Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாமுவேல் - இரண்டாம் நூல்

முன்னுரை

'1சாமுவேல்' என்னும் நூலின் தொடர்ச்சியான '2 சாமுவேல்', அரசர் தாவீதின் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. முதல் நான்கு அதிகாரங்கள், தெற்கே யூதாவின் மேல் அவர் ஆட்சி புரிந்ததையும், பின்னைய அதிகாரங்கள் வட பகுதியான இஸ்ரயேல் உட்பட நாடு முழுவதன் மேலும் அவர் ஆட்சி புரிந்ததையும் விரித்துரைக்கின்றன. தாவீது தம் அரசை விரிவுபடுத்தவும், தம் நிலையை உறுதிப்படுத்தவும் நாட்டிலுள்ள எதிரிகளோடும் வேற்றரசுகளோடும் போராடியதை இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

தாவீது ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததோடு, தம் மக்களின் முழு நம்பிக்கையும் பெற்றிருந்தார் இருப்பினும் சில நேரங்களில் தம் தவறான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எந்தப் பாவத்தையும் செய்யத் தயங்காதவராய் இருந்திருக்கிறார். ஆயினும், அவருடைய பாவங்களை இறைவாக்கினர் நாத்தான் அவருக்குச் சுட்டிக் காட்டியது போது, அவர் அவற்றை அறிக்கையிட்டுக் கடவுள் அளித்த தண்டனையை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்.

தாவீதின் வாழ்க்கையும் அவர் தம் வெற்றிகளும் இஸ்ரயேல் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன. எனவே தான் பிற்காலத்தில் நாடு தொல்லைக்குட்பட்ட நேரங்களில், அவரை போல் தங்களுக்காகப் போராடக் கூடிய, 'தாவீதின் மகன்' தங்களுக்கு அரசராய் மீண்டும் வர வேண்டுமென்று அவர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

நூலின் பிரிவுகள்
  1. யூதாவின் மீது தாவீதின் ஆட்சி 1:1 - 4:12
  2. அனைத்து இஸ்ரயேலின் மீதும் தாவீதின் ஆட்சி 5:1 - 24:25
      அ) முற்பகுதி 5:1 - 10:19
      ஆ) தாவீதும் பத்சேபாவும் 11:1 - 12:25
      இ) துன்பங்களும் தொல்லைகளும் 12:26 - 20:26
      ஈ) பிற்பகுதி 21:1 - 24:25


அதிகாரம் 1

சவுலின் இறப்பைத் தாவீது அறிதல்
1 சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்து திரும்புகையில் தாவீது சிக்லாவில் இரண்டு நாள் தங்கினார். 2 மூன்றாம் நாள், சவுலின் பாசறையிலிருந்து கிழிந்த ஆடைகளோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.3 நீ எங்கிருந்து வருகிறாய்? என்று தாவீது அவனை வினவ, நான் இஸ்ரயேல் பாசறையிலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று அவன் பதில் கூறினான்.4 என்ன நடந்தது? என்னிடம் சொல், என்று தாவீது கேட்க, அவன் வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்: அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்: சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துமடிந்துவிட்டனர் என்று கூறினான்.5 சவுலும் அவனுடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்? என்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.6 அதற்கு அந்த அளைஞன் நான், தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின் மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.7 அவர் பின்னால் திரும்பிய போது என்னை பார்த்து கூப்பிட்டார், இதோ இருக்கிறேன் என்று நான் கூறினேன்.8 யார் நீ? என்று அவர் என்னை வினவ, நான் ஓர் அமலேக்கியன் என்று பதிலளித்தான்.9 என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில் நான் மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால் என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுயிருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார்.10 நான் அவர் மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில் விழுந்த பின்பு அவர் பிழைக்கமாட்டார் என நான் அறிவேன். அவர் தலையிலிருந்த மகுடத்தையும் பையிலிருந்த காப்பையும் எடுத்துக் கொண்டு, உம்மிடம் வந்துள்ளேன் என்று கூறினார்.11 தாவீது தம் ஆடைகளை பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.12 சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்லயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்க்ள.13 தாவீது தமக்கு செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், நீ எங்கிருந்து வருகிறாய்? என்று மீண்டும் வினவ, நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன் என்று மறுமொழிக் கூறினான்.14 ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்? என்று தாவீது அவனைக் கேட்டார்.15 பின்பு தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டுபோ, அவனை வெட்டு என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.16 இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன் என்ற உன் வாயே எனக்கு சான்று சொல்லிவிட்டது என்று தாவீது அவனை நோக்கி கூறினார்.

சவுல், யோனத்தான் ஆகியோருக்காக தாவீதின் துயரம்
17 பிறகு தாவீது சவுலையும் அவருடைய மகள் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்ற பாடினார்.18 யூதாவின் மக்களுக்கும் இது கற்ப்பிக்கப்பட வேண்டும் என்ற யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள வில்லலின் பாடல் :19 இஸ்ரயேல்! உனது மாட்சி உனது மலைகளிலே மாண்டு கிடக்கிறதா! மாவீரர் எவ்வாறு மடிந்தார்!20 காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்: அஸ்கலோன் பகுதிகளில் இதை அறிவிக்கப்பட வேண்டாம்: ஏனெனில், பெலிஸ்தியரின் மனைவிகள் அகமகிழக்கூடாது: விருத்தசேதனமற்றோரின் புதல்வியர் ஆர்ப்பரிக்கக்கூடாது.21 கில்போவா மலைகளே! பனியோ மழையோ உம்மீது பொழியாதிருப்பதாக! வயல்கள் முதற்கனிகளை தராதிருப்பனவாக! ஏனெனில் வீரர்கள் கேடயங்கள் தீட்டப்பட்டனவே! சவுலின் கேடயங்கள் எண்ணெயால் மெருகு பெறாதே!22 வீழ்த்தப்பட்டோரின் இரத்தத்தினின்றும் வீரர்களின் கொழுப்பினின்றும் யோனத்தானின் அம்பு பின் வாங்கியதும் இல்லை!23 சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருள்வுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வார்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!24 இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே!25 போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்த்தபட்டனர்!உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!26 சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ!27 மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழித்தன!


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!