Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

செப்பனியா

அதிகாரம் 2

மனந்திரும்ப அழைப்பு
1 பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள். 2 பதரைப்போல் நீங்கள் தூற்றப்படுமுன்னே, ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே, 3 நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.

வேற்றினத்தாரின் அழிவு
4 காசா குடியற்றுப்போகும்; அஸ்கலோன் பாழடைந்துபோகும்; அஸ்தோது நண்பகலில் விரட்டியடிக்கப்படும்; எக்ரோன் வேரொடு பிடுங்கியெறியப்படும். 5 கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கெரேத்தியரே! உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் வாக்கு உங்களுக்கு எதிராய் உள்ளது; பெலிஸ்தியரின் நாடே! கானானே! எவனும் குடியிராதபடி நான் உன்னை அழித்து விடுவேன். 6 இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே ஏற்றதாகும். 7 அந்தக் கடற்கரை யூதாவின் குடும்பத்தவருள் எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்; அங்கே அவர்கள் தங்கள் ஆடுகளை மேய்த்து, மாலையில் அஸ்கலோன் வீடுகளில் படுத்திருப்பார்கள்; ஏனெனில் அவாகளுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது அக்கறை கொண்டு, முன்னைய நன்னிலைக்கு அவர்களை உயர்த்துவார். 2:4-7 <=>
எசா 14:29-31; எரே 47:1-7;
எசே 25:15-17; யோவே 3:4-8;
ஆமோ 1:6-8; செக் 9:5-7
8 மோவாபின் பழிப்புரைகளையும் அம்மோனியரின் வசைமொழிகளையும் நான் கேட்டேன்; அவர்கள் என் மக்களை இழித்துரைத்து, அவர்களின் நாட்டு எல்லைகளைக் குறித்து வீம்பு பேசியதையும் நான் கேட்டேன். 9 ஆதலால், படைகளின் ஆண்டவரும், இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்; மோவாபு சோதோமைப்போல் ஆகும்; அம்மோனியர் கொமோராவைப்போல் ஆவர்; இது உறுதி. இந்நாடுகள் காஞ்சொறி படரும் காடாகவும், உப்புப் பள்ளம் நிறைந்த பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும். என் மக்களில் எஞ்சியோர் அவர்களைக் கொள்ளையடிப்பர்; என் மக்களுள் தப்பியோர் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர். தொநூ 19:24 10 அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே; ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் பழித்துரைத்தார்கள்; வீம்பு பேசினார்கள். 11 ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்; நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் குன்றிப்போகச் செய்வார். வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம் தீவுகளில் இருந்து கொண்டு அவரையே வணங்குவர். 2:8-11 <=>
எசா 15:1-16:14; 25:10-12;
எரே 48:1-49:6; ஆமோ1:13-15;
எசே21:28-32; 25:1-11
12 எத்தியோப்பியரே! நீங்களும் எனது வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள். எசா 18:1-7 13 வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்; நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார். 14 அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்; தூண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்; பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்; நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்; கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும். 15 "நான் ஒப்புயர்வு அற்றவன்" என்ற கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ? இப்பொழுது அது காட்டு விலங்குகளின் குகையாகி எவ்வளவு பாழாய்ப் போயிற்று! அதைக் கடந்துகோகும் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான். 2:13-15 <=>
எசா 10:5-34; 14:24-27;
நாகூ 1:1-3:19



திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!