Category: Daily Manna

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூறுங்கள்

திருப்பாடல் 97: 1, 2ab, 5 – 6, 10, 11 – 12 பூமியில் இருக்கிறவர்களை மகிழ்ச்சியாக இருக்குமாறு திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் தொடர்ந்து சொல்கிறார். கடவுள் ஆட்சி செய்வதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கிறது. கடவுளின் ஆட்சியில் யார் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? என்பதையும் அவர் சொல்கிறார். கடவுளின் ஆட்சியில் நேர்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுள் நேர்மையாளர். அவர் நேர்மையுடன் ஆட்சி செய்கின்றார். அவர் நேர்மையாளர்களை விரும்புகிறார். அவர்களைப் பாதுகாக்கின்றார். நேர்மையாளர்கள் யார்? மக்களுக்காக வாழ்கிறவர்கள். நீதியோடு நடக்கிறவர்கள். அநீதியை எதிர்க்கிறவர்கள். அதன்பொருட்டு எத்தகைய துன்பம் வந்தாலும், அதனைத் தாங்குவதற்கு வல்லமை படைத்தவர்கள். தாங்கள் வாழ்கிற வாழ்க்கையின் பொருட்டு, பலவற்றை இழந்தவர்கள். மற்றவர்களால் பழிவாங்கப்படுகிறவர்கள். மற்றவர்களால் உதாசீனமாக நடத்தப்படுகிறவர்கள். இவர்களை கடவுள் விரும்புகிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்போதும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க...

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூறுங்கள்

திருப்பாடல் 90: 3 – 4, 12 – 13, 14 & 17 இன்றைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இடிந்தகரையில் நடந்து கொண்டிருக்கும் அணு உலைக்கு எதிரான தொடர்போராட்டம், இளைஞர்களின் எழுச்சியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், கதிராமங்கலம் கிராமத்து மக்களின் வாழ்வாதாரப் போராட்டம், தலைநகரையே உலுக்கிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம், மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டம் என இதுவரை தமிழகம் கண்டிராத எழுச்சியை மக்கள் பார்த்து, வியந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டங்கள் உணர்த்தும் மற்றொரு முக்கியமான செய்தி, இன்றைக்கு மக்களுக்கான அரசுகள் இயங்கவில்லை என்பதுதான். இன்றைய திருப்பாடல், ஒரு அரசு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வருகிறது. கடவுளின் அரசு எப்படி அமைந்திருக்கிறது என்பதனை விளக்கமாகச் சுட்டிக்காட்டும் பாடலாகவும் இது அமைகிறது. கடவுள் நீதியையும், நேர்மையையும் கொண்டு ஆட்சி செய்கிறார். தீமையை வெறுப்போர் அனைவரும் ஆண்டவரின் அன்புக்குரியவர்கள் ஆகின்றனர். கடவுள் நீதிக்காகப் போராடுகிறவர்களை வெறுமனே விட்டுவிடவில்லை....

உம் ஆற்றலைவிட்டு நான் எங்கு செல்லக் கூடும்?

திருப்பாடல் 139: 7 – 8, 9 – 10, 11 – 12 இறைவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதுதான் இந்த திருப்பாடல் வழியாக ஆசிரியர் சொல்ல வருகிற செய்தியாகும். நம்மைப் பற்றி நாம் அறிந்ததை விட, நம்மைப்பற்றி நம்முடைய உறவுகள் அறிந்ததை விட, இறைவன் முழுமையாக அறிந்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையிலிருந்து தப்பிவிட முடியாது. ஏனென்றால், ஆண்டவர் எப்போதும் நம்மை உற்று நோக்கிக் கொண்டேயிருக்கிறார். தாவீது அரசர் பத்சேபாவோடு தவறு செய்கிறார். தான் செய்கிற தவறை யாரும் உணராதவாறு, அவருடைய கணவரை கொன்றுவிடுகிறார். அரசர் என்கிற தற்பெருமை, செய்கிற தவறை மற்றவர்களிடமிருந்து மறைத்த செருக்கு அவரிடத்தில் இருக்கிறது. தன்னைப்பற்றி கர்வம் கொள்கிறார். ஆனால், இறைவன் நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக அவருக்கு அழிவின் செய்தியை அறிவிக்கிறார். கடவுள் முன்னிலையில் தாவீது செய்த தவறு அவருக்கு உணர்த்தப்படுகிறது. இதுவரை தனக்கு நிகரில்லை என்ற மமதை கொண்டிருந்த தாவீது...

ஆண்டவரே! நீர் என்னை அறிந்திருக்கிறீர்

திருப்பாடல் 139: 1 – 3, 4 – 6 ஒரு சில யூதப்போதனையாளர்களின் கருத்துப்படி, தாவீது எழுதிய திருப்பாடல்களில் இது தான், தலைசிறந்த பாடல். கடவுள் எங்குமிருக்கிறார். நம்மை அருகிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கடவுளின் பேராற்றலை எடுத்துரைக்கக்கூடிய பாடல் இந்த திருப்பாடல். கடவுள் அறியாதது ஒன்றுமில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிற பாடல். நம் வாயிலிருந்து நாம் சொல்லப்போகிற வார்த்தைகளைக் கூட கடவுள் தெளிவாக அறிந்திருக்கிறார். கடவுளை முழுவதுமாக அறிந்தவராக வெளிப்படுத்தும் இப்பாடல், மனித அறிவின் எல்லையையும் கோடிட்டுக் காட்டுகிறது. மனிதர்களாகிய நாம் நமது எல்லையை உணர வேண்டும். நம்முடைய அறிவு குறிப்பிட்ட எல்லைக்குரியது. கடவுளைப் பற்றி மனிதன் கூறும் பிரச்சனைகளுக்கு அடிப்படையே இங்கிருந்து தான் தொடங்குகிறது. நடக்கிற நிகழ்வுகளை நம்முடைய அறிவைக் கொண்டு தீர்வு காண முயற்சி எடுக்கிறோம். நாம் நினைப்பது போல நிகழ்வுகள் நடக்கவில்லை என்றால், கடவுளிடத்தில் கோபம் கொள்கிறோம். இந்த கோபம் கடவுளிடத்தில் வெறுப்புணர்வாக மாறுகிறது....

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்

திருப்பாடல் 149: 1b – 2, 3 – 4, 5 – 6a & 9 இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல். இஸ்ரயேலின் கடவுளை ஆர்ப்பரிப்போடு வாழ்த்துகிற பாடல். போர்க்களத்தில் எதிரிநாட்டினரை அடிபணியச் செய்து தன்னுடைய வல்லமையை நிலைநாட்டிய யாவே இறைவனுக்கான பாராட்டுப்பாடல். இதனுடைய பிண்ணனி நிச்சயம் போர்க்களம். எதிரிநாட்டினருக்கு எதிராக, வெற்றியைப் பெற்றிருக்கிற தருணத்தில், தங்களது உள்ளக்கிடக்கைகளை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியது தான் இந்த பாடல் என்று சொல்லலாம். அதிலும் சிறப்பாக சீயோனின் மீது தாவீது தன்னுடைய முழுமையான ஆளுமையை நிரூபித்த நேரத்தில் பாடப்பட்ட பாடலாகவும் நாம் கருதலாம். இஸ்ரயேல் மக்கள் எப்போதும் வாழ்க்கை நிகழ்வுகளோடு கடவுளைப் பொருத்திப் பார்த்தார்கள். தங்களுக்கு துன்பம் வந்தாலும் அது கடவுள் தான் அனுப்பியிருக்கிறார் என்று நினைத்து, அதற்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். அது போல வெற்றி வந்தாலும், தங்களுடைய பலத்தினால் அல்ல, மாறாக, யாவே இறைவனின் கொடையினால் தாங்கள் பெற்றது என்ற எண்ணம் அவர்களுக்கு...