பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

A Prayer for Birthday

HappyBDay-MyGreatMaster-blue

தாயின் வயிற்றில் இருந்து பூமிக்கு வந்து, ஒவ்வொரு நாளையும் மாதங்களாக்கி, மாதங்களை வருஷமாக்கி, வருஷத்தின் முடிவில் நீங்கள் பிறந்த இந்நன்னாளில் விசேஷமாக Jesus – MyGreatMaster.com  Team உங்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது.

நீ பிறந்த திட்டத்தை எண்ணிப்பார் – அது
நீ செய்யும் பணியை உனக்கு போதிக்கும்.

நீ உன் எண்ணங்களை நிறுத்துப்பார் – அது
நீ தராசில் சமமாய் இருக்கிறாயா?என்பதை சொல்லும்.

நீ உன் வாழ்க்கையை வாழ்ந்துப்பார் – அது
கடல் அலைகளின் சீற்றத்தை தெரியப்படுத்தும்.

நீ உன் உழைப்பை நினைத்துப்பார் – அது
நீ கடந்து வந்த பாதையை உனக்கு தெரிவிக்கும்.

நீ உன் கோபத்தை விட்டுப்பார் – அது
உன்னை எந்த தீங்கும் அணுகாமல் பாதுகாக்கும்.

நீ உன்னை தாழ்த்திப்பார் – அது
நீ பிறரால் உயர்த்தப்பட உதவும்.

நீ பிறரை ஆறுதல் படுத்திப்பார் – அது
நீ ஆறுதல் பெற வழி வகுக்கும்.

நீ அன்பை ருசித்துப்பார் – அது
நீ அளவிடமுடியாத சந்தோஷத்தினால் உன்னை நிரப்பும்.

நீ பாசத்தை பகிர்ந்துப்பார் – அது
உன் இருதயத்தை ஊடுருவிச் செல்லும்.

நீ அறிவை அறிந்துப்பார் – அது
உன்னை உயரத்தில் நிறுத்தும்.

நீ பிறர்க்கு கொடுத்துப்பார் – அது
உன்னை மலை உச்சிக்கு கொண்டு செல்லும்.

நீ கவலையை தொலைத்துப்பார் – அது
உன்னை ஆனந்தத்தில் அசைவாட்டும்.

சகோதரரே!!! சகோதரிகளே!!! வாலிப நண்பர்களே!!!

நீங்கள் உங்கள் எதிர்க்காலத்தை கணக்குபோடாதேயுங்கள்.
சமயத்தில் அது பொய் கணக்காக மாறிவிடும்.

வருங்காரியங்கள் இறைவனுடையது, அவர் கரத்தில்
உன்னை அர்ப்பணித்தால் உன் வழியெல்லாம்–
வாசனை மலர்கள் தென்றலாய் வீசும்.

எனவே நாளை தினத்தை எண்ணாதே:
ஒருநாள் பிறப்பதை நீ அறியாயே!

ஆகையால் அநுபவத்தின் வழியாக கடந்துச் செல்லுங்கள்.
அநுபவித்து வாழ்ந்து சுகமுடன் விளங்குங்கள்.

இருளில் தோன்றும் விளக்கைப்போலவும்,
நண்பகல் வரை அதிகதிகமாய் பிரகாசிக்கும் சூரியனைப்போலவும்,
உங்கள் சுகவாழ்வில் சுகமாய் துளிர்த்து, மகிழ்ந்து வாழ்ந்திருங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் உயர்வு எனும் இலக்கை நோக்கி உங்கள் பயணம் உண்மை பாதையில் இனிதாக தொடர என்றென்றும் எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

புகழ் இறைவனுக்கே!!!!!!!!!!!! உரித்தாகட்டும்!!!!!!!!!!!!!!!!

(Written by – Sara, MyGreatMaster.com)

A Prayer for Birthday

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: