உண்மையாய் இருப்போம்

அன்பான இறைமக்களே!! இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் பற்பல வேலைகளில் ஈடுபட்டு நம் பணிகளை செய்கிறோம். அந்த பணியில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், மனிதரை சந்தோஷப்படுத்த அவனுக்கு பிரியமாய் நடக்கிறோமோ?அல்லது கடவுளை சந்தோஷப்படுத்த
அவருக்கு பிரியமாய் வாழ்கிறோமா? என்று நம் உள்ளத்தை நாம்  ஆராய்ந்து பார்ப்போம்..
நாம் கடவுளுக்கு பயந்து உண்மையாய் இருந்தால் மனிதர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார். ஆண்டவருக்கு உண்மையாய் இருந்தால் அவரிடம் நமக்கு திரளான
மீட்பும், அடைக்கலமும் கிடைக்கும். நீதிமொழிகள் 29:25 .
உண்மைக்கு எவருடைய தயவும்,ஆதரவும்,பெரும்பான்மையும்,
தேவையில்லை.உண்மை தனித்தே நின்று வெற்றிபெறும்.முதலில்
தொற்பதுப்போல் தோன்றினாலும் இறுதியிலே உண்மைதான்
வெற்றிபெறும்.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.ஆனால் மறு
படியும் தர்மமே வெல்லும்.அனுபவம் தரும் பாடம் இதுதானே.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் உவமை மூலம் மத்தேயு 25:21 மற்றும் 23 ஆகிய வசனங்களில் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்.என்று
நமக்கு விளக்கியுள்ளார். லூக்கா 16 : 10 ; லூக்கா 19 :17 லும் காணலாம்.
ஆகையால் அன்பார்ந்தவர்களே சிறிய வேலை பார்க்கிறேனே எனக்கு பெரிய வேலை இல்லையே என்று மனம் சோர்ந்து போகாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாய் இருங்கள். கடவுள் உங்களை அநேகத்தின் பேரில் அதிகாரி ஆக்குவார்.
ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே! நாங்கள் பெலவீன பாண்டங்களாய் இருப்பதால் எங்கள் பெலவீனத்தில் உம்முடைய பெலன் பூரனமாய் விளங்கும்படி செய்து நீர் விரும்பும் பாத்திரமாக எல்லாவற்றிலும்
உண்மையுள்ளவர்களாக வாழ எங்களுக்கு அருள் பொழியும். உம்மைப்போல் நாங்களும் சுயநலம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து உமது பெயரை மகிமை படுத்த உதவி செய்யும். துதி, கனம் மகிமை
யாவும் உமக்கே. ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: