Author: Jesus - My Great Master

விலகிச்சென்றார்…

இன்றைய நற்செய்தியில் இயேசு அருமையான ஓர் உவமை வாயிலாக, வாழ்வின் முக்கியமான செய்தியைத்தருகிறார். நல்ல சமாரியன் உவமையில் வரக்கூடிய குருவும், லேவியரும் “விலகிச்சென்றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டுபேருமே மறுபக்கமாய் விலகிச்செல்கிறார்கள். எதற்காக விலகிச்சென்றார்கள்? ஒன்று தீட்டுப்பட்டுவிடும் என்பதற்காக. இரண்டாவது, தங்களுக்கு இருக்கக்கூடிய பணியைச் செய்ய வேண்டும் என்பதற்காக. இரண்டுமே தவறுதான். இரண்டு பேருமே, கடவுளின் இறையருளை நிறைவாக, உடனடியாகப் பெற்றுத்தரும் வாய்ப்பை இழந்து சென்று விட்டார்கள் என்பதுதான் உண்மை. விலகிச்செல்வது தவறல்ல. தீய நண்பர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். தவறான பழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும். கெட்ட எண்ணங்களிலிருந்து, கெட்ட வார்த்தைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால், இவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. எவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டுமோ, அவற்றிலிருந்து நாம் விலகியிருப்பதில்லை. நல்ல செயல்களைச் செய்வதிலிருந்து, நல்லவற்றைப் பார்ப்பதிலிருந்து, நல்லவற்றைக் கேட்பதிலிருந்து நாம் விலகியிருக்கக்கூடாது. அவற்றோடு இருக்க வேண்டும். ஆனால், அவற்றிலிருந்துதான் நாம் விலகியிருக்கிறோம். அவற்றிலிருந்து நாம் விலகியிருக்கிறபோது, கடவுளின் அருளை நாம் இழந்துவிடுகிறோம். நமது...

WAITING FOR 600 YEARS

“Since I am about to be taken to my kindred, bury me with my fathers in the cave that lies in the field…Abraham bought from Ephron the Hittite for a burial ground. There Abraham and his wife Sarah are buried, and so are Isaac and his wife Rebekah, and there, too, I buried Leah.” —Genesis 49:29-31 Abraham waited about fifty years to enter the promised land. He got there “over the dead body” of his wife, as he bought a field in the promised land for her burial (see Gn 23:4ff). He was buried there too. At his death, he...

ஆண்டவர் தம் செயல்களை மக்கள் அறியச்செய்யுங்கள்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7 இன்றைய திருப்பாடல், கிறிஸ்தவனின் முக்கியமான கடமையை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதுதான் ”அறியச்செய்வது”. “அறியச்செய்வது“ என்றால் என்ன? நாம் அறிந்த உண்மையை மற்றவர்களுக்கு அறிவிப்பது, தெரியப்படுத்துவது. எதனை அறியச்செய்ய வேண்டும்? என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இறைவன் செய்திருக்கிற இரக்கச்செயல்களை, அற்புதங்களை, வல்ல செயல்களை மற்றவர்கள் அறியச்செய்யுங்கள் என்பது, ஆசிரியரின் வேண்டுகோளாக இருக்கிறது. இந்த அழைப்பு யாருக்கு விடுக்கப்படுகிறது? கடவுளை அறிந்தவர்கள் அனைவருமே இந்த நற்செய்திப்பணியில் ஈடுபட அழைப்புவிடுக்கப்படுகிறார்கள். இன்றைக்கு நாம் வாழும் உலகில், மக்களின் அறிவை மழுங்கடிப்பதிலும், மக்கள் எதையும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதிலும் நம்மை ஆளக்கூடியவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி மக்கள் விழிப்புணர்வு அடைகிறபோது, அதனை திசை திருப்ப, மக்களின் நாட்டுப்பற்றை தங்களுக்குச் சாதகமாக்கி, பிரச்சனையை திசைதிருப்பி விடுகிறார்கள். தங்களது பாக்கெட்டை நிரப்புவதற்காக, மக்களை காவு கொடுக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு...

A SURE THING AND AN UNSURE THING

“You will be hated by all on account of Me. But whoever holds out till the end will escape death.” —Matthew 10:22 “Anyone who wants to live a godly life in Christ Jesus can expect to be persecuted” (2 Tm 3:12). The Lord has clearly revealed that we will be persecuted if we are trying to live the Christian life (see Mt 5:11). For us, being persecuted is not a possibility but a certainty. The Lord has sent us as sheep among wolves (Mt 10:16), and, no matter how clever and innocent we may be, we will be persecuted. We...

உன் உள்ளத்து விருப்பங்களை ஆண்டவர் நிறைவேற்றுவார்

திருப்பாடல் 37: 3 – 4, 18 – 19, 27 – 28, 39 – 40 கடவுளிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற விரும்பும் ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய திருப்பாடல் சிறந்த சான்றாக அமைகிறது. இது வெறும் வார்த்தையாக எழுதப்பட்டது அல்ல. தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு எழுதப்பட்ட அமுதமொழிகள். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள், வெகு விரைவில் கடவுள் மீதான தங்களது நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். அதற்கு காரணம், தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்கிற அற்ப எண்ணம். தான். கடவுள் மீது வெறுப்பு கொள்வதற்கு பதிலாக, நம்முடைய வாழ்வை நாம் சற்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, முதலில் அவரை நம்ப வேண்டும். அதைத்தான் இன்றைய முதல் அனுபல்லவி நமக்கு அறிவுறுத்துகிறது, ”ஆண்டவரை நம்பு”. இந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கையாக இல்லாமல், இறைவனை முழுமையாக அனுபவிக்கக்கூடிய உறுதி...

%d bloggers like this: