கடிகாரத்தைப் பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை

லூக்கா 12:54-59

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும்.

இன்றைய நற்செய்தி வாசகம் காலத்தின் மதிப்பை நமக்குக் கற்றுத் தருகிறது. ஆகவே கேளுங்க.. கேளுங்க நற்செய்தி வாசகத்தை நல்லா கேளுங்க. மாறுங்க இன்றே மாறுங்க.. காலத்தை சரியாக பயன்படுத்தும்போது இரண்டு சாகசங்களை நாம் செய்ய முடிகிறது.

1. சமாதானம் செய்ய முடிகிறது
எதிரியோடு சண்டை என்றால் சரியாக நேரத்தை பயன்படுத்தும் போது அங்கே சமாதானம் அறுவடை செய்யப்படுகிறது. எல்லா பகைவர்களையும் இந்த சரியான நேரத்தை பயன்படுத்துவதன் வழியாக நண்பர்காளாக்க முடியும். ஆகவே காலம் கடந்துச் செல்ல அனுமதிக்க வேண்டாம். காலத்தை மிகச் சரியாக பயன்படுத்தி சண்டைகளை சமாதானமாக்குவோம்.

2. சத்திமில்லாமல் சாதிக்க முடிகிறது
நேரத்தின் மதிப்பு அறிந்தவாக்ள் தான் சாதித்திருக்கிறார்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தும் அத்தனை பேரும் சாதனையாளர்களே! வாழ்க்கையில் சாதிக்காத அத்தனை பேரும் இந்த நேரத்தை கண்டுக்கொள்ளதவர்களே! இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்…

01.ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.

02.ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

03.ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.

04.ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.

05.ஒரு நாளின் மதிப்பு என்னவென்று – அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.

06.ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

07.ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.

08.ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.

09.ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

மனதில் கேட்க…
1. என் கடமைகளை சரியான நேரத்தில் செய்கிறேனா? பின்தள்ளிப் போடுகிறேனா?
2. நேரத்தை சரியாக பயன்படுத்தி என் பகைவர்களோடு சமாதானம் செய்திருக்கிறேனா?

மனதில் பதிக்க
ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. (சஉ 3:1)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.