1000 துதி மாலை(901-1000)

1000 துதி மாலை (Praises) <901-1000> 

வ. எண் துதி மாலை  வசனங்கள் 
901 மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.94:10
902 கடல்களின் இரைச்சல்களையும் அலைகளையும் ஓசைகளையும் அடக்குபவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 65:7
903 மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 65:7
904 ஆயிரமாயிரம் பேருக்கு அருளன்பு காட்டும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் ஏரே 32:18
905 தந்தையாரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்கு பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம் எரே 32 :18
906 சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்ய வல்லவரே   உம்மை துதிக்கிறோம் எபி 2:18
907 வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே  உம்மை துதிக்கிறோம் யூதா.24:
908 தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு எங்களை மாசற்றவர்களாய் நிறுத்த வல்லவரே  உம்மை துதிக்கிறோம் யூதா 24:
909 என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் நன்றி செலுத்துவேன் என்பதால்  உம்மை துதிக்கிறோம் தி.பா.42:5
910 எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனே  உம்மை துதிக்கிறோம் தி.பா.57:2
911 எங்களை இறுதிவரை வழி நடத்தும் கடவுளே  உம்மை துதிக்கிறோம் தி.பா.48:14
912 ஆண்டவரே நீர் சொல்லி உலகம் உண்டானது நீர் கட்டளையிட அது நிலை பெற்றது உம்மை துதிக்கிறோம் தி.பா 33:9
913 வானத்தியும் புமையையும் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
914 ஒளியை உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
915 வான் வெளியையும் கடலையும் உப்பையும் உண்டாக்கினவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
916 பூக்கள் கனிகள் காய்கள் கிழங்குகள் கீரைகள் இவைகளைக் கொடுக்கும் மரம் செடி புல் பூண்டுகளுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
917 கதிரவனையும்  நிலவையும் விண்மீன்களையும் தந்தர்க்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
918 நீர் வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் மீன்களுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
919 பறவைகள் வீட்டு விலங்குகள் காட்டு விலங்குகள் ஊரும் பிரானிகளுக்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
920 மண்ணினால் மனிதனை உருவாக்கி உம் உயிர் மூச்சை ஊதி உயிர் உள்ளவனாக்கினதற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
921 நீர் திட்டமிட்டு உருவாக்கிய பருவங்களுக்காய் மழைக்காய் பனிக்காய் வெயிலுக்காய் நிருற்றுகளுக்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
922 ஆறுகளுக்காய் ஓடைகளுக்காய் நதிகளுக்காய் ஏரிகளுக்காய் குளங்களுக்காய் நீர் வீழ்ச்சிகளுக்காய் நீர் ஊற்றுகளுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
923 மலைகளுக்காய் குன்றுகளுக்காய் மேடுகளுக்காய் பள்ளத்தாக்குகளுக்காய் சம பூமிகளுக்காய் பாலை வனங்களுக்காய் பனிப்பிரதேசங்களுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
924 காடுகளுக்காய் குகைகளுக்காய் நிலத்தடிக் கனிமங்களுக்காய் எண்ணெய் ஊற்றுகளுக்காய் எரிவாயு ஊற்றுகளுக்காய் மீட்டவராம் ஏசுவே உமது அருந்செயல்களுக்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 104:24
925 தண்ணீரைத் திராட்சை இராசமாக்கினீரே  உம்மை துதிக்கிறோம் யோ 2:9
926 பிறவிக் குருடர்,செவிடர் ஊமைகளை காணவும் கேட்கவும்  பேசவும் வைத்தவரே உம்மை துதிக்கிறோம் மத் 9:33
927 மூடவர் உடல் ஊனமுற்றோர் கூனர் முடக்கு வாதமுற்றோரை குனமாக்கீனீரே   உம்மை துதிக்கிறோம் மார்2:23
928 பேய் பிடித்தோரை விடுதலையாக்கினீரே  உம்மை துதிக்கிறோம் மத் 15:28
929 தொழு நோயாளிகளை குணமாக்கினீரே  உம்மை துதிக்கிறோம் லூக்.17:14
930 மரித்த இலாசர் யாயிரின் மகள் நயீன் ஊர் விதவையின் மகன் யாவரையும் உயிரோடு எழுப்பினீரே  உம்மை துதிக்கிறோம் லூக்.17:15
931 காற்றையும் கடலையும் அடக்கினீரே  உம்மை துதிக்கிறோம் மத் 8:26
932 கடல் மீது நடந்தீரே உம்மை துதிக்கிறோம் மத்14:25
933 உமது வார்த்தையின் படி ஆழத்தில் வலை போட்டபோது பெருந்திரளான மற்றொரு முறை வலதுபக்கத்தின் வலை போட்ட போது 153 பெரிய மீன்களும் பிடிக்கச் செய்த அற்புதத்திற்காய் உம்மை துதிக்கிறோம் லூக்5:6
934 வரிக்கான பணம் மீன் வாயில் கிடைக்கச் செய்தீரே உம்மை துதிக்கிறோம் மத்17:27
935 இரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணையும் பேதுருவின் மாமியாரையும் 38 ஆண்டுகளாய் உடல் நலமற்று இருந்தவரையும் குணமாக்கீனீரே   உம்மை துதிக்கிறோம் மத்.9:22
936 5 அப்பம் 2 மீன் கொண்டோ 5000 பேருக்கு மேலானவர்களுக்கு உணவளித்தீரே மற்றும் எஞ்சிய துண்டுகளை 12 கூடைகள் நிறைய எடுக்கச் செய்தீரே  உம்மை துதிக்கிறோம் மத்14:20
937 7 அப்பம் சில சிறு மீன்கள் கொண்டு 4000 பேருக்கும் மேலானவர்க்கும்  உணவளித்தீரே  உம்மை துதிக்கிறோம் மத் 15:38
938 மல் கூவிண் வெட்டப்பட்ட காதை தொட்டு நல மாக்கினீரே  உம்மை துதிக்கிறோம் லூக் 22:51
939 உம்மைக் கொல்ல நினைத்த மக்களிடமிருந்து அற்ப்புதமாய் மறைந்து போனீரே உம்மை துதிக்கிறோம் லூக்.4:30
940 உம்மை பிடிக்க வந்த போர்க் காவலர்கள் கூட்டத்தை பின் வாங்கி தரையில் விழச் செய்தீரே  உம்மை துதிக்கிறோம் யோ.18:6
941 வலிப்பு நோயால் துன்புற்றவரையும் நீக் கோவை நோயுள்ளவரையும் குணமாக்கினீரே  உம்மை துதிக்கிறோம் மத் 17:18
942 அத்திமரம் உமது சாபத்தால் பட்டுப்போனதே  உம்மை துதிக்கிறோம் மத் .21:19
943 இயேசுவே ஒருவர் உம்மோடு இணைந்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராக மாற்றப்படுவதற்காய் உம்மை துதிக்கிறோம் 11கொரி .5:17
944 ஆண்டவர் உம்மை என்னை  வேடரின் கண்ணியினிறும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார் என்னும் வாக்குத் தத்ததிர்க்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா.91:3
945 தம் சிறகுகளால்  உம்மை என்னை அரவணைப்பார்  உம்மை துதிக்கிறோம் தி.பா.91:4
946 அவர்தம் இறைக்கைகளின் கீழ் நீர் நான் புகலிடம் காண்பீர் அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா.91:4
947 இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்து வரும் ஆண்புக்கும் நீர் நான் அஞ்சமாட்டீர் இருளில் உலவும் கொள்ள நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் நான் அஞ்ச மாட்டீர் என்னும் வாக்கீற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.91:56
948 உம் என் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் உம் என் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும் எதுவும் உம்மை அணுகாது என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.91:7
949 ஆண்டவரே உம் என் புகலிடமாகக் கொண்டீர் உன்னதரை உம் என் உறைவிடமாக்கிக் கொண்டீர் ஆகவே தீங்கு உமக்கு எனக்கு நேரிடாது வாதை உம் என் கூடாரத்தை நெருங்காது என்னும் வாக்கிற்காய்   உம்மை துதிக்கிறோம் தி.பா. 91:10
950 நீர் நான் செல்லும் இடமெல்லாம் உம்மை என்னை காக்கும் படி தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா. 91:11
951 உம் என் கால் கல்லின் மேல் மோதாதபடி அவர்கள் தாங்கள் கைகளில் உம்மைத் தாங்கி கொள்வர் என்ற வாக்கு தத்ததிர்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.91:12
952 சிங்கத்தின் மீதும் பாம்பின் மீதும் நீர் நான் நடந்து சொல்வீர் இளஞ் சிங்கத்தின் மீதும் விரியன் பாம்பின் மீதும் நீர் மிதித்துச் சொல்வீர் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 91:13
953 அவர்கள் நாங்கள் என்மீது அன்பு கூர்ந்ததால் அவர்களை என் பெயரை அறிந்துள்ளதால் அவர்களைப் பாதுகாப்பேன் என்ற  வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.91:14
954 அவர்கள் நாங்கள் என்னை நோக்கி மன்றாடும் போது அவர்களுக்கு பதில் அளிப்பேன் அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன் அவர்களைத் தப்புவித்து அவர்களை பெருமைப்படுத்துவேன் என்ற வாக்குத்தததிற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.91:15
955 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளி விடார் தம் உரிமைச் சொத்தாம் அவர்களை கை விடார் என்ற வாக்குத் தத்ததிற்காக உம்மை துதிக்கிறோம் தி.பா 94:14
956 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர் என்னும் வாக்கிற்காக  உம்மை துதிக்கிறோம் தி.பா 128:2
957 நீர் நான் நற்பெரும் நலமும் பெறுவீர் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 128:2
958 உம் என் துணைவியர் கனிதரும் திராட்சை கொடிபோல் இருப்பர் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா128:3
959 உம் என் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மை சூழ்ந்திருப்பர்  என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா 128:3
960 ஆண்டவர் சியோனிலிருந்து உமக்கு எனக்கு ஆசி வழங்குபவராக உம் வாழ்நாள் எல்லாம் எருசலேமின் நல் வாழ்வைக் காணும்படியாக செய்வார் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 128:5
961 நீர் நான் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீர் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா.128:6
962 உன் என் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன் உன் என் வழித் தோன்றல் களுக்கு நான் ஆசிவழங்குவேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா 44:3
963 உன்னைக் என்னைக் எதிர்த்து போரிடுபவருடன்நானும் போரிடுவேன் உன் என் பிள்ளைகளை விடுவிப்பேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா. 49:25
964 உன் என் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர் தாமே கற்றுத் தருவார் உன் பிள்ளைகள் நிறை வாழ்வு பெற்றுச்சிறப்புப் பெறுவார் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா.54:13
965 மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன் என் மீது கொண்ட பேரன்பே நிலை சாயாது என் சமாதானத்தின் உடன் படிக்கையே அசைவுறாது என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா.54:10
966 என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில்  தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் 11கொரி 12:9
967 இருமடங்கு நன்மைகள் நான் உனக்கு தருவேன் என்று இன்று உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் செக்.9:12
968 சிங்கக் குட்டிகள் உணவின்றி பட்டின இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா.34:10
969 நான் உனக்கு அறிவு புகட்டுவேன் நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன் உன்னைக் கண்ணோக்கி உனக்கு அறிவுரை கூறுவேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா. 32:8
970 துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடுங்கள் உங்களைக் காத்திடுவேன் அப்போது நீங்கள் என்னை மேன்மை படுத்துவீர்கள் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.பா.50:15
971 என்னிடம் மன்றாடு உனக்கு நான் செவிசாய்ப்பேன் நீ அறிந்திராத  மாபெரும் செயல்களையும் மறை பொருட்களையும் உனக்கு நான் விளக்கி கூறுவேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏரே.33:3
972 கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் மத்.7:7
973 இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடி இருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என்ற வாக்கிற்காக  உம்மை துதிக்கிறோம் மத் 18 :20
974 இதோ உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் மத் .28:20
975 அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமையளிப்பேன் உதவி செய்வேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா.41:10
976 என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம்  ஏசா.41:10
977 உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார் அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லோருக்கும் கொடுப்பவர் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் யாக் 1:5
978 அஞ்சாதே நான் உனக்குத் துணையாய் இருப்பேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா. 41:13
979 உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்க மாட்டான் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் யோசு 1:5
980 நான் உன்னோடு இருப்பேன் உன்னைக் கை நெகிலமாட்டேன் கை விடவும் மாட்டேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் யோசு 1:5
981 உன் வருங்காலம் வளமானதாய் இருக்கும் உன் நம்பிக்கை வீண் போகாது என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் நீதி 23:18
982 ஆண்டவரே உங்களுக்காக போரிடுவோர் நீங்கள் அமைதியாய் இருங்கள் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் வி.ப.14:14
983 யாக் கொபுக்கு எதிரான மந்திரம் ஏதுமில்லை இஸ்ரவேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் எண். 23:23
984 பால் குடிக்கும் தான் மகவைத் தாய் மறப்பாளே கருத் தான்கினவள் தான் பிள்ளை மீது இரக்கம் காட்ட திருப்பாளே இவர்கள் மறைந்திடினும் நான் உன்னை மறக்க மாட்டேன் என்ற வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம் ஏசா.49:15
985 ஆண்டவர் தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் வி.ப.14:14
986 இதோ எண் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன் உன் சுவர்கள் எப்போதும் எண் கண்முன் நிற்கின்றன என்ற வாக்கிற்காய்   உம்மை துதிக்கிறோம் ஏசா.49:16
987 அவர்கள் பசியடையார் தாகமுறார் வெப்பக் காற்றோ வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை ஏனெனில் அவர்கள் மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா. 49:10
988 நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட ஆண்டவராகிய எண் தலைவர் கற்றோரின் நாவை எனக்கு அளித்துள்ளார் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா.50:4
989 இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றிவரவும் வெள்ளியையும் பொன்னையும் அவர்களுடன் எடுத்துவரவும் தர்சிசின் வணிகக் கப்பல்கள் முன்னிலையில் நிற்கும் ஏனெனில் இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா. 60:9
990 உன் மக்கள் அனைவரையும் நேர்மையாளராய் இருப்பர் அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வார் நான் மாட்சிமையுடையுமாறு நட்டு வைத்த மரக்கிளைகள் அவர்களே என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா.59:21
991 நான் உனக்கு முன்னே சென்று குன்றுகள் சமப்படுத்துவேன் செப்புக் கதவுகளை உடைத்து இரும்புத் தாழ்பாள்களைத் தகர்ப்பேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா.45:2
992 நீர் நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன்  உம்மை துதிக்கிறோம் ஏசா.43:2
993 தியில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட்ட மாட்டாய் நெருப்பு உன் மேல் பற்றி எரியாது என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏசா.43:2
994 நீ பல்வேறு இனத்தார்க்கும் கடன் கொடுப்பாய் நீயோ கடன் வாங்கமாட்டாய்  உம்மை துதிக்கிறோம் இ.ச.28:12
995 நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும் தம் நன்மைகளின் கருவுலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் இ.ச.28:12
996 ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி கடையனாக ஆக்கமாட்டார் நீ உயர் வாயேயன்றி தாழ்ந்து போக மாட்டாய் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் இ.ச.28:12
997 நானே ஆண்டவர் என்பதையும் எனக்காக காத்திருப்போர் வெட்கமடையார் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் ஏ.சா.49:23
998 ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கைக் கொள்ளும் அப்பொழுது நீரும் உன் வீட்டாரும் மீட்படைவீர் என்னும் வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.தூ.16:31
999 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் எண் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் யோ.14:27
1000 இதோ நான் விரைவில் வருகிறேன் என்ற வாக்கிற்காய்  உம்மை துதிக்கிறோம் தி.வெ. 22:7

You may also like...

Leave a Reply

%d bloggers like this: