Category: Daily Manna

நாம் வாழும் வாழ்க்கை

இன்றைய நவீன கால, அரசியல் வாழ்வை நாம் கேட்ட நற்செய்தி வாசகம் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்றைக்கு இரண்டுவிதமான வர்க்கங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்திருக்கிறது. 1. அடிமை வா்க்கம் 2. ஆளும் வர்க்கம். தொடக்க காலத்தில், முடியாட்சியில், அதிகாரவர்க்கமான அரசர்கள், மக்களை தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என எண்ணினர். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும், காட்சிகள் மாறவே இல்லை. தனிநபர் வழிபாடு எங்கும் காணப்படுகிறது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என்று, எங்கு பார்த்தாலும் தனிநபர் வழிபாடு இந்த சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்கள், பொதுநலனுக்காக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை. அரசியல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாய் மாறிவிட்டது. மக்களும் அதற்கு ஏற்ப வாழ பழகிவிட்டார்கள். கோடிகளை வாரிஇறைத்து, கோடி இலட்சங்களை அள்ளக்கூடிய, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், அரசியல் வியாபாரமாகிவிட்டது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தங்களது அதிகாரத்தை மக்கள்...

ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்

திருப்பாடல் 79: 8, 9, 11, 13 ”ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்” பாபிலோனை ஆண்ட நெபுகத்நேசர் யெருசலேமையும், ஆலயத்தையும் தரைமட்டமாக்கினார். யூதர்களின் அடையாளம் அழிந்துபோனதாக, யூதர்கள் உணர்ந்தனர். எரேமியாவின் புலம்பல் ஆகமத்தை ஒட்டிய வசனங்கள், இதிலும் காணப்படுகிறது. மொத்தத்தில், இந்த திருப்பாடல் அழுகை, புலம்பல், வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற பாடலாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற தண்டனைகளுக்கு என்ன காரணம்? என்பதை சிந்தித்ததின் வெளிப்பாடு தான், இந்த திருப்பாடல். தங்களுக்கு நேர்ந்திருக்கிற இவ்வளவு கொடுமையான சூழ்நிலைகளுக்கு யார் காரணம்? என்பதை ஒவ்வொருவருமே, துன்ப காலத்தில் சிந்தித்து பார்ப்பது இயல்பு. அதுபோலத்தான், வளமையாக, செழிப்பாக, மகிழ்வாக வாழ்ந்த நமக்கு, திடீரென்று ஏன் இந்த துன்பம்? என்கிற கேள்விக்கான காரணத்தை, திருப்பாடல் ஆசிரியர் காண முயல்கிறார். தாங்கள் கடவுள் முன்னிலையில் நீதிமான்களாக வாழவில்லை என்றாலும், இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்ற அளவுக்கு, தவறு செய்யவில்லை என்பது, ஆசிரியரின் திடமான நம்பிக்கை. ஒருவேளை, தங்களுடைய...

இயேசுவின் உருமாற்றம் !

இன்று நம் ஆண்டவரின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த சீடர்களில் மூவருக்கு மட்டுமே கிடைத்த ஒரு வியப்புக்குரிய அனுபவம் இந்த உருமாற்றம். இயேசுவின் மானிடத் தன்மை மறைந்து, அவரது இறைத் தன்மை, இறை மாட்சியை வெளிப்படுத்தப்பட்ட விவரிக்க முடியாத ஓர் அனுபவத்தை இந்த மூவரும் உயர்ந்த மலை மேலே கண்டனர். அத்தோடு, இயேசு இறைத் தந்தையின் அன்பார்ந்த மகன். அவருக்கு செவி மடுப்பது இறைவனுக்கே செவிமடுப்பதாகும் என்னும் இறைவனின் குரலையும் கேட்கும் பேறு பெற்றனர். இந்த உருமாற்றம் உடனடியாக இல்லாவிட்டாலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர்களின் இறைநம்பிக்கையை ஆழப்படுத்த உதவியது. இயேசு இறைமகனாய், மாட்சிமை நிறைந்தவராய் இருந்தும்கூட, இறைத் திருவுளத்துக்குப் பணிந்து அனைத்தையும் துறந்து, எளிய மானிடராய் வாழ்ந்தார் என்னும் உண்மையை இந்தச் சீடர்கள் எத்தனையோ நாள்கள் எண்ணி, எண்ணி வியந்திருப்பர். தமது பணியில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பர். நாமும் இன்று இயேசுவின் இந்த வியப்புக்குரிய எளிமையை, கீழ்ப்படிதலை, பணிவை...

”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”

திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 7 – 8 ”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்” இந்த திருப்பாடல் ஒரு சில தனித்தன்மைகளைப் பெற்ற திருப்பாடல். இருபத்திரெண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இருபத்திரெண்டு என்பது எபிரேய மொழியில் இருக்கக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு பிரிவும், எபிரேய எழுத்து வரிசையில் தொடங்கக்கூடியதாக இருக்கிறது. (தமிழில் ஆத்திச்சூடி பாடல் அமைந்திருப்பது போல…. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல்…) திருச்சட்டத்தின் புகழைப் பரப்பும் பாடல் என்றும் சொல்லலாம். இளைய தலைமுறையினருக்கான அறத்தையும், வாழ்க்கைநெறிகளையும் கற்றுத்தரும் பாடல். அவர்களது வாழ்க்கையின் மீதுள்ள அக்கறையினை வெளிப்படுத்தும் பாடல். திருச்சட்டம் என்பது கடவுள் வகுத்துக்கொடுத்தச் சட்டம். அந்த சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஆண்டவர் பணிக்கிறார். கடவுளுடைய சட்டம் நாம் தவறான பாதைக்குச் செல்வதிலிருந்து பாதுகாப்பு தருகிறது. அவரைப் பற்றிப்பிடித்து வாழ, அவரது வழியில் நடக்க நமக்கு பேருதவியாக...

எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 ”எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார் தான் நிலைத்து நிற்கமுடியும்?” இந்த திருப்பாடல் ஓர் ஆன்மாவின் திருப்பாடலாக அமைகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது இல்லத்திலிருந்து குருவானவர் எடுத்து வருவதற்கு முன்னதாகச் சொல்லப்படும் செப வழிபாட்டில் இடம்பெறும் பதிலுரைப்பாடலாகவும் இது அமைந்துள்ளது. வெறும் உலக காரியங்கள் சார்ந்தோ, தனிப்பட்ட, பொதுக்காரியங்கள் சார்ந்தோ அல்ல. உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசும் ஆன்மாவின் பாடல் என்று சொல்லலாம். மனவருத்தத்தை வெளிப்படுத்தும் ஏழு திருப்பாடல்களுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. தவறான வழியில் சென்றவர்கள் மீண்டும் திருச்சபைக்குள் சேர்க்கப்படுகிறபோது, பாடப்படும் பாடலாகவும் இது அமைந்துள்ளது. தவறான வாழ்க்கை வாழ்ந்து கடவுளை நாடிவருகிறவர்களும், இந்த பாடலை பாடிச் செபிப்பது பொருத்தமானதாக இருக்கும். கடவுள் முன்னிலையில் தன்னுடைய உண்மையான நிலையை, தன்னுடைய பலவீனத்தை, தான் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மனிதனின் பாடல்...