† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்

திருப்பாடல் 22: 7 – 8, 16 – 17a, 18 – 19, 22 – 23 ”உன்னை எப்படியெல்லாம் நம்பியிருந்தேன். இப்படி என்னை கைவிட்டு விட்டாயே?” என்று நம்முடைய நெருங்கிய நண்பர்கள் நமக்கு ஏதாவது தீங்கு செய்கிறபோதோ, உதவி கேட்டு மறுக்கிறபோதோ, நாம் சொல்வதுண்டு. அது நாம் அந்த நண்பரிடத்தில் வைத்திருக்கிற தீராத நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கை சிதைக்கப்படுகிறபோது, மனம் நொறுங்குண்டு இந்த வார்த்தைகளை உதிர்க்கிறோம். அப்படிப்பட்ட தொனியில் தான், திருப்பாடல் ஆசிரியரின் வரிகள் அமைந்திருக்கின்றன. இந்த வரிகள் தான், இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் சிலுவையிலிருந்து உதிர்த்த கடைசி ஏழு வார்த்தைகளுள் ஒன்றாக இருக்கிறது. எதற்காக திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகளைச் சொல்கிறார்? அவர் யாரால் கைவிடப்பட்டார்? எப்படி கைவிடப்பட்டார்? கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட ஒருவரின் பாடல் தான், இந்த திருப்பாடல் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர் கடவுள் மீது நம்பிக்கை...

HOLY PEACE

“I will make with them a covenant of peace; it shall be an everlasting covenant with them.” —Ezekiel 37:26 To the Jewish nation which had been destroyed in war and whose leaders were in exile, the Lord promised an everlasting covenant of peace. This promise was ultimately fulfilled in Jesus, “Who is our Peace” (Eph 2:14), and Who left us the gift of peace in His last will and testament (Jn 14:27). Moreover, Jesus, “the God of peace” (Rm 16:20; 1 Thes 5:23; Heb 13:20), made His disciples peacemakers (Mt 5:9). We receive Jesus’ gift of peace and make peace...

பலருக்காக ஒருவர்

யோவான் 11: 45-57 நேற்றைய நற்செய்தியின் இறுதியிலும், இன்றைய நற்செய்தியின் தொடக்கத்திலும் முக்கியமான ஒரு ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதாவது அதிகார வர்க்கத்தினரான தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவரை எதிர்த்தாலும் சாதாரண பாட்டாளி மக்கள் அவரை நம்ப துவங்கினர். எளிய மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தான் கயப்பா, “இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்றார். இங்கே அவர் யூத இனமக்களையும், அவரின் அதிகாரத்தையும் பாதுகாப்பதற்கே இவ்வாறு கூறினார். ஆனால் உண்மையிலேயே இது தான் கிறிஸ்துவின் வருகையின் நோக்கம். இதை நாம் பல இடங்களில் காணலாம். குறிப்பாக 3: 16 ல் அவர் இவ்வுலகிற்கு வந்ததே இறப்பதற்காக, அந்த இறப்பு நம்மை மீட்பதற்காகவே. எப்படி ஓர் ஆதாமினால் பாவம் இம்மண்ணுலகில் நுழைந்ததோ. இரண்டாம் ஆதாமினால் பாவம் முழுவதும் அகற்றப்பட்டது. எப்படி ஒரு மரத்தினால் முதல்...

WHAT ARE YOU DOING TO JESUS?

They “again reached for rocks to stone Him.” —John 10:31 Wednesday in the daily Scripture readings we heard Jesus say: “You are trying to kill Me” (Jn 8:37). Yesterday we heard: “They picked up rocks to throw at Jesus, but He hid Himself and slipped out of the temple precincts” (Jn 8:59). Today we hear: “The Jews again reached for rocks to stone Him” (Jn 10:31) and “They again tried to arrest Him” (Jn 10:39). Tomorrow we hear from Caiaphas, the high priest, ” ‘You have no understanding whatever! Can you not see that it is better for you to...

கடவுள் எங்கோ இல்லை

யோவான் 10.31-42 பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே இயேசு தன் பணியைச் செய்து வந்தார். “இதோ இக்குழந்தை இஸ்ராயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்” என்ற இறைவாக்கினர் சிமியோனின் வாக்கு (லூக் 2:24) செயல்பட தொடங்கியது. தன் சொந்த ஊரிலேயே அவருக்கு எதிர்ப்பு, அவரைக்கல்லால் எரிந்து கொல்லவும், கேள்விகள் கேட்டு அவமானப்படுத்தவும், வாதம் புரிந்து தோற்கடிக்கவும், சூழ்ச்சிகள் செய்து உரோமையர்களிடம் மாட்டி விடவும் பல முயற்சிகள். இவை அனைத்திற்குமான காரணம் அவர் கடவுளை தந்தை என்று அழைத்தும், என்னைக் காண்கின்றவன் தந்தையைக் காணலாம் என்றும், தந்தையின் செயலினையே நான் செய்கிறேன் என்றும், கடவுளை நம்மோடு ஐக்கியப்படுத்தியதற்காகவே, கடவுளை நம் மத்தியில் கொண்டு வந்ததற்காகவே, அவரை மத்தியில் விட்டு அனைவரும் ஏளனம் செய்தனர். யூதர்களைப் பொறுத்தவரை கடவுளை எங்கோ இருப்பவராகவேப் பார்த்தனர். அவரை தம்மில் ஒருவராக அவர்களால் பார்க்க முடியவில்லை. அவர் இப்படி, அப்படியென்று கடவுளுக்கு வரையறைக் கொடுத்தார்கள்....

%d bloggers like this: