1000 துதி மாலை(601-700)

1000 துதி மாலை (Praises) <601-700>

வ. எண் துதி மாலை  வசனங்கள் 
601 என்னோடு போரிட்டோர் கையினின்று என்னை விடுவித்து பாதுகாத்தவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.55:18
602 வலிமையை அறைக்கச்சையாய் அளித்து என் வழியை பாதுகாப்பானதாய் செய்த இறைவனே உம்மை துதிக்கிறோம் தி.பா16:32
603 என் சார்பாக செயலாற்றிய என் கடவுளே  உம்மை துதிக்கிறோம் தி.பா.68:28
604 உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன் எனவே பேரன்பால் என்னை ஈர்த்துள்ளவரே  உம்மை துதிக்கிறோம் ஏரே 31:3
605 உமது துணையால் என்னை பெருமைபடுத்தினிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.18:35
606 பிற இனங்களுக்கு இன்னைத் தலைவனாக்கினீர் உம்மை துதிக்கிறோம் தி.பா 18:43
607 மக்களினங்களை எனக்கு கீழ்ப்படுத்திய  இறைவனே  உம்மை துதிக்கிறோம் தி.பா 18:47
608 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா18:43
609 மனிதனின் சுழ்ச்சியின்று காப்பாற்றி உமது முன்னலையில் மறைப்பினுள் வைத்துள்ளீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா31:20
610 எனக்காக பலிக்கு பழி வாங்கும் இறைவனே  உம்மை துதிக்கிறோம் தி.பா 18:47
611 என் எதிரிகள் எனக்கு செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலே திருப்பி  வருபவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா54:5
612 என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணுற காணும்படி செய்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 59:10
613 எனக்கு திங்கு செய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானகேடும் அடைந்து விட்டதர்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா71:24
614 என் எதிரிகளை விடா என்னை ஞானியாக்கிய  உமது கட்டளைகளுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 119:98
615 என்னை உம்போரில் நம்பிக்கையாய் இருக்கப் பண்ணிணிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.22:8
616 பசும் புல்வெளி மீது என்னை இளைப்பாறச் செய்தவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா23:2
617 அமைதியான நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்பவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.23:2
618 எனக்கு புத்துயிர் அளிக்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 23:3
619 என்னை நீதிவழி நடத்துகின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 23:3
620 சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு  இருப்பதால்  உம்மை துதிக்கிறோம்  தி.பா.23:4
621 உம் கோலும் நெடுங்கழியும் என்னை தேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 23:4
622 என் எதிரிகள் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றிரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.23:5
623 என் தலையில் நறுமண தைலம் பூசுகின்றீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா.23:5
624 எனது பாத்திரம் நிரம்பி வழியச் செய்கின்றிர்  உம்மை துதிக்கிறோம் தி.பா 23:5
625 என் வாழ் நாளெல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னை புடை சூழ்ந்து வருவதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 23:6
626 என் கண்முன்பாக இருக்கும் உமது பேரன்பிற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 26:3
627 நான் பெற்ற உதவிக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 28:7
628 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளதற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 31:15
629 கேடுவரும் நாளில் என்னைத் தம் கூடாரத்தில் மறைந்து வைப்பதற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா.27:5
630 மனிதரின் சுழ்ச்சியினின்று எங்களைக் காப்பாற்றி உமது முன்னிலையில் மறைப்பினுள் வைத்துள்ளதற்காய் தி.பா.31:20
631 ஆண்டவரே நீர் என்னை குணப்படுத்துவீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா.30:2
632 சாவுக்குழியில் இறங்கிய என் உயிரைக் காத்தீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா 30:3
633 என் தந்தையும் தாயும் கைவிட்டாலும் என்னை ஏற்றுக்கொள்ளும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 27:10
634 என்னை கை தூக்கிவிட்ட ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.30:1
635 சாவின் வாயினின்று என்னை விடுவிப்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 9:13
636 ஆண்டவரே நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா30:3
637 ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 86:13
638 என் உயிரை சாவினின்று விடுவித்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 116:8
639 நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்து என் மனதிற்கு வலிமை அளித்திரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.138:3
640 எல்லாத் துன்பத்திலிருந்தும் என் உயிரைக் காத்து வாழும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் 1அர.1:29
641 எனது குற்றங்கள் மன்னிக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.32:1
642 எனது பாவங்கள் மறைக்கப்பட்டதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா32:1
643 எனது தீச் செயலை என்னாதிருக்கின்றிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.32:2
644 ஆண்டவரே நீர் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.32:5
645 என் பாவங்கள் அனைத்தையும் உமது முதுகுக்குப் பின்னால் எரிந்து விட்டீரே  உம்மை துதிக்கிறோம் ஏ.சா.38:17
646 என் குற்றங்களை எல்லாம் மன்னித்து என் நோய்களையெல்லாம் குணமாக்கினீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 103:3
647 என் உயிரைப் படுகுழியினின்று மீட்டிரே   உம்மை துதிக்கிறோம் தி.பா103:4
648 எனக்கு உமது பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாய் சூட்டினிரே உம்மை துதிக்கிறோம் தி.பா103:4
649 புதிய தொரு பாடல் நம் கடவுளைபுகழும் பாடல் என் நாவினின்று ஏலச் செய்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா40:3
650 உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்துதொலிக்கச் செய்தீரே   உம்மை துதிக்கிறோம் தி.பா 32:7
651 நீர் என் புலம்பலைக் களி நடனமாக மாற்றிவிட்டீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா.30:11
652 என் சாக்குத்துணியைக் களைத்துவிட்டு என்னை மகிழ்ச்சியால் உடுத்துகின்றீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 30:11
653 பிரிவு என்னும் கட்டுக்காளால் பிணைத்து அன்பு என்னும் கயிறுகளால் கட்டி நடத்துபவரே  உம்மை துதிக்கிறோம் ஒசே.11:4
654 உம்மைத் தேடுவோர் அனைவரையும் உம்மில் மகிழ்ந்து கலிக்கூரச் செய்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 40:16
655 எனக்கு ஆதரவளிப்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.55:22
656 என் கடவுள் என் பக்கத்தில் இருக்கின்றீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா 56:9
657 ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருப்பதற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏ.ரே. 20:11
658 எல்லா வகையான அச்சத்தினின்றும் என்னை விடுவித்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 34:4
659 என் உள்ளத்து விருப்பங்களை நீர் நிறைவேற்றுவதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 37:4
660 உமது இடக்கையால் என் தலையைத் தாங்கி கொள்வதற்காய் உம்மை துதிக்கிறோம் இ.பா.2:6
661 உமது வலக்கையால் என்னைத் தழுவிக் கொள்வதற்காய்  உம்மை துதிக்கிறோம் இ.பா.2:6
662 உமது வலக்கை நீதியை நிலை நாட்டுவதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.48:10
663 ஆண்டவரே நீர் நீதியையும் நேர்மையையும் விரும்புவதர்க்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா.33:5
664 ஆண்டவரே நீர் உண்மையை பேசி நேர்மையானவற்றை அறிவிப்பதால்  உம்மை துதிக்கிறோம் ஏசா.45:19
665 என் நேர்மையை கதிரொளி போலும் என் நாணயத்தை நண்பகல் போலும் விளங்கச் செய்வதற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா.37:6
666 கடவுளே நான் செய்த பொருத் தனைகளை நீர் அறிந்திருக்கிறீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா 61:5
667 என் மன்றாட்டைப் புறக்கணியாத இறைவனே உம்மை துதிக்கிறோம் தி.பா.66:20
668 உமது பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவனே  உம்மை துதிக்கிறோம் தி.பா 66:20
669 தனது பேரன்பால் என்னை எதிர் கொள்ளவரும் கடவுளே  உம்மை துதிக்கிறோம் தி.பா.59:10
670 என் தாயின் கருவில் எனக்கு உருத்தந்தவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா139:13
671 அஞ்சத்தகு வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் உம்மை துதிக்கிறோம் தி.பா 139:14
672 பூவுலகின்  ஆழ்ப்பகுதியின் நான் உருப் பெற்றதை நீர் அறிந்திருக்கிறீர்   உம்மை துதிக்கிறோம் தி.பா 139:15
673 பிறப்பிலிருந்தே நான் உம்மைச் சார்ந்திருப்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.71:6
674 தாயின் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தேடுத்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 71:6
675 என் இளமை முதல் எனக்கு கற்பித்து வந்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 71:17
676 நீரே என் நம்பிக்கை ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.71:5
677 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா56:8
678 கடவுளே உமது நீதி வானம் வரை எட்டுவதர்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 71:12
679 உமது திருவுளப்படி என்னை நடத்தி முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 73:24
680 எம் கால்கள் இடராதபடி பார்த்துக் கொள்வதற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 121:3
681 என்னைக் காக்கும் அவர் உறங்கி விடமாட்டார்  உம்மை துதிக்கிறோம் தி.பா 121:3
682 பகலில் கதிரவன் என்னைத் தாக்காது இரவில் நிலவும் என்னைத் தீண்டாது  உம்மை துதிக்கிறோம் தி.பா.121:6
683 ஆண்டவர் என்னை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்  உம்மை துதிக்கிறோம் தி.பா. 121:7
684 ஆண்டவர் என் உயிரைக் காத்திடுவார்  உம்மை துதிக்கிறோம் தி.பா 121:7
685 நான் போகும்பொழுதும் வரும்பொழுதும் இப்பொழுதும் இப்பொழுதும் ஆண்டவர் என்னைக் காத்தருள்வார் தி.பா.121:8
686 என் வழிகள்  எல்லாம்  உமக்குதெரிந்தவையே உம்மை துதிக்கிறோம் தி.பா.139:3
687 சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று  எங்களை வழிநடத்திச் செல்லும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே இ.ச.9:3
688 ஆண்டவர் நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம் தி.பா.139:1
689 நான் அமர்வத்தையும் எழுவத்தையும் நீர் அறிந்திருக்கின்றீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா.139:2
690 என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்து உயர்த்துனர்கின்றீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா.139:2
691 என் வாயில் சொல் உருவாகும் முன்பே அதை முற்றிலும்  அறிந்திருக்கின்றீரே உம்மை துதிக்கிறோம் தி.பா.139:4
692 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.139:3
693 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் என் உயிரைக் காக்கின்றீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா.138:7
694 என் மனம் சோர்வுற்றிருக்கும் போது நான் செல்லும் வழியை நீர் அறிந்திருக்கின்றீர் உம்மை துதிக்கிறோம் தி.பா.142:3
695 எனக்கு முன்னும் பின்னும் என்னை சூழ்ந்தும் இருக்கின்றீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா139:5
696 உமது கையால் என்னைப்பற்றி பிடிக்கின்றீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா.139:5
697 ஆண்டவர் என்னை கண்டித்தார் ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை  உம்மை துதிக்கிறோம் தி.பா118:18
698 எதிரிகளின் பற்களுக்கு ஆண்டவர் என்னை இறையாக்கவில்லை  உம்மை துதிக்கிறோம் தி.பா.124:6
699 நான் மன்றாடிய நாளில் எனக்கு செவி சாய்த்தீர் உம்மை துதிக்கிறோம் தி.பா138:3
700 இறைவா உம் நினைவுகளை நான் அறிந்து கொள்வது எத்தனை கடினம்  உம்மை துதிக்கிறோம் தி.பா.139:17

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: