Answers by GOD (Security)

  • Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the LORD for ever. [Psalms 23:6]
  • cast thy burden upon the LORD, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved. [Psalms 55:22]
  • He that dwelleth in the secret place of the most High shall abide under the shadow of the Almighty.  I will say of the LORD, He is my refuge and my fortress: my God; in him will I trust. Surely he shall deliver thee from the snare of the fowler, and from the noisome pestilence.  He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler.  Thou shalt not be afraid for the terror by night; nor for the arrow that flieth by day;  Nor for the pestilence that walketh in darkness; nor for the destruction that wasteth at noonday.  A thousand shall fall at thy side, and ten thousand at thy right hand; but it shall not come nigh thee.  Only with thine eyes shalt thou behold and see the reward of the wicked.  Because thou hast made the LORD, which is my refuge, even the most High, thy habitation;  There shall no evil befall thee, neither shall any plague come nigh thy dwelling.  For he shall give his angels charge over thee, to keep thee in all thy ways.  They shall bear thee up in their hands, lest thou dash thy foot against a stone. With long life will I satisfy him, and shew him my salvation. [Psalms 91: 1-12,16]
  •  The LORD will perfect that which concerneth me: thy mercy, O LORD, endureth for ever: forsake not the works of thine own hands. [Psalms 138:8]
  • Commit thy works unto the LORD, and thy thoughts shall be established.  [Proverbs 16:3]
  • Train up a child in the way he should go: and when he is old, he will not depart from it. [Proverbs 22:6]
  • But thus saith the LORD, Even the captives of the mighty shall be taken away, and the prey of the terrible shall be delivered: for I will contend with him that contendeth with thee, and I will save thy children.  [Isaiah 49:25]
  • And all thy children shall be taught of the LORD; and great shall be the peace of thy children. [Isaiah 54:13]
  • Is not this the fast that I have chosen? to loose the bands of wickedness, to undo the heavy burdens, and to let the oppressed go free, and that ye break every yoke? [Isaiah 58:6]
  • And I will give unto thee the keys of the kingdom of heaven: and whatsoever thou shalt bind on earth shall be bound in heaven: and whatsoever thou shalt loose on earth shall be loosed in heaven. [Matthew 16:19]
  • Or else how can one enter into a strong man’s house, and spoil his goods, except he first bind the strong man? and then he will spoil his house. [Matthew 12:29]
  •  Take heed that ye despise not one of these little ones; for I say unto you, That in heaven their angels do always behold the face of my Father which is in heaven. [Matthew 18:10]
  • And Jesus increased in wisdom and stature, and in favour with God and man. [Luke 2:52]
  • Behold, I give unto you power to tread on serpents and scorpions, and over all the power of the enemy: and nothing shall by any means hurt you. [Luke 10:19]
  • My sheep hear my voice, and I know them, and they follow me: [John 10:27]
  • For the weapons of our warfare are not carnal, but mighty through God to the pulling down of strong holds; [2 Corinthians 10:4]
  • For we wrestle not against flesh and blood, but against principalities, against powers, against the rulers of the darkness of this world, against spiritual wickedness in high places.  Wherefore take unto you the whole armour of God, that ye may be able to withstand in the evil day, and having done all, to stand. [Ephesians 6:12-13]
  • Being confident of this very thing, that he which hath begun a good work in you will perform it until the day of Jesus Christ: [Philippians 1:6]
  • But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus. [Philippians 4:19]
  • Now unto him that is able to keep you from falling, and to present you faultless before the presence of his glory with exceeding joy,  To the only wise God our Saviour, be glory and majesty, dominion and power, both now and ever. Amen. [Jude 1:24]

 

  • உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.  திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 23:6
  • ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 55:22
  • 1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, ‘நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்’ என்று உரைப்பார். 3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். 4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். 5 இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். 6 இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். 7 உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது. 8 பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்; உம் கண்ணாலேயே நீர் காண்பீர். 9 ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்; உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர். 10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். 12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.16 நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.’  திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 91: 1-12,16
  • நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.  திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 138: 8
  • உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை: அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.  நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 16:3
  • நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு: முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.  நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 22:6
  • ஆண்டவர் கூறுவது இதுவே: சிறைப்பட்டோர் வலியோனிடம் இருந்து விடுவிக்கப்படுவர்: கொள்ளைப்பொருள் கொடியவன் கையினின்று மீட்கப்படும்: உன்னை எதிர்த்துப் போராடுபவருடன் நானும் போராடுவேன்: உன் பிள்ளைகளை விடுவிப்பேன். எசாயா 49:25
  • உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்: உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். எசாயா 54:13
  • கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பவதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!  எசாயா 58:6

  • விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ‘ என்றார். மத்தேயு 16:19
  • முதலில் வலியவரைக் கட்டினாலன்றி எப்படி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களைக் கொள்ளையிட முடியும்? அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். மத்தேயு 12:29
  • இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.  மத்தேயு 18:10
  • இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். லூக்கா 2:52
  • பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. லூக்கா 10:19
  • என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. யோவான் (அருளப்பர்) 10:27
  • எங்கள் போராட்டத்தில் நாங்கள் பயன்படுத்தும் கருவிகள் உலகு சார்ந்தவை அல்ல: மாறாக அவை கடவுளின் வல்லமையால் அரண்களைத் தகர்த்தெறியக் கூடியவை. 2கொரிந்தியர் 10:4
  • ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.13 எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமைபெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.  எபேசியர் 6:12-13
  • உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன். பிலிப்பியர் 1:6
  • என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். பிலிப்பியர் 4:19
  • 24 வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு,25 நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்!  யூதா 1:24-25

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.