Category: Daily Manna

இறைவாக்கினர்களின் பணி

ஆமோஸ் 7: 10 – 17 இரண்டாவது எரோபவாமின் ஆட்சிக்காலத்தில், இஸ்ரயேலில் வளமையும், அமைதியும் நிறைந்திருந்தது. ஆனால், அதற்கு மையமாக விளங்கிய, அதற்கு காரணமாக விளங்கிய இஸ்ரயேலின் கடவுளை அவர்கள் மறந்துவிட்டனர். இன்றைய பகுதி, பெத்தேலின் குருவாகிய அமட்சியாவிற்கும், இறைவாக்கினர் ஆமோசிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை எடுத்துரைக்கிற நிகழ்வாக அமைகிறது. அமட்சியா, ஆமோசை பிழைப்புவாதி என்றும், பிழைப்பிற்காக இறைவாக்கு உரைக்கிறவர் என்றும் சாடுகிறார். அரசனிடமும் அவரைப்பற்றி அவதூறான வார்த்தைகளைச் சொல்கிறார். அவரை வேறு எங்காவது இறைவாக்குரைத்து, அவரது வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், ஆமோசோ அது தன்னுடைய பிழைப்பு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார், “நான் இறைவாக்கினன் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மாடு மேய்ப்பவன். ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்து, இறைவாக்கு உரைத்திடு என்று சொன்னார்” என்று கூறுகிறார். இப்போது அவருடைய சினம், அமட்சியாவை நோக்கி திரும்புகிறது. “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே. ஈசாக்கின் வீட்டார்க்கு எதிராகப்...

இயேசு நம்மைவிட்டு அகலவேண்டுமா?

இன்றைய நற்செய்தி வாசகம் தரும் செய்தி நமக்குக் கொஞ்சம் வியப்பைத் தருகிறது. கதரேனர் வாழ்ந்த பகுதியில் இயேசு பேய் பிடித்த இருவரை நலப்படுத்துகிறார். அந்தப் பேய்கள் இயேசுவின் அனுமதியுடன் பன்றிகளுக்குள் புக, பன்றிகள் கடலில் வீழந்து மடிகின்றன. எனவே, “நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு. தங்கள் பகுதியைவிட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்”. இயேசுவும் சற்று வியந்திருப்பார், அந்த மக்களின்மீது பரிவும் கொண்டிருப்பார். காரணம், அவர்களுக்கு விழுமியங்களின் தராதரம் தெரியவில்லை. தங்கள் பகுதியைச் சேர்ந்த இரு மனிதர்கள் பேயின் பிடியிலிருந்து நலம் பெற்றுவிட்டார்களே என்று மகிழாமல், தங்களின் பன்றிகள் மடிந்துவிட்டனவே என்று வருந்துகிறார்கள். அதனால், இயேசுவின் அருமையும் தெரியாமல் அவரையும் தங்கள் பகுதியை விட்டு அகலச் சொல்கின்றனர். அவர்களைப் பற்றி வியப்படையும் நாம் நமது வாழ்வை அலசிப் பார்த்தால், நாமும் ஒருவேளை அந்த நகரினர் போலவே நடந்திருப்போம் எனத் தெரியவரும். நாமும் இந்த உலகின் சிறிய இன்பங்கள், மகிழ்ச்சிகளுக்காக, பேரின்பமாம்,...

கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுப்போம்

மனித வாழ்வில் நாம் எதைத்தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. இன்று நாம் விழா எடுக்கும் இந்திய அப்போஸ்தலர் புனித தோமையார் நாம் எதைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தம் வாழ்வின் மூலம் நமக்குக் கற்றுத்தருகிறார். தேர்ந்தெடுத்த இரண்டுவகை: 1. கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். 2. மனிதனுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். கடவுளுக்கு உரியவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் சிலுவையைத்தூக்க தயாராக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட சிலுவை. உதாரணமாக, தன்னலம் துறந்து, பொது வாழ்க்கையிலே, பொதுநலத்தில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும்போது, நமக்கு அவமானங்கள் மட்டுமே கிடைக்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் நம்மைத் திட்டலாம். நம்மீது, அவமானங்களை வாரி இறைக்கலாம். நமது பெரைச் சீரழிக்கலாம். நம்மீது அபாண்டமாக, பழிகளைச் சுமத்தலாம். ஆனால், அந்த சிலுவை தான் நம் வாழ்வுக்கு மீட்பைத்தர போகிறது. நம்மேல் சிலுவையைச் சுமத்தியவர்களுக்கு அழிவைத்தரப்போகிறது. ஏனென்றால், சிலுவையிலே தான் நமக்கு, மீட்பு உண்டு. ஒருவேளை மனிதனுக்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், இந்த உலகத்திலே பல சொத்துக்களை...

செயல்பாடுகளும், எண்ணங்களும்

நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறபோதும், நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று நினைக்கிறபோதும், மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைக்கிறபோதும் அதனை நாம் உடனே செய்ய வேண்டும். பல வேளைகளில் நாம் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் செய்வதில்லை. அந்த கணம் மறைந்தபிறகு, அதனை நிச்சயமாக செய்ய முடியாது. அதேபோல ஒருவருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த நேரத்தில் சொல்லவில்லை என்றால், அந்த கணம் மறைந்துவிடும். அதற்கு பிறகு அதேபோ ஒரு தருணத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. அதேபோலத்தான் இரக்கம் காட்ட வேண்டும் என்று நினைத்தாலும், நாம் உடனடியாக இரக்கம் காட்ட வேண்டும். அல்லது நாம் அதைச்செய்யவே முடியாது. இதுதான் இன்றைய நற்செய்தியிலும் சொல்லப்படுகிறது. இயேசுவைப் பின்பற்ற ஒருவன் விரும்புகிறான். அவன் உடனடியாக பின்பற்றுவதற்கு தயங்குகிறான். அதற்கு பல காரணங்களையும் சொல்கிறான். இயேசுவின் அனுபவத்தில் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த கணம்...

இறைநம்பிக்கை எது?

தொழுகைக்கூடத்தலைவர் பதவி என்பது யூத மக்களால் மதிப்பும், மரியாதையுமிக்க ஒரு பதவி. தொழுகைக்கூடத்தில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவர்தான் பொறுப்பு. அப்படிப்பட்ட நபர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்தார் என்பது ஆச்சரியமான செய்தி. ஏனென்றால், இயேசுவின் போதனைகளும், புதுமைகளும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மேல்மட்டத்தலைவர்களிடையே வெறுப்பைத்தான் சந்தித்திருந்தது. இயேசுவைப்பற்றி தவறான எண்ணங்கள் அவர்களிடையே மேலோங்கியிருந்தது. அதனால் தான், தொடக்கத்தில் தொழுகைக்கூடங்களில் போதிப்பதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பிற்காலத்தில் அவ்வளவாக இயேசுவுக்கு கிடைத்திருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவைத்தேடி வருவது, மேல்மட்டத்தலைவர்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயரைப்பெற்றுத்தரலாம். அதையெல்லாம் மீறி அவர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்திருப்பது, இயேசுவின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மகள் மீது வைத்திருந்த பாசம். சிறுமி இறந்துவிட்டாள். போதகரைத்தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற செய்தி கிடைத்தபோதிலும், இயேசு அவரிடத்திலே நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கச்சொல்கிறார். தொழுகைக்கூடத்தலைவர் வந்ததே நம்பிக்கையில்தான். ஏனெனில் அவருடைய மகள் வருகின்றபோதே சாகுந்தருவாயில் இருந்தார். அதாவது, மருத்துவர்களால்...