Category: Daily Manna

இன்றைய தொழுநோய் !

இன்றைய முதல் வாசகமும் (லேவியர் 13: 1-2, 44-46), நற்செய்தி வாசகமும் (மாற்கு 1: 40-45) தொழுநோயைப் பற்றிப் பேசுகின்றன. இயேசுவின் காலத்தில் மக்களால் மிகவும் அருவருக்கப்பட்ட அந்தத் தொழுநோயினின்று ஒரு மனிதரை இயேசு எவ்வாறு மீட்டார் என்பதையே நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரை தொழுநோயாளர்களின் நிலை ஒரே மாதிரிதான் இருந்தது. அவர்களது நோய்க்கு மருந்தில்லை. அவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டனர். தம் குடும்பத்தினரிடமிருந்தும், ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் பட்டியலிலே இருந்தனர். அப்படி இருந்த ஒரு மனிதரைத்தான், இயேசு துணிந்து தொட்டுக் குணப்படுத்தினார். இதிலே நமது கவனத்தைக் கவரும் ஒரு செய்தி என்னவென்றால், இயேசு அவரது உடலை நலப்படுத்தும் முன்னர், அவரது உள்ளத்தையும், ஆன்மாவையும் தொட்டார், நலமாக்கினார் என்பதுதான். இயேசு விரும்பியிருந்தால், அவரைத் தொடாமலே, ஒரு வார்த்தையினால் நலமாக்கியிருக்க முடியும். ஆனால், இயேசுவின் இந்த...

உதவிக்கரம் நீட்டுவோம்

இயேசு காதுகேளாதவருக்கு குணம் கொடுத்துவிட்டு கடவுளின் வார்த்தையைப் தெக்கப்போலி பகுதியில் போதித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மூன்று நாட்களாக இயேசுவோடு தங்கியிருக்கிறார்கள். யார் இந்த மக்கள்? விவிலிய அறிஞர் ஒருவர் அழகான விளக்கம் ஒன்று தருகிறார். மாற்கு நற்செய்தி 5வது அதிகாரத்தில், இயேசு கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த மனிதர் ஒருவரை நலமாக்குகிறார். அந்த மனிதன் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று விரும்பினான். இயேசுவோ அவரைப்பார்த்து, “உமது வீட்டிற்குப்போய் ஆண்டவர் உமக்குச்செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவித்து வந்தார், என்று பார்;க்கிறோம். இயேசுவோடு இப்போது இருக்கும் மக்கள், பேய்பிடித்திருந்த மனிதர் வழியாக இயேசுவைப்பற்றி அறிந்த மக்கள். அந்த மனிதர் சொன்னதை இப்போது நேரில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசு சீடர்களிடம் ஒரு ஆலோசனைக்கேட்கிறார். இது சீடர்களுக்கு ஒருவிதமான பயிற்சி. என்னதான் சீடர்கள் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று சொல்லி, அவர்களிடம் அப்போது இருக்கிற சூழ்நிலையை விவரிக்கிறார்....

நன்றாக யாவற்றையும் செய்கிறார்

காது கேளாதவரின் நிலைமை உண்மையிலேயே, மிக மிக கடினமானது. அவர்களின் நிலையும் தர்மசங்கடமானது. யாராவது அவர்களைப்பற்றிப் பேசினாலும், சிரித்தாலும், அவர்களைப்பற்றிப் பேசுவது போலவும், அவர்களைப்பரிகசிப்பது போலவும் தான் இருக்கும். அப்படிப்பட்டச் சூழ்நிலையில்தான் இந்த மனிதனும் இருந்திருக்க வேண்டும். கண் இல்லையென்றால் கூட, தங்களை யார் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியாமல் இருக்கும். ஆனால், தங்களைப்பற்றிப்பேசுவதை உணர்ந்தாலும், பதில் சொல்ல முடியாத நிலைமை உண்மையிலேயே பரிதாபமானது. இயேசு அந்த மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்கிறார். அவன் வாழ்வில்பட்ட வலிகளை இயேசு நிச்சயமாக உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான், அவனைத் தனியே அவர் அழைத்துச்செல்கிறார். அவனை ஒரு நோயாளியாக மட்டும் இயேசு பார்க்கவில்லை. அவனை ஒரு மனிதனாக, உணர்வுள்ளவனாகப் பார்க்கிறார். இயேசுவின் குணப்படுத்துகின்ற நிகழ்ச்சி, அவரை மக்கள் மத்தியில் ”நன்றாக யாவற்றையும் செய்கிறவராகக்” காட்டுகிறது. இயேசு நல்லது செய்ய வந்தார் என்பதைவிடு, நல்லதை மீட்க வந்தார் என்பது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், தொடக்கத்தில் கடவுள் இந்த...

வார்த்தைகள் – ஆன்மீக முதிர்ச்சியின் வெளிப்பாடு

யூதர்களுக்கு தங்களின் இனம் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே, அவர்கள் யூதர் அல்லாத புற இனத்து மக்களோடு திருமணஉறவு கொள்வதைத்தவிர்த்து வந்தனர். புற இன நாடுகளுக்குச்சென்று வந்தால், தங்கள் நாட்டிற்குள் நுழைகின்றபோது, காலில் படிந்திருக்கும் தூசியைத்தட்டிவிட்டுத்தான் தங்கள் நாட்டிற்குள் காலடி எடுத்து வைப்பர். புறவினத்தாரோடு உறவு ஏற்படுத்தினால் தாங்களும் தூய்மையற்றவர்களாகி விடுவோம் என்கிற எண்ணம் யூத மக்களிடையே இருந்தது. அவர்களுக்கு இறைரசில் இடமில்லை என்ற நினைப்பும் அவர்களிடையே மேலோங்கியிருந்தது. தூய்மைச்சடங்கு பற்றி விமர்சனம் செய்து, மறைநூல் அறிஞர்களின் வெறுப்பைச்சம்பாதித்த இயேசு, மற்றுமொரு விமர்சனத்தை இந்த நற்செய்தியிலே முன்வைக்கிறார். ஏறக்குறைய இப்போதைய தீண்டாமை ஒழிப்புதான், இயேசுவின் விமர்சனம். கிரேக்கப்பெண் இயேசுவிடம் வந்து, மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு வேண்டியபோது, இயேசு சொல்கிற வார்த்தை நமக்கு அதிர்ச்சியானதாக இருக்கிறது. காரணம் அவர் கிரேக்கப்பெண்ணை நாயோடு ஒப்பிடுகிறார். நாய் என்பது யூதர்களால் மட்டுமல்ல, கிரேக்கர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட விலங்கு. அப்படிப்பட்ட விலங்கோடு,...

தீட்டு மனிதருக்கு உள்ளேதான்…

தீண்டாமை என்னும் பாவம் இன்றும்கூட நமது சமூகத்தில் பழக்கத்தில் உள்ளது. வெவ்வேறு வடிவங்களில் அது தன்னை வெளிப்படுத்துகிறது. குறிப்பிட்ட மனிதரைத் தொடுவதோ, அவர்களோடு உண்டு, உறவாடுவதோ நம்மைத் தீட்டுப்படுத்துகிறது என்று எண்ணும் மக்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சாதிய வெறியும், சாதிய உணர்வும் (இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான், வெளிப்பாட்டில்தான் வேறுபாடு) கொண்ட கிறித்தவர்களும் இன்னும் இருக்கிறார்களே, பின் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரை நாம் எப்படிக் குறை சொல்ல முடியும். “வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது” என்கிறார் ஆண்டவர் இயேசு. எனவே, மனிதரில் சாதிய உணர்வோ, உணவில் விலக்கோ கொள்ளவேண்டிய தேவையில்லை. எல்லா உணவுப்பொருள்களும் தூயன என்று பொருள் கொள்கிறார் நற்செய்தியாளர். எல்லா மனிதருமே மாண்பு மிக்கவர்கள், சமத்துவம் மிக்கவர்கள் என்று இன்று நாம் பொருள்கொள்ள வேண்டும். “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்” என்கிறார் இயேசு. பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை,...