Category: Daily Manna

பகை முற்றுகிறது

(யோவான் 07: 1-2, 10, 25 – 30) யோவான் ஐந்தாம் பிரிவில் இயேசு ஓய்வு நாளில் குணப்படுத்தியதால், எழும்பிய எதிர்ப்பு அப்படியே தொடர்ந்து, ஆறாம் பிரிவில் இயேசு, “நான் உயிர் தரும் உணவு” என்று கூறியதைக் கேட்டதும் இன்னும் வலுக்கிறது. இன்றைய ஏழாம் பிரிவோ எதிர்ப்பிலேயே தொடங்குகிறது. இந்த எதிர்ப்பு இன்னும் அதிகமாக வலுக்கிறது. ஓய்வு நாளில் குணம் கொடுத்ததற்கே அவரை எதிர்த்த யூதர்களுக்கு இப்போது அவரின் மீது பழிபோட இன்னும் அதிகக் காரணங்கள் கிடைக்கின்றன. 1. யூதக் கணிப்புப்படி (மாற்கு 14 : 61-63) தன்னை மெசியா, தன்னைக் கடவுளிடமிருந்து வந்தவன் என்று சொல்லும் எவனும் கடவுளைப் பழித்துரைக்கிறான் என நம்பினர். 2. இதையும் கூறிவிட்டு இயேசு இன்னும் ஒரு படி மேலே சென்று இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத மக்களைப் பார்;த்து, “நீங்கள் கடவுளை அறியவில்லை, நானோ அவரை அறிவேன்” (யோவான் : 28,29) என்கிறார். வெந்த புண்ணில்...

ஆழமாக வாசி

(யோவான் 5:1-3, 5-16) மற்ற புதுமைகள் அல்லது அருளடையாளங்கள் அனைத்திலிருந்தும் இன்றைய நற்செய்தியில் நடக்கின்ற அருளடையாளங்கள் மிகவும் வித்தியாசமாகத் தனித்துவம் பெற்று இருக்கிறது. இந்த வித்தியாசத்திற்கும் தனித்துவத்திற்கும் பெயர் போனதே இந்த யோவான் நற்செய்தி. மேலோட்டமாக வாசிக்கிறவர்களுக்கு ஒரு செய்தியையும், ஆற அமர ஆழமாக வாசிப்பவர்களுக்கு இன்னொரு இனிமையான செய்தியையும் கொடுப்பதே யோவான் நற்செய்தியாளரின் கைவண்ணம். அவரது கைவண்ணத்தை இன்றைய நற்செய்தியில் கூடுதலாகவே காணலாம். இந்த 38 ஆண்டுகள் நோயுற்றவர் குணமாதலின் நிகழ்வினை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள். இங்கே 5 மண்பாண்டங்களைக் கொண்ட கட்டடம், 5 புத்தகங்களைக் கொண்ட ‘தோரா’ – வினைக் குறிக்கிறது. 38 ஆண்டுகள் நோயுற்றவன் என்பது இஸ்ரயேல் மக்கள் 38 ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்ததைச் சுட்டுகிறது. (இச 2:14) குணம் பெற்றவன் இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது.; கலங்கிக் கண்ணீரோடு குணப்படுத்துவது, பலவிமான தெய்வங்களிடம் அலைந்து திரிந்து, கலங்கிய கண்ணீரோடு இருப்பவர்கள் இயேசுவில் விசுவாசம் கொண்டு...

தாழ்ச்சி + இடைவிடாத நம்பிக்கை = அருளடையாளம்

யோவான் 4: 43-54 இன்றைய நற்செய்தி நம்மை இறையன்பில் குறிப்பாக அவர் மீது நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையே நமக்கு வாழ்வளிக்கும் என்பதை நமக்க வலியுறுத்துகிறது. அரச அலுவலன் இவன் ஏரோது மன்னன் அரண்மனையில் பெரிய பதவியில் இருந்தவன். பல மைல் தூரம் கடந்து இயேசுவினைச் சந்தித்து உயிர்ப்பிச்சைக் கேட்பது அவனின் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை எடுத்துரைக்கிறது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் சிறு பதவிகளும், பொறுப்புகளும் கொடுக்கப்பட்டாலே நாம் ஆடுகிற ஆட்டம் அனைவரையும் ஆட்டிவிடுகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லஇ இறைவனுக்கு அடிபணிய மறந்து விடுகிறோம். பதவியை விடுங்கள். இன்று கைநிறைய சம்பாதித்தாலே நான் ஏன் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் மிக அதிகம். பொருளாதாரம் உயர உயர கடவுளுக்கும் மனிதனுக்குமான தூரம் அதிகரிக்கின்றது. மேலும் குணம் தேடி வந்தவரை ஏமாற்றக் கூடிய நிலையில் இயேசுவின் பதில் கூறுகின்றது. இயேசுவின் எரிச்சல் மிகுந்த தொனி அவரை, மனம்,...

ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை

திருப்பாடல் 23: 1 – 3அ, 3ஆ – 4, 5, 6 இஸ்ரயேல் மக்கள் இயல்பிலேயே ஆடு மேய்ப்பவர்கள். ஆடு மேய்ப்பது என்பது அவர்களின் தொழிலாக இருந்தது. எங்கெல்லாம் மந்தைக்கு தேவையான மேய்ச்சல் நிலம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று, அவர்கள் ஆடுகளை மேய்த்தார்கள். ஆடுகளைத் தாக்க வரும் ஓநாய்களிடமிருந்து, அவர்கள் ஆடுகளைப் பாதுகாத்தனர். ஆயன் இருக்கிறபோது, ஓநாய்களால் ஆடுகளைக் கவர முடியாது. ஆயன் இருக்கிறபோது, ஆடுகள் பாதுகாப்பை உணர்ந்தனர். ஆயனும் அந்த ஆடுகளை வெறும் ஆடுகளாகப் பார்க்காமல் அவைகள் மீது, மிகுந்த பாசம் காட்டி மகிழ்ந்தான். இந்த உருவகத்தைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இன்றைய திருப்பாடலில், கடவுளுக்கு பயன்படுத்துகிறார். கடவுள் தன்னுடைய பிள்ளைகளை எப்போதும் வளமையாக வைத்திருந்தார். எகிப்தில் அவர்கள் அடிமைகளாக இருந்தபோது, அவர்களை விடுவித்து வழிநடத்தினார். தாகத்தால் தவித்தபோது, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, தாகம் தணித்தார். உணவுக்காக ஏங்கியபோது, அவர்கள் எதிர்பாராத வண்ணம் அற்புதமாக உணவளித்தார். இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாத்தார்....

அரசியல்வாதி பரிசேயன்

லூக் 18: 9-14 மக்களின் பணத்தினைப் பறித்து, காசினைக் கரியாக்கி, மக்களை ஏமாற்றி அவர்களின் மானத்தையும் மரியாதையையும் அடகு வைத்து ‘இலவசம்’ என்ற பெயரில் சில பொருட்களைக் கொடுத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி உங்களுக்கு நான் அதைச் செய்தேன், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தேன், இதைக் கொண்டுவர வலியுறுத்துவேன் என்று மக்களை மையப்படுத்தாமல், தன்னையும் தனது குடும்பத்தையும் மையப்படுத்திப் பேசுகிற இன்றைய அரசியல்வாதிகளைப் போலவே நற்செய்தியில் வரும் பரிசேயனும் பேசுகிறான். இப்பரிசேயன் தான் சிறந்தவன், நல்லவன் என்பதைக் கூற செபத்தைக் கையாளுகிறான். இறைவனை மையப்படுத்துகிற செபத்தை, அவனை மையப்படுத்தி மாற்றியமைக்கிறான் (இதுவும் ஒரு வித சிலை வழிபாடே) தன்னை மேம்பட்டவன் என்று காட்ட மற்றவர்களை இகழ்கிறான். மொத்தத்தில் இப்பரிசேயன் தன்னிலன்பு, இறையன்பு, பிறரன்பு ஆகிய மூன்றிற்கும் எதிராகச் செயல்படுகிறான். இந்த மூன்றையும் நாம் வலுப்படுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டிருப்பதே இத்தவக்காலம். இதை மீண்டும் மீண்டும் உணர்ந்தவர்களாய் மாறி நம் அகந்தையை அகற்றி தாழ்ச்சியைக் கையிலெடுத்து நம்மை...