1000 ஸ்தோத்திரங்கள் 501 – 600

501. சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
502. மேட்டிமையான கண்களை தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம்
503. ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவரே ஸ்தோத்திரம்
504. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் லேசாக உதவி செய்கிறவரே ஸ்தோத்திரம்
505. ஏழைகளைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
506. எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே ஸ்தோத்திரம்
507. எளியவனை சிறுமையினின்று எடுத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறவரே ஸ்தோத்திரம்
508. எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
509. எளியவனின் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறவரே ஸ்தோத்திரம்
510. எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே ஸ்தோத்திரம்
511. எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
512. எளியவனை பிரபக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
513. எளியவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
514. திக்கற்றோரின் தகப்பனே ஸ்தோத்திரம்
515. அனாதைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
516. விதவைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
517. திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே ஸ்தோத்திரம்
518. திக்கற்ற பிள்ளைகளின் ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பவரே ஸ்தோத்திரம்
519. திக்கற்ற பிள்ளைகளையும் விதவையையும் ஆதரிக்கிறவரே ஸ்தோத்திரம்
520. பரதேசிகளை காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
521. தேவன் தனிமையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்துகிறீர் ஸ்தோத்திரம்
522. உம்முடைய தயவினால் ஏழைகளை பராமரிக்கிறதற்காக ஸ்தோத்திரம்
523. ஊழியக்காரர் மேல் பரிதாபப்படுகிறவரே ஸ்தோத்திரம்
524. ஊழியக்காரன் சுகத்தை விரும்பகிறவரே ஸ்தோத்திரம்
525. ஊழியக்காரன் வார்த்தைகளை நிலைப்படுத்துகிறவரே ஸ்தோத்திரம்
526. ஊழியக்காரரை அக்கினி ஜீவாலையாக மாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
527. தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை கொள்வதற்காக ஸ்தோத்திரம்
528. உமது சமுகத்தை ஊழியக்காரர் மீது பிரகாசிக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
529. நல்ல மனுஷனுடைய நடைகளை உறுதிப்படுத்தும் கர்த்தரே ஸ்தோத்திரம்
530. நல்ல மனுஷன விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லையே, கர்த்தர் உமது கையினால் அவனைத் தாங்குகிறீர் ஸ்தோத்திரம்
531. செம்மையான இருதய முள்ளவர்களை இரட்சிக்கும் தேவனே ஸ்தோத்திரம்
532. இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவரே ஸ்தோத்திரம்
533. நீதிமானை சோதித்தறிகிறவரே ஸ்தோத்திரம்
534. நீதிமானுடைய சந்ததியோடிருக்கிறவரே ஸ்தோத்திரம்
535. நீதிமான்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்
536. நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் எல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பவரே ஸ்தோத்திரம்
537. நீதிமான்களுடைய எலும்பகளெல்லாம் காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
538. நீதிமான்கள் கைவிடப்பட்டதில்லையே, அவன் சந்ததி அப்பத்திற்கு இரந்து திரிகிறதில்லையே ஸ்தோத்திரம்
539. நீதிமான்களை தாங்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
540. நீதிமான்களுக்கு உதவி செய்து விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்
541. நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டீரே ஸ்தோத்திரம்
542. நீதிமானை பனையைப் போல செழிப்பாக்கி லீபனோனிலுள்ள கேதுருவைப் போல வளரச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
543. நீதிமான்களை சிநேகிக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
544. நீதிமான்கள் முதிர் வயதிலும் கனி தந்து பஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் என்றீரே ஸ்தோத்திரம்
545. உத்தமனுக்கு துணையாயிருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
546. உத்தமர்களின் நாட்களை அறிந்திருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
547. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்குபவரே ஸ்தோத்திரம்
548. சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்தும் கர்த்தரே ஸ்தோத்திரம்
549. சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பவரே ஸ்தோத்திரம்
550. சாந்த குணமுள்ளவர்களுக்கு வழியை போதிக்கிறவரே ஸ்தோத்திரம்
551. பாவிகளுக்கு வழியை தெரிவிக்கிறவரே ஸ்தோத்திரம்
552. உமக்கு பயந்தவர்களுக்கு உடன்படிக்கையை தெரிவிப்பதற்காக ஸ்தோத்திரம்
553. தமது பரிசுத்தவான்களை கைவிடாத கர்த்தரே ஸ்தோத்திரம்
554. தமது பரிசுத்தவான்களுக்கு சமாதானம் கூறுபவரே ஸ்தோத்திரம்
555. பரிசுத்தவான்களுடைய ஆலோசனை சபையில் மிகவும் பகழப்படத்தக்க தேவனே ஸ்தோத்திரம்
556. தம்மை சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்
557. கேருபீன்களாலும் சேராபீன்களாலும் நித்தமும் போற்றப்படுகிறவரே ஸ்தோத்திரம்
558. என் தலையை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
559. என் கொம்பை காண்டா மிருகத்தின் கொம்பைப் போல் உயர்த்துவீர் ஸ்தோத்திரம்
560. என்னை உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்
561. என்னைத் தாங்குகிறவரே ஸ்தோத்திரம்
562. எனனை சுகமாய் தங்கப் பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்
563. எனக்கு ஆதரவாய் இருந்தவரே, இருக்கிறவரே ஸ்தோத்திரம்
564. என் விளக்கை ஏற்றுகிறவரே ஸ்தோத்திரம்
565. என் இருளை வெளிச்சமாக்குகிறவரே ஸ்தோத்திரம்
566. என் செவியைத் திறந்தீரே ஸ்தோத்திரம்
567. என் விண்ணப்பத்தைக் கேட்டீரே ஸ்தோத்திரம்
568. என் அழுகையின் சத்தத்தைக் கேட்பவரே ஸ்தோத்திரம்
569. என் கண்ணீர் உம்முடைய துருத்தியில் அல்லவோ இருக்கிறது ஸ்தோத்திரம்
570. என் கண்களை கண்ணீருக்கு தப்பவித்தீரே ஸ்தோத்திரம்
571. என் காலை இடறலுக்கு தப்பவித்தீரே ஸ்தோத்திரம்
572. அடிகளை உறுதிப்படுத்தினீர் ஸ்தோத்திரம்
573. என் கால்களை வலைக்கு நீங்கலாக்குபவரே ஸ்தோத்திரம்
574. என் கால்களை மான் கால்கள் போலாக்குபவரே ஸ்தோத்திரம்
575. என் கால்கள் வழுவாத படி நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர் ஸ்தோத்திரம்
576. என் வழியை செவ்வைப் படுத்துகிற தேவனே ஸ்தோத்திரம்
577. என்னை விசாலமான இடத்தில் கொண்டு வந்தவரே ஸ்தோத்திரம்
578. சத்துருக்களின் கையில் என்னை ஒப்பக் கொடாமல் என பாதங்களை விசாலத்திலே நிறுத்தினவரே ஸ்தோத்திரம்
579. நெருக்கத்திலிருந்த என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தீர் ஸ்தோத்திரம்
580. எல்லா நெருக்கத்தையும் நீக்கி விடுவித்தீர் ஸ்தோத்திரம்
581. என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே ஸ்தோத்திரம்
582. அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவரே ஸ்தோத்திரம்
583. என் கைகளை யுத்தத்திற்கு பழக்குவிக்கிறவரே ஸ்தோத்திரம்
584. என் கைகளை போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்
585. (என்) கை பிடித்து நடக்க பழக்குபவரே ஸ்தோத்திரம்
586. உமது அடியானை பட்டயத்துக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
587. யுத்தநாளில் என் தலையை மூடினதற்காய் ஸ்தோத்திரம்
588. எனக்கு நேரிட்ட போரை நீக்கி என் ஆத்துமாவை சமாதானத்துடன் மீட்டீர் ஸ்தோத்திரம்
589. என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப் பண்ணீர் ஸ்தோத்திரம்
590. என்னை பெலத்தால் இடைக்கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
591. தேவன் எனக்கு பலத்தை கட்டளையிட்டதற்காக ஸ்தோத்திரம்
592. அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன் ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம்
593. என்னை உமது காருணியத்தால் பெரியவனாக்குகிறிர் ஸ்தோத்திரம்
594. ஜாதிகளுக்கு என்னை தலைவனாக்குகிறீர் ஸ்தோத்திரம்
595. ஜனங்களை எனக்கு கீழ்ப்படுத்துகிற தேவனே ஸ்தோத்திரம்
596. ஜனங்களின் சண்டைகளுக்கு என்னை தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்
597. நாவுகளின் சண்டைகளுக்கு எம்மை விலக்கி காப்பாற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்
598. எனக்காக பழிக்குப் பழி வாங்குபவரே ஸ்தோத்திரம்
599. என் சத்துருக்களுக்கு தீமைக்குத் தீமையை சரிக்கட்டுகிறீர் ஸ்தோத்திரம்
600. என் சத்துருக்களுக்கு வரும் நீதி சரிக்கட்டுதலை காணும்படி செய்வீர் ஸ்தோத்திரம்

You may also like...

1 Response

  1. renuka says:

    Very use full thank you very much praise tha lord

Leave a Reply to renukaCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.