Category: Daily Manna

கடவுள் மீது நமது நம்பிக்கை

கடவுள் இரக்கமுள்ளவர். இரக்கமும், அன்பும் உருவான கடவுளால் நல்லவர்களையும், தீயவர்களையும் எப்படிப் பிரித்துப்பார்க்க முடியும்? கடவுளின் மன்னிப்பு தீயவர்களைக் கரைசேர்த்து விடாதா? கடவுளால் தண்டனை கொடுக்க முடியுமா? அன்பே உருவான கடவுளிடமிருந்து, தீர்ப்பிடக்கூடிய நாள் எப்படி வர முடியும்? இதுபோன்ற கேள்விகளையும், வாதங்களையும் முன்வைக்கிறவர்கள் பலர். நல்ல எண்ணத்தோடு வாழ்கிறவர்களுக்கு இது சற்று நெருடலாகவும், தீமை செய்கிறவர்களுக்கு தொடர்ந்து அதனைச் செய்வதற்கு பக்கபலமாகவும் இருப்பது இதுபோன்ற வாதங்கள். அப்படியென்றால் கடவுளின் நீதி என்ன? என்று கேட்போர் பலர். இந்த கேள்விகளுக்கு நம்மால் தீர்வு காண முடியாது. ஏனென்றால், மனிதர்களாகிய நமது சிற்றறிவிற்கு இந்த கேள்விகளே அதிகமானதாக இருக்கிறது. தீயவர்கள் தீயவர்களாகவே இருந்துவிட்டு செல்லட்டும். நல்லவர்கள் உறுதியான மனநிலையோடு இருக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆவலாக இருக்கிறது. இந்த உலகத்தில் நடக்கக்கூடிய முரண்பாடுகளைக்க கண்டோ, நல்லவராக இருப்பதால் வரக்கூடிய தடைகளைக் கண்டோ, நாம் கலங்கிவிடக்கூடாது. மாறாக, விசுவாசத்தில் நிலைத்து நிற்க வேண்டும். தளர்ச்சியடையாத...

ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்

தானியேல் 1: 39 – 40, 41 – 42, 43 – 44 படைப்புகள் அனைத்தையும் அழைத்து, இறைவனைப் புகழ்வதற்கு மூன்று இளைஞர்கள் அழைப்புவிடுக்கிறார்கள். இந்த பாடலை அவர்களின் உள்ளப்பெருக்கிலிருந்து வருகிற பாடலாக நாம் பார்க்கலாம். மகிழ்ச்சியின் நிறைவிலிருந்து வருகிற பாடலாக பார்க்கலாம். நாம் பல நாட்களாக காத்திருந்த ஒன்று, நம் கண்முன்னால் நடக்கிறபோது, நாம் அடைகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியில், நாம் கடவுளைப் போற்றிக்கொண்டே இருப்போம். அதுதான் இந்த பாடலிலும் வெளிப்படுகிறது. சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ என்கிற மூன்று இளைஞர்கள் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தவர்கள். கடவுளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள். தங்களைக் காப்பாற்றினால் தான் கடவுள் இருக்கிறார் என்பது அல்ல. தங்களைக் காப்பாற்றவில்லை என்றாலும், கடவுள் இருக்கிறார், அவர் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை உண்மையானது என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள். அந்த நம்பிக்கைக்காக தீச்சுவாலையில் தூக்கி எறியப்பட்டபோதும், கவலைப்படாமல் எதிர்கொண்டவர்கள். தாங்கள் யார்...

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே! நீங்கள் கடவுளை வாழ்த்துங்கள்

தானியேல் 1: 34, 35 – 6, 37 – 38 நெருப்பு மூன்று இளைஞர்களை தீண்டாது இருந்தபோது, கடவுளின் வல்லமையை அனுபவித்த அவர்களின் நன்றிப்பெருக்கு தான், இன்றைய நாளின் பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆண்டவர் செய்த செயல்கள் ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்கிற தங்களது விருப்பத்தை, அந்த மூன்று இளைஞர்களும் வெளிப்படுத்துகிறார்கள். இது சற்று வித்தியாசமானதாக இருப்பதை நாம் உணரலாம். படைப்புக்களை கடவுளைப் போற்றச் சொல்லி அழைப்புவிடுப்பதைப் பார்த்திருக்கிறோம், இறைவனின் அருளை உணர்ந்த மனிதர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இறைவனது செயல்களை கடவுளைப் போற்றுவதற்கு விடுக்கப்படும் அழைப்பு புதுமையானது. அடுக்கடுக்கான வார்த்தைகளைப் பேசி மக்களை கவர்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பேச்சு மட்டும் தான், அவர்களின் மூலதனம். தங்களுடைய பேச்சுக்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. வாயில் என்ன வருகிறதோ, அதை அப்படியே பேசிவிடுகிறார்கள். இவர்களை மக்கள் மதிப்பதும் கிடையாது. ஒரு...

என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்

தானியேல்(இ) 1: 29அ,இ, 30 – 31, 32 – 33 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ கடவுளைத் தவிர வேறு எவரையும் வழிபட மாட்டோம் என்று சொன்னதால், நெபுகத்நேசர் அரசரால் தீச்சூளையில் தள்ளப்பட்டனர். மன்னனின் பணியாளர் அவர்களைச் சூளைக்குள் தூக்கி எறிந்தபின், சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் ஆகியவற்றைச்சூளையில் போட்டு தீ வளர்த்த வண்ணம் இருந்தனர். இதனால், தீப்பிழம்பு சூளைக்கு மேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று. அது வெளியே பரவிச்சென்று, சூளை அருகே நின்று கொண்டிருந்த பாபிலோனியரைச் சுட்டு எறித்தது. ஆனால், இளைஞர்கள் காவல்தூதர்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக இருந்தனர். இக்கட்டான நேரத்தில் தங்களைக் காப்பாற்ற தூதர்களை அனுப்பிய இறைவனை அவர்கள் இணைந்து போற்றுவதுதான் இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இறைவனை மூதாதையரின் கடவுளாக இளைஞர்கள் வாழ்த்துகிறார்கள். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் செய்து வந்திருக்கிற எல்லா வல்ல செயல்களையும் இஸ்ரயேலின் பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களுடைய மூதாதையர் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்கள் கடவுளையும்,...

கிறிஸ்தரசர் பெருவிழா

இயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர் அரசர் என்பவர் யார்? ஓர் அரசர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? எப்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த உதாரணம். இந்த உலகம் ஏற்றுக்கொள்வது போன்ற அரசர் இயேசு அல்ல. காரணம், அவர் அரசரின் வாரிசு அல்ல. தச்சரின் மகன். போரில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியவரும் அல்ல. ஆனால், மக்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்டு, குறிப்பாக, ஏழை, எளியவர்கள் நடுவில் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒப்பற்ற அரசர். அவர்கள் வாழ்வை உயர்த்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்தவர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறபோது, மற்றவருக்கு உதவி செய்ய மனமிருக்கலாம். அப்படி இருப்பவர்கள் கூட இன்றைக்கு அரிதாகி விட்டார்கள். ஆனால், துன்பத்தில் இருக்கிறதுபோது, தனது உயிரே ஊசலாடிக்கொண்டிருக்கிறபோது, தனது நிலையே மற்றவர்களால் பரிதாபப்படுகிறதுபோல இருக்கிறபோது, ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்கிறார் என்றால், அதுதான் ஒரு அரசரின் உணர்வாக இருக்க...

%d bloggers like this: