Category: Daily Manna

இன்றைய சீடர்களான நாம் எப்படி?

மாற்கு 9 : 30 – 37 இன்றைய சீடர்களான நாம் எப்படி? தம் இறப்பின் வழியே நமக்கு வாழ்வளிக்க வந்த இறைமகன் இரண்டாம் முறையாகத் தன் பாடுகள்- மரணம்- உயிர்ப்புப்பற்றி பேசுகிறார். அவமான சின்னத்தை தூக்கிச் சென்று அதில் அறையப்பட்டு இறக்க அவர் மனம் வருந்தவில்லை. அதை ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டே தன்னைத் தயார் படுத்த ஆரம்பித்து விட்டார். முதல்முறையாக தம் இறப்பினை அறிவிக்கும் பொழுது மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் புறக்கணிக்கப்படுவார் என்ற குறிப்பு உள்ளது. இங்கோ, ‘மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார்’ என்ற கூடுதலான அறிவிப்பை இன்றைய நற்செய்தியில் பார்க்க முடிகிறது. யூதாசின் துரோகச் செயலை மேலோட்டமாக இங்கே ஆண்டவர் குறிப்பிடுகிறார். மேலும் இறைவனின் திட்டத்தில் மனித மீட்புக்காகக் கடவுளாலும் அவர் கையளிக்கப்படுவார் என்ற உண்மையும் இங்கு தொனிக்கிறது. “நம் குற்றங்களுக்காக சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார், நம்மை தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்” (உரோ...

நம்பிக்கையை அதிகமாக்கும்….

மாற்கு 9 : 14 – 21 இன்றைய நற்செய்தி நம் இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இச்சிறுவனைப் பிடித்துள்ள பேய் ஆற்றல் உள்ளது. அது அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரை தள்ளிப் பல்லைக் கடிக்கிறான். அவனது உடலும் விறைத்துப் போகின்றது. இப்பேயின் ஆற்றலின் முன் சீடர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கின்றது. இக்குறைவிற்கு காரணம் என்ன? என்றும், இந்த சிறுவனை எப்படி நிறைவாக்க முடியும்? என்றும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார். இன்றைய சீடர்களாகிய நமக்கு இது எப்படி முக்கியம் என்றால் நாம் பிறருக்கு பிடித்திருக்கின்ற தீய சக்திகளை விரட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் நம்மைச் சார்ந்து இருக்கின்ற தீய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும். “என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் என்னைவிடப் பெரிய காரியங்களைச் செய்வார்”                        (யோவான் 14:12) என்ற இறை வார்த்தையை முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கை...

மெசியாவைப் பற்றிய என் புரிதல்

மாற் 8 : 27 -33 இயேசுவின், “நான் யார்?” என்ற கேள்வியைப் பற்றிப் பார்க்கும் முன்பாக, இயேசு எந்த இடத்தில் இந்த கேள்வியைக் கேட்கிறார் என்பதைப் பார்த்து விடுவோம். “பிலிப்புச் செசரியா” என்றால் ஏரோதின் மகனான பிலிப்பு சீசரைக் குறிக்கும் பொருட்டும் தன் புகழினை நிலைநாட்டும் பொருட்டும் கட்டப்பட்டது தான் இந்த நவீன நகரம். எங்கு திரும்பினாலும் எட்டுத்திசைகளிலும் அரசர்களைப் பற்றிய துதிகளும் அவர்களின் பிள்ளைகளாகவே இருந்தன. இந்த இடத்தில், பிற இனத்து மக்கள் அதிகமாக வாழ்ந்ததினால் அவைகளின் சிலைகளும், கோவில்களும் அதிகமாக இருந்தன. இப்பேற்பட்ட இடத்தில் வைத்து தான், ‘தாவீது மன்னரை விட மிகச் சிறந்த மன்னராக மெசியா வருவார்’ என எதிர்பார்த்திருந்தவர்களிடம் இயேசு ‘நான் யார் என்று மக்கள் சொல்லுகிறார்கள்? என்று கேட்டார். எவ்வாறு யோர்தான் நதிக்கரை அனுபவம் இயேசுவின் பணிவாழ்வுக்கு தொடக்கப்புள்ளி வைத்ததோ அதனைப்போல பிலிப்பு செசரியாவால் கேட்ட கேள்வி ஒரு சிறு திருப்பத்தை அவருக்கு...

அழைப்பும் மறுஅழைப்பும்

மாற்கு 8: 22- 26 இயேசு செய்கின்ற ஒவ்வொரு புதுமையும் பல பாடங்களை நம்முன் படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பாக அவர் செய்த ஒவ்வொரு அற்புதமும் தன்னுடன் இருந்த, அவரைப் பின்பற்றி வந்த ஒவ்வொரு சீடருக்கும் சீடத்துவ வாழ்க்கையை எடுத்து காட்டுவது போல அமைகிறது. ஒரே சொல்லால் அவன் குணம் பெறாது சில செயல்களால் சிறிது சிறிதாக குணம் பெறுகிறான். இரண்டு முறை அவன் கண்களில் ஆண்டவர் தன் கைகளை வைத்து குணம் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த மொத்த நிகழ்ச்சியையும் இயேசுவின் சீடர்களின் வாழ்க்கையோடு ஒத்து போவதாகவே காணமுடிகிறது. முதலில் தன்னிடம் வந்தவரை ஊருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். சீடர்களும் இயேசுவால் அழைக்கப்பட்ட உடன் அனைத்தையும் விட்டுவிட்டு (இவ்வுலகவாழ்வினை) அவரோடு சென்றனர். (மாற்கு 1 : 20) முதலில் அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆண்டவரை அவரது இறப்பிற்கு முன்பு தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஆண்டவரோடு இருந்து, உண்டு, உடுத்து, உறங்கியவர்களின் அகக்கண்கள் முழுமையாகத்...

ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக!

திருப்பாடல் 29: 1, 2, 3 – 4, 9 – 10 கடுமையான மழையும், இடிமுழக்கமும், கண்களைப் பறிக்கும் மின்னலும் நமக்குத் தோன்றுகிறபோது, நாம் எப்படி உணர்வோம்? நிச்சயமாக பயம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். என்ன நேரிடுமோ? என்கிற மனக்கலக்கம் நம்மை ஆட்கொள்ளும். ஏனென்றால், இருக்கிற சூழல் அவ்வளவுக்கு கடுமையானது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், தாவீது அரசரின் மனநிலை சற்று மாறுபட்டதாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அவர் கடவுள் மட்டில் தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அவருடைய மனநிலை அமைந்துள்ளது. இயற்கையின் கடுமையான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் மனக்கலக்கத்தில் இருக்கிற வேளையில், தாவீது அரசர் நிகழ்வதை நினைத்து பயப்படாமல், கடவுளின் மேன்மையை, மாண்பை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார். வியந்துபார்க்கிறார். அந்த வியப்பை நம்பிக்கையாக வடிக்கிறார். அந்த வியப்பின் ஆழத்தில் மக்களுக்காக பரிந்துபேசுகிறார். கலங்கி, பயந்துபோய் இருக்கிற மக்களுக்கு ஆண்டவர் தாமே சமாதானத்தை வழங்கிட வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார். இன்றைக்கு நற்செய்தியிலும், உண்பதற்கு...