Category: Daily Manna

வந்து பாருங்கள்! வியந்து போவீர்கள்!

04.01.2023 – யோவான் 1: 35 – 42 புதிதாக வேலைக்கு ஒரு நிறுவனத்திற்கு செல்லும் முன், ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரிடம் நிறுவனம் எப்படி இருக்கும் என்று விசாரித்தால் ‘வந்து பாருங்கள்’ என்பது அவர்களின் பதிலாக இருக்கும். புதிதாக கல்லூரியில் பயிலும் முன், அந்த கல்லூரியில் படிக்கும் மாணக்கரிடம் கல்லூரி எப்படி இருக்கும்? என்று கேட்டால், ‘வந்து பாருங்கள்’ என்பது அவர்களின் பதிலுரையாக இருக்கும். புதிதாக ஒரு அரசியல் கட்சியில் இடம் பெயர வேண்டுமென்று விரும்பி அந்த கட்சியில் ஏற்கெனவே இருக்கும் நபரிடம் கட்சி அனுபவம் பற்றி கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் ‘வந்து பாருங்கள்’ என்பதே. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் சீடர்கள் இயேசுவின் வாழ்க்கை பயணத்தில் இணைந்து பயணிக்க ஆவல் கொள்கின்றார்கள். இயேசுவின் அனுபவ வார்த்தை ‘வந்து பாருங்கள்’ என்பதே. வந்து பார்க்கின்ற போது தான் வியந்து போகின்றார்கள். பொதுவாக இதனை அழைத்தல் அல்லது அருள்பணியாளருக்கான அழைப்புப்...

மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்

ஆண்டவரை வாழ்த்த வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்பவிடுக்கிறார். எதற்காக கடவுளைப் போற்ற வேண்டும்? ஏனென்றால், அவர் இந்த உலகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுதலையை நமக்குத்தந்திருக்கிறார். இங்கே விடுதலை என்று சொல்லப்படுவது என்ன? எந்த விடுதலையை ஆசிரியர் இங்கே கோடிட்டுக்காட்டுகிறார்? தொடக்கநூலில் (1: 31) நாம் பார்க்கிறோம்: ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாக இருந்தன”. தொடக்கத்தில் இருந்த இந்த ஆரோக்யமான நிலை தொடரவில்லை. அது மனிதனின் கீழ்ப்படியாமையால் இழந்துபோனதாக மாறியது. மனிதனின் தவறால் தீமை இந்த உலகத்திற்குள் நுழைந்தது. தான் படைத்த மனிதனே இப்படி தீமை நுழைவதற்கு காரணமாகிவிட்டானே என்று, கடவுள் கோபம் கொண்டு மானுட சமுதாயத்தை புறந்தள்ளி விடவில்லை. இழந்து போனதை மீட்டெடுக்க வாக்குறுதி கொடுக்கிறார். அந்த எதிர்கால விடுதலையை இறைவாக்கினர் வாயிலாக முன்னறிவிக்கிறார். அந்த விடுதலையைத்தான் இந்த திருப்பாடலில் நாம் பார்க்கிறோம். இந்த விடுதலை குறிப்பிட்ட...

கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக !

புத்தாண்டு கன்னி மரியாள் – இறைவனின் தாய் பெருவிழா புதிய ஆண்டின் முதல் நாளாகிய இன்று நமது பதிலுரைப் பல்லவி இவ்வாறு இறைவனின் ஆசியை வேண்டுகிறது: “கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக”. என்ன அருமையான வேண்டுதல்! ஆண்டின் முதல் நாளில் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் காலை தோறும் நாம் எழுப்ப வேண்டிய நல்லதொரு வேண்டுதல். இந்த வேண்டுதல் நமக்கு இரண்டு இறையியல் உண்மைகளை நினைவூட்டுகிறது: 1. இறைவனின் ஆசி இன்றி, நம்மால் வெற்றி பெற இயலாது. நமது பணிகள் பலன் தரமாட்டாது. எனவே, இறைவனின் துணையுடனே நமது அன்றாடக் கடமைகள் ஆற்றப்பட வேண்டும். 2. இறைவன் இரக்கம் நிறைந்தவர், அவரது பேரிரக்கம் நம்மோடு என்றுமுள்ளது. நாம் கேட்காமலே நம்மீது இரக்கம் பொழியும் இறைவன், ஆவலோடு வேண்டும்போது நிச்சயம் ஆசிகளை மழையெனப் பொழிவார். திருப்பாடல் 67 ஒரு நன்றிப் புகழ்ப்பா. “நரம்பிசைக் கருவிகளுடன் பாடவேண்டிய புகழ்ப்பாடல்” என மூல...

வாழ்வின் சோதனைகள்

31.12.2018 – யோவான் 1: 1 – 8 1யோவான் 2: 18 – 21 சோதனை என்பது வாழ்வின் எல்லாருக்கும் வரக்கூடியது. ஒரு சிலர் சோதனைகளைத் தாங்க முடியாமல், அந்த சோதனைகளுக்கு பலியாகி விடுகின்றனர். ஒரு சிலர் அதனை எதிர்த்து நிற்கின்றனர். மற்றும் சிலர், சோதிக்கிறவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். இன்றைய வாசகம், இப்படிப்பட்டவர்கள் மட்டில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, நமக்கு பல்வேறு சோதனைகள் வரும். கிறிஸ்துவுக்கு எதிராக இருக்கிறவர்கள் இந்த சோதனைகளை நமக்கு ஏற்படுத்துவார்கள். நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முயற்சி எடுப்பார்கள். நாம் அவர்களின் சோதனைகளுக்கு பலியாகி விடக்கூடாது என்பது தான், யோவான் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஏனென்றால், எதற்காக நாம் இதுவரை காத்திருந்தோமோ, அந்த காலம் வந்து விட்டது. கிறிஸ்துவுக்காக காத்திருந்த காலம் கனிந்து விட்டது. இந்த காலத்திற்காகத்தான் இவ்வளவு நாட்கள் நம்மையே நாம் தயாரித்துக் கொண்டு இருந்தோம். இவ்வளவு...

ஆன்மீகம் நிறைந்த குடும்பங்கள் !

இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் ஆண்டவர் இயேசுவின் ஆசிபெற்ற குடும்பமாக விளங்க இன்று சிறப்பாக மன்றாடுவோம். குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை இன்று பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் அறநெறிச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாகத் திகழ்ந்தால்தான், இன்றைய சவால்களைச் சந்திக்க முடியும். இந்த குடும்பங்களின் ஆன்மீகம் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவி;ப்பு என்னும் நான்கு தளங்களில் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் செபித்து, இறைவார்த்தையின்படி, அருள்சாதனங்களில் பங்கேற்று வாழ்வதே இறைநம்பிக்கையின் வெளி;ப்பாடு. தங்கள் கடமைகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நேர்த்தியாக ஆற்றுவது நற்பணியின் வெளிப்பாடு. பல்வேறு விதமான உறவுகளில் பாராட்டு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற...