப்போதும் பொதுநலனோடு உழைத்துக்கொண்டிருக்கிறவர்கள். மூன்றாவது வகையான மக்கள், முழுக்க முழுக்க மக்களுக்காக, பொதுநலனோடு உழைக்கிறவர்கள். அவர்கள் அதற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறவர்கள். தங்கள் உயிர் போனாலும் கவலைகொள்ளாதவர்கள். இந்த மூன்று பேருமே, பொதுநலனுக்கானவர்கள் என்பதை, நாம் இங்கே புரிந்து கொள்ளலாம்.

இயேசுவோடு பணிபுரிந்தவர்கள், அவரோடு உடனிருந்தவர்கள் அனைவரையுமே இந்த மூன்று வகையான மக்களில் நாம் உள்ளடக்கி விடலாம். நாம் இந்த மூவரில் யாராக இருக்கிறோம்? என சிந்தித்துப்பார்ப்போம். பொதுநலனோடு இயேசுவின் பிள்ளைகளாக வாழ அருள்வேண்டுவோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.