Category: Daily Manna

செபம் செயலாகட்டும்

JESUS TODAY என்ற நூலின் ஆசிரியர் இவ்வாறு கூறுவார். மனிதனுக்குள் மூன்று வகையான ஆற்றல் உள்ளது. உடல் ஆற்றல், உள்ள ஆற்றல் மற்றும் ஆன்ம ஆற்றல் எல்லாருமே முதல் இரண்டு வகை ஆற்றலில் மிகச் சிறந்தவர்களாக விளங்குகின்றார்கள். ஆனால் மூன்றாவது வகை ஆற்றலை பெற தடுமாறுகின்றார்கள். ஆனால் ஒரே ஒரு மனிதன் மட்டுந்தான் இந்த மூன்றாவது வகை ஆற்றலில் சிறந்தவராக விளங்குகின்றார். அவர் தாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அதனால் தான் அவரால் பல புதுமைகளும், வல்ல செயல்களும் செய்ய முடிந்தது. அவர் எப்படி இந்த ஆற்றலைப் பெற்றார் என்ற கேள்விக்கு விடையையும் ஆசிரியர் அந்த நூலின் இறுதி பக்கத்தில் தருகின்றார். அதாவது செபத்தின் வழியாக அவர் அந்த ஆற்றலை பெற்றதாக கூறுவார். அத்தகைய ஆற்றலின் விளைவைத் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கின்றோம், இயேசு நோயாளர்களைக் குணப்படுத்துவதை. விவிலிய அறிஞர்கள் இயேசுவின் புதுமைகளை நான்கு வகைகளாகப் பிரித்துக்...

இயேசுவின் வல்லமை

இயேசுவின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவருடைய செயல்பாடுகளும் மக்களை வியப்பில் ஆழ்த்தின. தொழுகைக்கூடத்தில் தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த மனிதன், அங்கிருந்தவர்களுக்கு பெருத்த துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனை இயேசு நலமாக்குகிறார். நற்செய்தி நூல்கள் அனைத்திலும் தீய ஆவிகளைப்பற்றியும், அவற்றிலிருந்து இயேசு மக்களுக்கு விடுதலை கொடுத்த நிகழ்வுகளையும் பல இடங்களில் பார்க்கிறோம். இதன் பிண்ணனி என்ன? என்பதை நாம் பார்ப்போம். யூத மக்கள் பேய்களையும், தீய ஆவிகளையும் இருப்பதாக நம்பினர். இந்த உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தீய ஆவிகள் ஆக்கிரமித்து இருப்பதாக நினைத்தனர். அரச அரியணையிலிருந்து, குழந்தைகளின் தொட்டில் வரை, இந்த தீய ஆவிகள் ஆக்கிரமித்திருந்தன. கல்லறைகளுக்கு நடுவில் ஏராளமான மண்டை ஓடுகள் காணப்பட்டன. இந்த மண்டை ஓடுகளின் நடுவில், சிறிய அளவிலான துவாரங்கள் இடப்பட்டிருந்தன. இது எதைக்குறிக்கிறது என்றால், அறுவைச்சிகிச்சை வளர்ச்சியடையாத அந்த காலக்கட்டத்திலேயே, இந்த சிறிய துவாரத்தை மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள். இதன் மூலமாக அவர்களின் நம்பிக்கை, தீய ஆவி அந்த துவாரத்தின் வழியாக, வெளியே...

ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக

இந்த திருப்பாடலை தாவீது அரசர் எழுதியபோது இயற்கைச்சீற்றங்கள் நிறைந்த ஒரு சூழலாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. மழை, மின்னல், இடி போன்ற இயற்கைச்சீற்றங்களின் தாக்கம் அதிகமாக இருந்த ஒரு சூழலை நாம் எதிர்கொண்டால் எப்படி இருக்கும்? பயம், கலக்கம், அச்சம் நம்மில் அதிகமாக இருக்கும். ஆனால், தாவீது அரசர் இயற்கையின் சீற்றத்திலும் கடவுளின் வல்லமையை, ஆற்றலை பார்க்கிறார். எந்த அளவுக்கு கடவுள் வலிமையும், வல்லமையும் படைத்தவராக இருக்கிறார் என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலை இயற்கையில் மட்டுமல்ல. நமது வாழ்விலும் எதிரொலிக்கிறது. இந்த நெருக்கடியான நிலை குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களின் வாழ்விலும் எதிரொலிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வாழும், வாடும் மனிதர்களுக்கு அமைதியைத்தர வேண்டுமென்று ஆசிரியர் மன்றாடுகிறார். ஏனென்றால், உண்மையான அமைதியை ஆண்டவர் ஒருவர் மட்டும் தான் வழங்க முடியும். அந்த அமைதியை வழங்கக்கூடிய ஆண்டவரில், தூய ஆவி நிழலிடுவதை இன்றைய நற்செய்தியும் நமக்கு...

திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது. இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள்...

தீர்ந்தது தீர்க்கமாகும்

07.01.2023 – யோவான் 2: 1 – 12 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, 2018 ம் ஆண்டு நடந்த கஜா புயல், 2017 ல் ஏற்பட்ட ஓகி புயல் இவைகளின் சூழ்ச்சிக்கு மக்கள் இரையாக்கப்பட்டார்கள். இதனால் தங்களிடமிருந்த பொருட்களெல்லாம் தீர்ந்து போனது. முகம் தெரியாத, முகவரி தெரியாத மனிதர்கள் முன்வந்து இவர்களின் தீர்வை தீர்க்கமாக்கினர். காரணம், தாங்கள் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் தங்களையே அர்ப்பணித்தார்கள். அது போலத்தான் கானாவூர் நிகழ்வு. யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாட்கள் நடக்கின்ற ஒரு சமூக விழா. குடிபானங்களிலே தயாரிப்பதற்கென்று அதிக நாட்கள் எடுக்கக்கூடிய குளிர்பானம் திராட்சை ரசம். ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகும். அப்படியென்றால் திருமண வீட்டார் எத்தனை வருடங்களாக இருந்து தயாரித்திருப்பார்கள் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த குறைவு பசி அல்லது வெறும் உடலை சார்ந்த குறைவு அல்ல. மாறாக, சமுதாயத்தில் அந்தஸ்தை காட்டுகின்ற...