Category: Daily Manna

சுயநல சட்டங்கள்

“கொர்பான்“ என்கிற வார்த்தையின் பொருள் “பரிசு, கொடை, காணிக்கை“ என்பதாகும். அதாவது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். அது கடவுளுடைய உடைமையாகக் கருதப்படுவதாகும். கடன் கொடுத்த மனிதர், வாங்குவதற்கு வேறு வழியில்லாமல், கடைசியாக, நான் உனக்குக் கொடுத்த கடன் “கொர்பான்” என்றால், கடன்பெற்றவர் அந்த கடனை, கடவுளுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய மிகப்பெரிய நெருக்கடி நிலைக்கு உள்ளாகிறார். இயேசு வாழ்ந்தகாலத்தில், இது தவறாகப்பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, ஒரு பெற்றோர் தனது பிள்ளையிடத்தில், மிகவும் கஸ்டமாயிருக்கிறது என்று உதவிகேட்கிறபோது, அந்த பிள்ளை, எனது உடைமைகளை, நான் “கொர்பான்“ என்று கடவுளுக்கு கொடுத்துவிட்டேன். என்னிடம் உள்ளது எல்லாம், கடவுளுடையது. எனவே என்னால், எதுவும் செய்ய முடியாது, என்று பதில் சொல்கிற நிலை பரவலாகக் காணப்பட்டது. ஆனால், பெற்றோரைப் பேணிக்காப்பது, மோசே கொடுத்த பத்து கட்டளைகளுள் ஒன்று என்பதை, அவர்கள் மறந்துவிட்டார்கள். ஆக, கடவுளின் பெயரால், கடவுளின் சட்டங்கள் உடைக்கப்பட்டன. இப்படிப்பட்ட இரட்டை வேடதாரிகளை இயேசு கடுமையாகச்...

இறையருள் பெற நம்பிக்கையோடு மன்றாடுவோம்

இயேசு வாழ்ந்த காலத்தில் எத்தனையோ போதகர்கள், மாந்திரீகர்கள் புதுமைகள் செய்தாலும் இயேசு செய்த புதுமைகளையும், அற்புதங்களையும் பார்த்த மக்கள் மலைத்துப்போனதைப் பார்க்கிறோம். அவரைப்பற்றியப்பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியிருந்தது. மக்கள் அவரைப்பார்க்கவில்லை என்றாலும் கூட, அவர் அற்புதங்கள் செய்வதைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தனர். அவரைப்பார்க்காமலே அவரைப்பற்றிய ஒரு தோற்றத்தை தங்கள் மனதில் உருவாக்கியிருந்தனர். அதனால்தான், அவரைப்பார்க்கவில்லை என்றாலும் மக்கள் சொல்லும் அடையாளங்களை வைத்து அவர் நேரில் வந்தால் அடையாளம் காணும் அளவுக்கு இயேசு மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார். இன்றைய நற்செய்தியிலும் இப்படிப்பட்ட மக்களைத்தான் பார்க்கிறோம். இயேசுவை பார்த்தவுடன், இன்னார் என்று கண்டுணர்ந்து நோயாளிகள், உடல் நலம் குன்றியவர்களை அவரிடம் கொண்டுவருகிறார்கள். இயேசுவை தொட்ட உடனே அவர்கள் நலமடைந்ததாக நற்செய்தியாளர் கூறுகிறார். இயேசு கடவுளின் அருளால் நிரம்பியிருந்தார். இன்னாருக்கு அருள் கிடைக்கவேண்டுமென்று அவர் நினைத்தால் மட்டும்தான் அவருக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்றில்லை: நம்பிக்கையோடு மன்றாடுகிற ஒவ்வொருவரும் இயேசுவிடமிருந்து நாமே அருளைப்பெற்றுக்கொள்ளலாம் என்பதைத்தான் இது நமக்கு உணர்த்துகிறது....

உதவி செய்வோம்

இயேசுவைப்பற்றிய செய்தி சுற்றுப்புறமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. அவருடைய வல்லமை, நோயாளர்களைக் குணமாக்கும் ஆற்றல், அதிகாரம் மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டிருந்தது. அதை நிச்சயமாக மறைத்து வைக்க முடியாது என்கிற அளவுக்கு, மக்கள் இயேசுவைத்தேடி வர ஆரம்பித்தனர். இயேசு பேதுருவின் இல்லத்தில் இருப்பதைக்கேள்விப்பட்டு, ஓய்வுநாள் முடிகின்ற நேரத்திற்காக காத்திருந்து, ஓய்வுநாள் முடிந்தவுடன், நோயாளர்களை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். மூன்று இடங்களில் இயேசு பொதுவாக நோயாளர்களைக் குணப்படுத்துகிறார். 1. தொழுகைக்கூடம் 2. நண்பர்களில் இல்லம் 3. தெரு வீதி. எங்கே இயேசுவின் உதவி தேவை என்றாலும், அங்கே உதவி செய்வதுதான் இயேசுவின் பணியாக இருந்தது. மனிதத்தேவையை நிறைவேற்றுவதற்கு, அவர் நாளோ, நேரமோ, இடமோ, ஆளோ பார்க்கவில்லை. தேவையைப்பூர்த்தி செய்வதில் கவனத்தோடு இருந்தார். தேவையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் தனது உதவி கிடைக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியா இருப்பதை இன்றைக்கு நற்செய்தி தெளிவாக்குகிறது. உதவி என்பது நாளோ, இடமோ, ஆளோ பார்த்து செய்வதல்ல. தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்....

செபத்தின் மேன்மை

செபமா? உழைப்பா? இரண்டில் எது சிறந்தது? என்ற கேள்வி ஒவ்வொரு அருட்பணியாளருக்கும் எழக்கூடிய இயல்பான கேள்வி. ஒருபுறம் செபம் தான் சிறந்தது என்று, ஆலய வழிபாடுகளோடு நிறைவு காண்கிறவர்கள். மறுபுறம், மக்கள் பணிதான் இறைவன் பணி என்று, முழுக்க, முழுக்க உழைப்பிற்கும், சமுதாயப்பணிக்கும் முன்னுரிமை கொடுக்கக்கூடியவர்கள். இரண்டுமே அவசியம் என்பது நமக்குத்தெரிந்திருந்தாலும், ஏதாவது ஒன்றினை மையப்படுத்தி நமது வாழ்வை அமைத்துக்கொள்கிறோம். இன்றைய நற்செய்தி, இந்த கேள்விக்கு சிறந்த பதிலைத்தருகிறது. அதாவது, கிறிஸ்தவ வாழ்வை நாம் சிறந்த முறையில் வாழ்வதற்கு, கடவுளுடனான நமது உறவுதான் சிறந்த உந்துசக்தி என்பதுதான் அந்த பதில். ஒருவர் எவ்வளவுதான் சமுதாயப்பணிகள், மக்கள் பணியில் சிறந்து விளங்கினாலும், அவர் தனது வாழ்க்கையில் கடவுளுக்கோ, செபத்திற்கோ நேரம் கொடுக்கவில்லை என்றால், அவருக்கு நிச்சயமாக நிறைவு என்பதே இருக்காது. இயேசுவின் வாழ்வில் இது உறுதியாக வெளிப்படுகிறது. இயேசு பகலெல்லாம் கால்நடையாக நடந்து, பல இடங்களுக்குச் சென்று, போதித்தாலும், அவருக்கு களைப்பு இருந்தாலும்,...

ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்

இந்த திருவிழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின் தூய்மைச் சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால், இவ்வாறு அழைக்கப்பட்டது. இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நற்செய்தி பகுதியை அடிப்படையாகக் கொண்ட இவ்விழா, கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு அடுத்த 40 நாட்களில் கொண்டாடப்பட்டது. தொடக்கத்தில் இந்த திருவிழாவானது கி.பி400 ம் ஆண்டிலே, எருசலேமில் கொண்டாடப்பட்டதாக நாம் அறிகிறோம். அதன்பிறகு, ஐந்தாம் நூற்றாண்டில், இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக, மற்றொரு வரலாறு கூறுகிறது. பின்பு ஒளி பவனியும் இத்தோடு இணைக்கப்பட்டது. இது புறவினத்து மக்களின் பாவப் பரிகார சடங்கிற்கு பதிலாகச் சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஒளியேற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு பவனியாக ஊரைச்சுற்றி வந்தார்கள். இது இயேசு வரும்போது உலகில் உள்ள இருள் மறைந்துபோகிறது என்பதை உணர்த்துகிறது. இயேசு இதற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார். ஏனென்றால், இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறபோது, சிமியோன் இயேசுவை புறவினத்தார்க்கு வெளிப்பாடு...