வாழ்க பாரதம், வளர்க இந்தியா

இன்று 66 வது குடியரசு  தின விழா கொண்டாடும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
66th-Republic-Day-2015-4
இந்தியாவைப்பற்றி நாம் வேதத்தில் எஸ்தர் 1: 1 மற்றும் எஸ்தர்8:9 ல்  இந்தியா தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் ஆட்சி செய்த மன்னர் அகாஸ்வேரு காலத்திலேயே நமது இந்தியாவைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா என்பது ஒரு நாடு, அது ஒரு தேசம். இங்கு வாழும் மக்களுக்கு அதனால்தான் இந்தியர்கள் என்ற பெயர் வந்தது. அதுவே காலப்போக்கில் சுருங்கி இந்து என்று ஆகியது. இந்து என்றாலும் இந்தியா என்றாலும் அது தேசமே! ஒரு நாடே! தவிர அது ஒரு மதம் இல்லை. வேண்டுமானால்
வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். உண்மை ஒருநாளும் தோற்காது.
வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும், ஆறுகளையும் உண்டாக்கிய தேவனாகிய கடவுள் ஆதாம் என்ற மனிதனை மண்ணின் மூலம் உருவாக்கி அவர் மூலமாகவே இந்த மனுக்குலம் முழுவதையும் படைத்தார். பிறகு நோவா காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு உலகத்தை அழிக்க நினைத்த இறைவன் அவர் நல்லவராக இருந்ததால் அவர் மூலம் ஆபிரகாம் இஸ்மவேல் என  பல ஜாதிகளும், ராஜ்ஜியங்களும் தோன்றின.
இன்று குடியரசு தின விழா கொண்டாடும் ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம் இந்தியா [இந்து ] என்பது ஒரு நாடே, “ஒன்றே குலம் ஒருவரே தேவன்” என்று அறிந்துள்ள நாம் அந்த ஒருவர் யார்? என்று தேடுங்கள். தேடி கண்டுபிடியுங்கள்.  அண்டசராசரத்தையும் உருவாக்கிய கடவுளை ஒரு மண்ணினால் உருவாக்கப்பட்ட மனிதன் கடவுளை உண்டாக்க முடியுமா? மக்களே யோசியுங்கள். சிந்தித்து செயல்படுங்கள்.
மனிதர்கள் தங்களுக்கென்று ஒரு கற்பனையை உருவாக்கிக்கொண்டு தான் செய்வதுதான் சரி என்று தன் வார்த்தை செயல்படனும், தன் பேரும், புகழும் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில்
ஒவ்வொருவரும் தன் விருப்பத்துக்கு ஒரு கடவுளை உருவாக்கி வைத்துக்கொண்டு இதுதான் கடவுள் என்று தங்களை தாமே ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றி நம்பவைத்து தன்
பெயரை நிலைநாட்டுகிறார்கள். மத்தேயு 15: 9 & எசாயா 29:13.
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு, 66 வது குடியரசு தினவிழாவை கொண்டாடும் இந்திய மக்களே கர்த்தர் உங்கள் நடுவில் பெரிய காரியத்தை செய்வார். நம்முடைய இந்தியா தேசத்துக்காக கடவுள் வைராக்கியம் கொண்டு தமது ஜனத்தை மீட்பார். மக்களே  உணர்வடையுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவரே அருள் நிறைந்தவர். இரக்கம் மிக்கவர். நீடிய பொறுமை உள்ளவர், பேரன்பு மிக்கவர். யோவேல் 2:13 .
உங்கள் யாவருக்கும் தீங்கு செய்ய அல்ல. தம் உயிரையே கொடுத்து நீங்கள் மீண்டு வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறார். உங்களை கட்டாயப்படுத்த மாட்டார். வழி இதுதான் என்று காண்பிப்பார்.  நீங்களே அதை ஆராய்ந்து உண்மை, பொய் எது என்று நன்கு உணர்ந்து
அவரை பற்றிக்கொள்ளுங்கள். அவரை அண்டிக்கொள்ளும் யாவரும் பாக்கியவான்கள், பாக்கியவதிகள். அவரே உங்கள் கடவுள். திருவெளிப்பாடு 21:3 .
இந்தியா தேசம் இயேசுவுக்காய் மாறட்டும். பனி பூமியில் மெதுவாய் இறங்கி புல்வெளியை நனைப்பதுபோல் அவரின் வாக்கு உங்கள் உள்ளங்களில் பதியட்டும். கண்டுக்கொள்ளுங்கள்.பரலோக ராஜ்ஜியத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். எல்லாம் மகிமை, மாட்சி, புகழ் உம் ஒருவருக்கே . ஆமென்,அல்லேலூயா!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: