Category: Daily Manna

நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் ஆயுதம் நிலைத்திராது

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இன்றும் நாம் வாழும் இந்த உலகத்தில் பொல்லாத பிசாசு நமக்கு எதிராக எத்தனையோ சோதனைகளை உண்டுபண்ணி நம்மை கடவுளிடம் இருந்து பிரிக்க பல முயற்சிகளை செய்துகொண்டுதான் இருக்கிறான்.ஆனால் நாம் அவனுடைய தந்திரங்களுக்கு விலகி நம்மை பாதுகாக்க அனுதினமும் ஆண்டவரின் அருளையும்,கிருபையையும் பெற்று சோதனையிலிருந்து நம்மை விலக்கி பாதுகாத்துக்கொள்வோம். நாம் இரவும், பகலும் ஆண்டவரின் திருச்சட்டத்தை சிந்தித்து நடந்து நம்மை காத்துக்கொண்டால் நற்பேறு பெற்றவர்களாய் திகழலாம். சங்கீதம் 1:2. ஆண்டவரின் வார்த்தைகளை கைக்கொண்டு நடந்தோமானால் எந்த ஆயுதமும்,நம்மை சேதப்படுத்தாது.நம்மை தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்த போர்க்கருவியும்,நிலைத்திராது. நம்மேல் குற்றம் சாட்டி தீர்ப்பு சொல்லும் நாவை ஆண்டவர் அடக்கி விடுவார்.இதுதான் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு அவர் அளிக்கும் உரிமைச்சொத்து. எசாயா 54:17. ஒருவேளை நொடிப்பொழுது நம்மை கைவிடலாம்.ஆனாலும் அவருடைய பேரன்பால் நமக்கு இரக்கம் காட்டுவார். ஏசாயா 54:7. நாம் எந்தவொரு காரியத்தை குறித்தும்,கவலைப்படாமல் நம் பாரத்தை...

நன்மையானதை தரும் ஆண்டவர்

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். நம் ஆண்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்த பொழுது கலிலேயா,மற்றும் யூதேயா நாடு முழுதும் சுற்றித்திரிந்து மக்களை சந்தித்து அவர்கள் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி பல நன்மைகளை செய்து வந்தார்.பகல் முழுதும் மக்களை சந்தித்து அவர்கள் விரும்பியதை கொடுத்து இரவு முழுதும் தமது பிதாவை நோக்கி வேண்டுதல் செய்ததாக வேதத்தில் வாசிக்கிறோம்.அதே ஆண்டவர் இன்றும் நம்முடன் கூடவே இருக்கிறார்.நம் தேவைகளை சந்திக்க காத்திருக்கிறார்.அவரிடத்தில் கேட்பவர்களுக்கு அவர் ஒருபோதும் இல்லை என்று சொல்லவே மாட்டார். அன்பானவர்களே இன்றும் நீங்கள் பலவித கஷ்டங்களை சந்திப்பவராக இருக்கலாம். வியாதியினால் கஷ்டம்,கடன் பிரச்சனையினால் கஷ்டம்,ஒரு நல்ல வேலை இல்லையே என்று கவலை,குடியிருக்க ஒரு வீடு இல்லையே என்று ஏங்கலாம்.எதற்காகவும் நீங்கள் மனங்கலங்க வேண்டாம்.இதோ நமக்கு நன்மைகளை தரும்படிக்கே ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில் வந்து நம்மைப்போல் பல கஷ்டங்களை அனுபவித்து,அந்த கஷ்டத்தின் வேதனையை உணர்ந்தவராய்,நாம் அதிலிருந்து...

அன்பின் தின சிறப்பு நிகழ்ச்சி

அன்பானவர்களே!உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான அன்பின் நல்வாழ்த்துக்கள். கடவுள் மனிதனை படைத்து அவன் இதயத்தில் அன்பு என்ற பூவை உருவாக்கி அந்த பூ அந்த மனிதனையும், அவனை சார்ந்த அனைவரையும் மணக்க செய்ய வேண்டுமாய் விரும்பி மனிதனின் இதயத்தில் அன்பை விதைத்தார். ஆனால் நாமோ பிறரை அன்பு என்ற மனம் கொண்டு கவர்ந்து செயல்படுவதை விட்டு, சுயநலம், தற்புகழ்ச்சி, பெருமை, வெறுப்பு, தன்னலம் என்று நமக்கே நமக்கு என்று வாழ்ந்து கடவுளின் வழியில் இருந்து பிரிந்து சென்று பல இன்னல்களை வருவித்து கொள்கிறோம். இன்று உலகம் முழுக்க உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் காதலர் தினம் அதாவது அன்பின் தினத்திற்கான அர்த்தம் புரியாமல் நம் இஷ்டத்துக்கு வாழ்ந்து பாவத்தை சேர்த்து கொள்கிறோம். காதல் என்றால் அன்பு. அந்த அன்பை நாம் எவ்வாறு கடைப்பிடித்து வாழ்கிறோம் என்று நாம் யோசித்து நம் மனசாட்சியில் குற்றமற்றவர்களாய் வாழ கற்றுக்கொள்வோம். காதலர் தினம் கொண்டாடுவது தவறு...

நம் நம்பிக்கையால் உலகத்தையே வெல்லலாம்.

இயேசுகிறிஸ்துவின் பேரில் நம்பிக்கை கொண்ட அன்பார்ந்த நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! நாம் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய் விடுவதும் அல்லாமல் தற்கொலை செய்யும் அளவுக்கு கூட போய்விடுகிறோம். ஆத்திரத்திலும், அவசரத்திலும் எடுக்கும் முடிவு நம்மை எங்கோ கொண்டு சென்று விடுகிறது. அதனால்தான் நம் ஆண்டவர் அவருடைய பிள்ளைகள் ஒருபோதும் தோல்வியை கண்டு மனம் சோர்ந்து போய்விடக் கூடாது என்று நமக்கு முன்மாதிரியான வாழ்வை வாழ்ந்து காண்பித்து அவருடைய உயிரையே கொடுத்து நம்மை மீட்டு காத்தும் வருகிறார். மானிட அவதாரம் எடுத்த நம் ஒவ்வொருவருக்கும் ஆண்டவராகிய கடவுள் அவருடைய திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே நாம் யாவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக ஆகும்படி நம்பிக்கையை நம் இதயத்தில் வைத்துள்ளார். அது குறையாதபடிக்கு காத்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.        ரோமர் 3:28. நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில்...

கடவுளின் மீட்பு

விண்ணுலகையும், மண்ணுலைகையும் படைத்து, விண்ணுலகை ஆள்வதற்கு தேவதூதர்களையும், மண்ணுலகை ஆள்வதற்கு தமது தொற்றத்தின்படியே மனிதனை உருவாக்கி, ஒரே இரத்தத்தால் தோன்றச் செய்து ஆசீர்வதித்து உலகம் தோன்றின காலமுதல் இன்றுவரை யதார்த்தமாய் வழிநடத்திய நம் கடவுளுக்கு மிகவும் பிரியமான அன்பானவர்களே!  நாம் பாவத்திலும், சாபத்திலும், விழுந்து போகாதபடிக்கு சாத்தானின் நரித்தனமான சோதனைகளிலிருந்து மீட்கவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகில் குழந்தையாய் அவதரித்து நம்முடைய சமாதானத்துக்காக, சந்தோசத்திற்காக அவர் தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுகிறிஸ்து தம்மை தாழ்த்தி சிலுவையை சுமந்து தலையில் முள்முடி சூட்டப்பட்டது எதற்காக? மனுகுலமே உங்கள் ஒவ்வொருவருக்காக. கிறிஸ்து என்பது ஒருவழி. அதுவும் ஒரேவழி அதுமட்டும்தான்.  திருத்தூதர்பணி 4:12;  யோவான் 14:6 ; அவராலே அன்றி மீட்பு யார் மூலமாகவும் இல்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். சிலபேர் அறியாமல் அவர் கிறிஸ்துவர்களுக்காய் சிலுவை சுமந்தார் என்று நினைத்து [நானும்  ஒருகாலத்தில் இதுமாதிரி அறியாமல் இருந்ததால் இதை உங்களுக்கு சொல்கிறேன்.] தங்களுக்கென்று ,ஒரு கல்லினாலோ அல்லது மரத்தினாலோ ஒரு தெய்வத்தை உண்டுபண்ணி வணங்கி அதற்கு பலி செலுத்துகிறார்கள். இந்த உலகத்தையே படைத்த கடவுளை நாம் படைக்க...

%d bloggers like this: