1000 துதி மாலை(801-900)

1000 துதி மாலை (Praises) <801-900>

வ. எண் துதி மாலை  வசனங்கள் 
801 உமது கனிவான அனைத்து செயல்களுக்காக  உம்மை துதிக்கிறோம் தி.பா.103:2
802 ஆண்டவரே நீர் பேரொளியை ஆடையாக ஆணிந்து வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா 93:1
803 ஆண்டவரே நீர் மாண்பையும் மாட்சிமையும் ஆடையாக அணிந்துள்ளீர் உம்மை துதிக்கிறோம் தி.பா 104:1
804 ஆண்டவரே நீர் பேரொளியை ஆடையாக ஆணிந்துள்ளீர்  உம்மை துதிக்கிறோம் தி.பா 104:2
805 தாகமுற்றோர்க்கு நிறைவளிக்கும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 107:9
806 பசியுற்றோரை உம் நன்மையால் நிரப்புகின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 107:9
807 உம் வார்த்தையை அனுப்பி குணப்படுத்துகின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 107:20
808 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை கண்டுணருமாறு என் கண்களைத் திறக்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 119:18
809 என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளித்து வாழ்வளிக்கும் உம் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 119:50
810 ஆண்டவரே உமது வாக்குருதிக்கேற்ப எனக்குச் செய்த நன்மைகளுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 119:65
811 என் காலடிக்கு விளக்காயும் என் பாதைக்கு ஒளியாய் இருக்கும் உம் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா.115:105
812 துன்பங்கள் கவலைகள் மத்தியில் என்னை மகிழ்விக்கின்ற உம் கட்டளைக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 119:143
813 என் நாவிற்கு இனிமையான என் வாய்க்கு தேனினும் இனிமையான உம் சொற்க்களுக்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 119:103
814 போதைகளுக்கு நுண்ணறிவுட்டும்உம் சொற்க்களுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 119:130
815 பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலான உம் கட்டளை களுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 119:127
816 என் உள்ளத்திற்கு உவகை அளித்து எனக்கு மகிழ்ச்சி தரும் உம் சொற்களுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 15:16
817 நேர்மையான உம் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 33:4
818 ஆண்டவரே நம்பிக்கைக்குரிய உம் செயல்களுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 33:4
819 அஞ்சத்தகு செயல்கள் நீர் புரிவதற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 66:5
820 உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுகளுக்கு மறுமொழி பகர்வதற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 66:5
821 ஆண்டவரே உமது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருப்பதற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 30:5
822 உமது கருணையே என் வாழ்நாளெல்லாம் நீடிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா:30:3
823 நீர் என்றென்றும் கடிந்து கொள்ளாதவர் என்பதால்   உம்மை துதிக்கிறோம் தி.பா 103:9
824 நீர் என்றென்றும் சினம் கொள்பவரல்ல என்பதால்  உம்மை துதிக்கிறோம் தி.பா 103:9
825 எதிப்தியரின் தலைப் பேறுகளைக் கொன்றளித்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 136:10
826 கடல் நடுவே இஸ்ரயோலை நடத்திச் சென்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 136:142
827 நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்து நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலையை நசுக்கிவீட்டீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 74:13
828 உற்றுகளாகவும் ஓடைகளையும் பாய்ந்து வரச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் தி.பா 74:15
829 என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்து போகக் செய்தவரும் நீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 74:15
830 ஆற்றை நடந்து கடக்கச் செய்தவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 66:6
831 பகலில் மேகத்தாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் வழி நடத்தினீரே உம்மை துதிக்கிறோம் தி.பா.78:14
832 பாலை நிலத்தில் பாறைகளைப் பிளந்து பொங்கிவழிகின்ற நீரைப் பருகச் செய்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.78:15
833 மாராவின் கசப்பான தண்ணீரை சுவையான தண்ணீராய் மாற்றினீரே உம்மை துதிக்கிறோம் வி.பா.15:25
834 வான தூதர்களின் உணவை மானிடர்க்கு அளித்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.78:25
835 பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 136:15
836 எரிக்கோ மதிலை இடித்தவரே  உம்மை துதிக்கிறோம் யோ.6:20
837 கழுதையின் வாயைத் திறந்து பேச வைத்தீரே உம்மை துதிக்கிறோம் எண்.22:28
838 கதிரவனை கிபயோனிலும் நிலவை அய்யலோனிலும் அசையாது நீற்க்ச் செய்தவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 10:12
839 ஆறுகளைப் பாலை நிலமாகவும் நீரோடைகளை வறண்ட தரையாகவும் மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 107:33
840 பாலை நிலத்தை நீர்த்தடாகமாக மாற்றுபவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 107:35
841 பாறையைத் தண்ணீர் தடாகமாக ஆக்குபவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 114:8
842 கற்பாறையை வற்றாத நீர்சுனை ஆக்குபவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 114:8
843 வறண்ட நிலத்தை நீருற்றாக செய்கிறவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா107:35
844 மலடியை அவள் இல்லத்தில் வாழவைத்து அவள் தாய்மைப்பேறு பெற்று மகிழ அருள்கின்றவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.113:9
845 அழிந்திருந்ததைக் கட்டுபவரே  உம்மை துதிக்கிறோம் எசே.36:36
846 பாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்குபவரே  உம்மை துதிக்கிறோம் எசே.36:36
847 காணாமல் போனதை தேடுபவரே  உம்மை துதிக்கிறோம் எசே 34:16
848 அலைந்து  திரிபவற்றைத் திரும்பக் கொண்டுவருபவரே  உம்மை துதிக்கிறோம் எசே 34:16
849 நலிந்தவற்றை திடப்படுத்துகிறவரே  உம்மை துதிக்கிறோம் எசே 34:16
850 காயப்பட்டதற்கு கட்டுப் போடுகிறவரே உம்மை துதிக்கிறோம் எசே 34:16
851 காற்றுக்கு ஒதுக்கிடமாய் இருப்பவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.32:2
852 புயலுக்கு புகலிடமாய் இருப்பவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா 32:2
853 வறண்ட நிலத்தில் நிருள்ள கால்வாய் போல் இருப்பவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா 32:2
854 காய்ந்த மண்ணில் பெருங்குன்றின்  நிழலாய் இருப்பவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.32:2
855 என் வழி மரவினர் மீது உம் ஆவியைப் பொழிகின்றவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.44:3
856 பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.146:8
857 சோர்வுற்றோர்க்கு வலிமை அளிக்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா 40:29
858 வலிமையிலந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா 40:29
859 தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுபவரே உம்மை துதிக்கிறோம் ஏசா 44:3
860 வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா 44:3
861 தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இறக்கம் காட்டும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா. 145:9
862 எல்லா உயிரினங்களுக்கும் தக்க வேளையில் உணவளிக்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா. 145:15
863 விதைப்பவனுக்கு விதையும் உண்பவர்க்கு உணவையும் வழங்குபவரே  உம்மை துதிக்கிறோம் 2கொரி.9:10
864 பசித்திருப்போருக்கு உணவளிப்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.146:7
865 தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவளிக்கும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.111:5
866 தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.145:19
867 கடவுளே உமது அன்பர் உறங்கும் போதும் தேவையானதை உம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 127:2
868 உம்மிடம் பற்றுக்கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 145:20
869 எளிய மனத்தோரைப் பாதுகாக்கும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 116:6
870 உண்மையாய் உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அண்மையில் இருக்கும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 145:18
871 நீர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ள ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 145:17
872 உம் செயல்கள் யாவும் இறக்கச் செயல்களே  உம்மை துதிக்கிறோம் தி.பா 145:17
873 செப்புக்கதவுகளை உடைப்பவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.45:2
874 இரும்பு தாழ்பாக்களை தகர்ப்பவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.42:2
875 இருளில் மறைத்து வைத்துள்ள புதையல்களையும் தருபவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா 45:3
876 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல் தம்மக்களை சுற்றிலும் இப்போதும் எப்போதும் இருக்கும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 125:2
877 எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்ற ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.147:2
878 ஆண்டவரே எங்கள் வீட்டைக் கட்டுகின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.127:1
879 ஆண்டவரே எங்கள் நகரைக் காக்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 127:1
880 தென் நாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல் எங்கள் அடிமை நிலையை மற்றுபவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.126:4
881 பொல்லார் கட்டிய கயிறுகளை அறுத்தெரிந்த கர்த்தரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.129:4
882 பொல்லாரின் வழிகளைக் கவிழ்த்து விடுகின்ற ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.146:9
883 பொல்லாரைத் தரைமட்டும் தாழ்த்துகின்ற ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.147:6
884 பொல்லாரைச் சறுக்கலான இடங்களில் வைத்து அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குபவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 73:18
885 பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டு வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவரே  உம்மை துதிக்கிறோம் எபி.7:26
886 தீமையைக் குறித்து மனம் வருந்தி மக்களை மன்னிப்பவரே  உம்மை துதிக்கிறோம் 2சாமு.24:16
887 மன்னிப்பதில் தாராள மனத்தினரான ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.55:7
888 நொறுங்கிய நலிந்த நெஞ்சத்தினரோடு வாழ்பவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.57:15
889 நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவித்து நலிந்த நெஞ்சத்தினரை திடப்படுத்துபவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.57:15
890 ஒருவரைத் தாழ்த்தி இன்னொருவரை உயர்த்துபவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 75:7
891 செறுக்குற்றோரை இகழ்ச்சியுடன் நோக்கும் கடவுளே  உம்மை துதிக்கிறோம் 1பே. 5:5
892 தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுபவரே  உம்மை துதிக்கிறோம் 1பே 5:5
893 அரசர்கள் வழக்கி மாற்று அரசர்களை நிலை நிறுத்துபவரே உம்மை துதிக்கிறோம் தானி. 2:21
894 காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவரே  உம்மை துதிக்கிறோம் தானி 2:21
895 ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவரே  உம்மை துதிக்கிறோம் தானி 2:21
896 அறிவாளிக்கு அறிவை வழங்குபவரே  உம்மை துதிக்கிறோம் தானி.2:21
897 மானிடருக்கு அறிவுட்டுபவரே   உம்மை துதிக்கிறோம் தி.பா.94:10
898 மன்னிப்பு அழிக்கும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 130:4
899 மிகுதியான மீட்பும் பேரன்பும் உம்மிடமே உள்ளது ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 30:7
900 உண்மையாகவே மக்களினங்களின் அன்பரான ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் இ.ச.33:3

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: