Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாமுவேல் - இரண்டாம் நூல்

அதிகாரம் 3

யூதா, இஸ்ரயேலிடையே போர் ..............தொடர்ச்சி
1 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது: தாவீது வலிமை பெற்றோர்: சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தவர்.

தாவீதின் மக்கள்
2 எபிரோனில் தாவீதுக்கு புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.3 கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன். கெசூர் மன்னனான தால்மாயின் மகன் மாக்கவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன்.4 அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்: அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஐந்தாம் மகன்:5 தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ராயம் ஆறாம் மகன்: இவர்கள் தாவீதுக்க எப்ரோனில் பிறந்தவர்கள்.

அப்னேர் தாவீதுடன் சேர்ந்து கொள்ளுதல்
6 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் பூசல் நிலவிய போது, சவுலின் வீட்டில் அப்னேர் தன்னையும் வலிப்படுத்திக் கொண்டான்.7 அய்யாவின் மகனான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ என்ன உறவு கொண்டாய்? என்று கேட்டான்.8 இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. நான் என்ன யூதாவுக்கு வாலாட்டும் நாயா? என் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக் குறி9 தாவீதுக்கு கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே சவுலின் வீட்டிலிருந்து என்னை மாற்றச் செய்து, தாணிலிருந்து பெயேர்! செபா வரை இஸ்ரயேல் மீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால்,10 கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமைத்தனமாய் தண்டனையை அளிப்பாராக! என்று அப்னேர் கூறினான்.11 இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதில் மறுமொழி எதுவும் பேசவில்லை.12 பிறகு அப்னேர் தன் சார்பாக தாவீதிடம் தூதனுப்பி நாடு யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். அனைத்து இஸ்ரயேலையும் உம்மிடம் கொண்டுவர, எனது கை உம்மோடு இருக்கட்டும் என்று கூறினான்.13 தாவீது நல்லது உன்னோடு நான் உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால் உன்னிடமிருந்து நான் ஒன்று கேட்கிறேன்: அதாவது நீ என்னுடன் வரும் போது சவுலின் மகள் மீக்காலை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே என்று மறுமொழி கூறினான்.14 அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மீக்காலை எனக்குக் கொடு என்ற கேட்டார்.15 இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான்.16 அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் திரும்பிச் செல் என்றான்: அவனும் திரும்பிச் சென்றான்.17 அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்: தாவீது உங்கள் மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக் கொண்டிருந்தீர்கள்.18 இப்போது அதை நிலை நாட்டுங்கள்: ஏனெனில் ஆண்டவர் தாவீதிடம் என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலை பெலிஸ்தியரிடமிருந்து அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.19 அப்னேர் பென்யமினரோடு தனியாகப் பேசியப்பின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரளேலுக்கும் பென்யமின் வீட்டாருக்கும் நல்ல தெனப்பட்ட அனைத்தையும் திடம் எடுத்துக் கூறினான்.20 ஆப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவரோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார்.21 பிறகு அப்னேர் தாவீதிடம், நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்கு முன் ஒன்று திரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்ளட்டும், நீரும் உம் விருப்படி ஆட்சி செய்யலாம். என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றா

அப்னேர் கொலை செய்யப்படல்
22 அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்து திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டுவந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே வழியனுப்ப்பட்டு பாதுகாப்புடன் சென்றுவிட்டான்.23 யோவாபும் படைவீரர் அனைவரும் வந்தபோது, நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான் என்று யோவாபிடம் கூறப்பட்டது.24 யோவாபு அரசனிடம் சென்று, நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உன்னிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவரை போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!25 நேரின் மகன் அப்னேர் உனக்கு தெரியும். உமது போக்குவரத்தையும் நீர் செய்வது அனைத்தையும் அறிந்து கொண்டு உம்மை ஏமாற்றவே அவன் வந்தான் என்றான்.26 யோவாபு தாவீதைவிட்டுச் சென்று அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருவிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.27 அப்னேர் எபிரோனுக்கு திரும்பி வந்ததும் யோவாபு அவனிடம் தனிமையில் பேசுவதற்கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அவன் வாயில் குத்த, அவன் இறந்தான்.28 பிறகு தாவீது அதை கேள்வியுற்ற போது, நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின் மட்டில் நானும் என் அரசர் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்.29 யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார் மீதும் அது விழட்டும். இரத்த கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்கள். என்றார்.30 தங்கள் சகோதரர் அசாவேலைக் கிபியோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றத்தற்காக யோவாபும் அவன் சகோதரன் அவிசாயும் அவனைக் கொன்றார்கள்.

அப்னேர் அடக்கம் செய்யப்படல்
31 உங்கள் உடைகளை கிழித்துக் கொள்ளுங்கள். சாக்கு உடைகளை அணியுங்கள்: அப்னேருக்காகப் புலம்புங்கள் என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீது நடந்து சென்றார்.32 அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே33 அரசர் இவ்வாறு கூறி அழுதார்: மூடன் மடிவதுபோல் அப்னேர் மடியவேண்டுமா?34 கைகள் விலங்கிடப்படவில்லை: உன் பாதங்கள் கட்டப்படவில்லை: தீயோர் முன் வீழ்பவன் போல், நீயும் வீழ்ந்தாயே! மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காக புலம்பினார்கள்.35 பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து பகலாக இருக்கும் போதே உண்ணும் படி அவரைத் தூண்டினர். கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள் தக்கவாறு அதற்கு மேலும் என்னைத்தண்டிப்பாராக! என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார்கள்.36 மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனபட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்களுக்கு நல்லதெனப்பட்டது.37 நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்கு பங்கில்லை, என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் தெரிய வந்துள்ளது.38 மேலும் அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ?39 நான் அரசனாய் திருப்பொழிவு செய்யபட்டும் இன்று வலுவிழந்தனவாய் இருக்கிறேன்! செரூபாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர்! தீங்கிழைப்பவனுக்கு அவன் தீங்கிற்கு ஏற்ப ஆண்டவர் தண்டனை வழங்கட்டும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!