† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

அவர் ஒரு ‘மாதிரி’

மத் 6 : 7 -15 தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (ஈதல், செபித்தல், நோன்பிருத்தல்) ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகிறது. ஆண்டவர் இயேசுவே நம் அனைவருக்கும் அனைத்திருக்குமான மாதிரியாக இருக்கின்றார் என்பதை அவர் கற்றுக் கொடுத்த செபத்தில் இருந்தும் நம்மால் கற்றுக் கொள்ள முடிகிறது. சில பிற சபையினர் இச்செபத்தைத் தினமும் எவ்வேளையும் சொல்லும் நம் தாய் திருஅவையினரைப் பார்த்து கேளி செய்வதுண்டு, ஏன் இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்களென்று? இவர்கள் கேளியையும் கிண்டலையும் பார்த்து நாம் பின் வாங்கிட முடியாது. இவர்கள் இயேசுவையும் இறைவார்த்தையையும் கிண்டல் செய்கிறார்கள் என்பதே உண்மை. இயேசு கற்பித்த இச்செபமே தலை சிறந்த செபமாக இன்று உலகின் அதிக மொழிகளில் சொல்லப்படுகின்ற ஓர் முதன்மைச் செபமாகும். இதன் முதல்பகுதி, இறைவனின் இறையாட்சியை அதாவது இயேசு கண்ட கனவினை நோக்கி, இந்த உலகு உருண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது. இதன் இரண்டாம் பகுதி...

POOR PLANNING

“I assure you, as often as you did it for one of My least brothers, you did it for Me.” –Matthew 25:40 The Lord says that you shall not “stand by idly when your neighbor’s life is at stake” (Lv 19:16). The Lord tells us: “I assure you, as often as you did or did not provide for the needs of the least of your brothers and sisters, you did or did not do it for Me” (see Mt 25:40, 45). The Lord expects us to recognize the Lazaruses at our doors (Lk 16:19ff) and “love in deed and in...

இயேசுவின் சாயல்

(மத்தேயு – 25 : 31-46) இன்றைய நற்செய்தி பல்வேறு கருத்துகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், நான் உங்களோடு இரண்டு விடயங்களை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன். காரணம் இந்த தவக்காலம் நம்மிடையே இவ்விரண்டு மனமாற்றத்தை அழுத்தி எடுத்துரைக்கின்றது. 1. ‘எவரோ’ என்பதைவிட ‘இயேசுவே’ என்ற மனநிலை: நாம் ஒருவருக்கு உதவ முன்வந்தால் கூட நம்மில் சில சந்தேகங்கள் எழும். இவருக்குக் கண்டிப்பாக உதவ வேண்டுமா? இவர் உண்மையிலேயே துன்பத்தில் இருக்கிறாரா? இல்லை நம்மிடம் வந்து நடிக்கிறாரா? என்பது போன்ற பல கேள்விகள் எழும். இதனால் நாம் பலமுறை உதவி செய்ய முடிந்தும், உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தும் உதவி செய்யாமல் விட்டிருப்போம். ஆனால் இந்த நேரங்களில் நாம் வேறு எதையும் பார்க்காமல், சிந்திக்காமல், நமது உதவிக்காகத் தேவையோடு காத்திருப்பவரை ‘எவரோ’ என்று பார்க்காமல் அவரில் இயேசுவை மட்டும் கண்டோமெனில் உடனடியாக உதவி செய்ய முடியும். 2. ‘எப்பொழுது’ என்பதைவிட ‘இப்பொழுதே’ என்ற...

LEAD US NOT INTO TEMPTATION

“The tempter approached…” –Matthew 4:3 God does not tempt (Jas 1:13). Rather, the tug and lure of our own sinful nature is what leads us to temptation (Jas 4:1ff; see also Heb 4:15; 2:18). Temptations often occur during Lent. Temptation can strengthen us, much like a drill sergeant toughens the troops for battle. We might wonder where God is during our temptations. The Lord is “with us” while we are tempted (Mt 1:23; 28:20). The devil wants us to forget that God loves us. But Satan is a liar (Jn 8:44). He lies about God’s character (see Gn 3:4-5). Jesus...

ஆண்டவரே இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்

திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 10 – 11, 12, 15 இரக்கத்தின் பரிமாணங்களாக நாம் பலவற்றைப் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் பரிமாணங்களும் முக்கியமான ஒன்று மன்னிப்பு. அந்த மன்னிப்பு பற்றிதான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொதுவாக, நாம் கடவுளிடத்தில் செபிக்க வருகிறபோது, நமது மனநிலை எப்படிப்பட்ட மனநிலையாக இருக்கிறது? ஒருபோதும் மன்னிப்பிற்காக நாம் செபிப்பது கிடையாது. கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்காக மன்றாடுவது கிடையாது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் கடவுளிடம் செபிக்கிறோம், கடவுளைப் புகழ்கிறோம். ஆக, தேவையை நிறைவேற்றுவது தான், நமது செபத்தின் மையக்கருத்தாக இருக்கிறது. ஆனால், இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் நாம் செபிக்க வேண்டும். அதனையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. இந்த திருப்பாடலை “மன்னிப்பின் பாடல்“ என்று நாம் சொல்லலாம். கடவுளின் மன்னிப்பிற்காக, கடவுளின் அருளுக்காக, தாவீது கதறிய பாடல் தான் இந்த திருப்பாடல். இந்த...