Category: Daily Manna

கண்ணின்மணிபோல் காக்கும் தெய்வம்

இயேசுவின் வார்த்தைகள் சீடர்கள் உள்ளத்தில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏதோ ஒரு சோகம் தங்களை ஆட்கொள்ளப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அது என்னவென்று அவர்களுக்குச் சொல்லத்தெரியவில்லை. ஆனாலும், அவர்களின் உள்ளங்களில் சோக ரேகை படர்ந்திருந்தது. இயேசு அவர்களின் உள்ளங்களை அறிந்தவராக, தனது போதனையைத்தொடங்குகிறார். அவருடைய போதனை அவர்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது. தான் அவர்களிடமிருந்து பிரியப்போவதை பல நேரங்களில், அவர்கள் அறியும்வண்ணம் மறைபொருளாகச்சொன்ன இயேசு, இப்போது தனது பிரிவு தவிர்க்க முடியாது என்பதையும், ஆனால், அதைப்பற்றி அவர்கள் அஞ்சத்தேவையில்லை என்பதை, அவர்களுக்கு தூய ஆவியானவரைக்கொடுப்பதன் மூலம் சொல்கிறார். சீடர்கள் இயேசுவின் பிரிவைப்பற்றிக் கவலைகொள்ளக்கூடாது. இயேசு நம்மை தனியே விட்டுவிட்டுச் செல்கிறவர் அல்ல. இயேசுவுக்கு நம்மைப்பற்றி நன்றாகத் தெரியும். எப்படியும் அவர் நம்மை ஏதாவது ஒருவகையில், பாதுகாத்துக்கொண்டே இருப்பார். இயேசுவின் பிரசன்னம் நம்மோடு ஏதாவது ஒருவகையில் இருந்துகொண்டே இருக்கும். அவர் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். நம்மை எந்த ஆபத்தும் நெருங்காமல் பாதுகாத்துக்கொண்டு இருக்கிறார்....

விண்ணகப்பேரின்ப வாழ்வு

“என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன” என்று இயேசு சொல்கிறார். தந்தை வாழும் இடம் என்று இயேசு சொல்வது விண்ணகம் பற்றியது. ஆனால், இங்கே நமக்குள்ளாக எழுகிற கேள்வி உறைவிடங்கள் பற்றியது. விண்ணகத்தில் இருக்கிற உறைவிடங்கள் என்றால் என்ன பொருள்? விண்ணகத்தில் பல உறைவிடங்கள் இருக்கிறதா? இயேசு ‘உறைவிடங்கள்’ என்று கூறுவதன் பொருள் என்ன? ‘உறைவிடங்கள்’ என்ற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்களை நாம் கொடுக்கலாம். அருள்நிலையின் பலபடிநிலைகளை இது விளக்குவதாக இருக்கிறது. மக்களின் வாழ்வுமுறைக்கேற்றபடி விண்ணக வாழ்வின் பலநிலைகளைக்குறிப்பது முதல் பொருளாகும். இரண்டாவது பொருள் விண்ணக வாழ்விற்கு தகுதிபெறக்கூடிய பல நிலைகளைக்குறிக்கிறது. ஒருவர் அவரது செயல்களின்படி மதிப்பிடப்பட்டாலும், அவரிடத்தில் இருக்கும் குற்றம், குறைகளுக்கேற்ப அவர் விண்ணகத்தின் உயரிய நிலையை சிறிது சிறிதாக அடைவார் என்பதின் பொருள்தான் இது. இறுதியாக, விண்ணகத்தில் அனைவருக்கும் இடமிருக்கிறது என்பதும் இதனுடைய பொருளாக இருக்க முடியும். எது எப்படி இருந்தாலும், இந்த உலகம் நிலையில்லாதது,...

கடவுள் நம்மோடு இருக்கிறவர்

இயேசு வாழ்ந்த காலத்தில், கடவுள் எங்கோ தொலைவில் இருக்கிறார் என்கிற ரீதியில்தான் கடவுளைப்பற்றிய பார்வை இருந்தது. கடவுள் காணமுடியாதவராக இருந்தார். கடவுள் தொடமுடியாதவராக இருந்தார். விடுதலைப்பயண நூல் 33: 12 – 23 வரை உள்ள இறைவசனங்களில், மோசே கடவுளைப்பார்த்த நிகழ்வு நமக்கு தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிகழ்வில் கூட, கடவுள் மோசேயிடம், “என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப்பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது…… நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக்காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார். அப்படியிருக்கிற சூழ்நிலையில், இயேசு வெகுஎளிதாக “என்னைக்காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” என்கிறார். இது எப்படி? இயேசு கடவுளைப்பற்றியப் புதிய பார்வையை நமக்குத்தருகிறார். கடவுள் எங்கோ இருக்கிறவர் அல்ல. எங்கோ இருந்துகொண்டு நம்மை அறியாதவர் அல்ல. நம்முடைய துன்பங்கள், துயரங்கள், வாழ்வின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியாதவர் அல்ல. படைத்ததோடு அவரது பணி முடிந்துவிடவில்லை. தொடர்ந்து நம்மோடு அவர் இருக்கிறார்....

விண்ணக உறைவிடம்

”என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன” என்று இயேசு சொல்வதற்கு பல வகையான விளக்கங்கள் தரப்படுகிறது. ஆரிஜன் என்பவரின் விளக்கத்தின்படி, மனிதன் இறக்கிறபோது, முதலில் அவர்களுடைய ஆன்மா, இந்த பூமியில் இருக்கிற ஓர் இடத்திற்குச் செல்கிறது அங்கு ஆன்மாக்களுக்கு பயிற்சியும், போதனையும் தரப்படுகிறது. அங்கு அவர்கள் தேர்ச்சிபெற்றவுடன், அந்த ஆன்மா விண்ணகத்திற்குச் செல்வதற்கு தகுதிபெறுகிறது. இப்படி ஒவ்வொருவரும் அவர்களின் அறிவுக்கு ஏற்றாற்போல, விண்ணகத்தைப்பற்றிய செய்திகளைத் தருகிறார்கள். ஆனால், சற்று இறையியல்பூர்வமாக இந்த இறைவார்த்தையைச் சிந்தித்தால், ”என் தந்தை வாழும் இடத்தில் பல உறைவிடங்கள் உள்ளன” என்பதற்கு, விண்ணகம் அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இந்த பூமியில் இருக்கக்கூடிய, மனிதன் தங்கக்கூடிய இடங்களில், சில சமயங்களில் அனைவருக்கும் போதுமான இடங்கள் இல்லாமல் இருக்கலாம். சத்திரங்களில் கூட்ட நெருக்கடியால், மக்கள் வெளியே நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம். ஆனால், விண்ணகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படாது. காரணம், அனைவரும்...

என் கை எப்போதும் அவனோடு இருக்கும்

”கை” என்பது ஒருவரின் துணையைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. நம்முடைய நண்பர்கள், நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர்கள், நமது துணையாளர்களாக இருக்கிறார்கள். இங்கே கடவுள் தன்னுடைய ஊழியருக்கு எப்போதும் துணையாக இருப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் தன்னுடைய பணிக்காக பல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். பலர், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை? என்று ஒதுங்கிச் செல்கிறார்கள். அவர்கள் ஒதுங்கிச் செல்வதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடவுளின் பணியைச் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அந்த பணியைச் செய்கிறபோது, பலவிதமான சோதனைகள், இன்னல்கள், இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே தான், பலர் அதனை விரும்புவதில்லை. கடவுளின் பணி என்று சொல்கிறபோது, குருக்களும், துறவறத்தாரும் மட்டுமல்ல, பொதுநிலையினரும் இந்த பணியைச் செய்ய கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் பணிவாழ்வில், கடவுளின் கரம், அதாவது அவரது துணை எப்போதும் இருக்கும் என்பதுதான், இந்த திருப்பாடல்(திருப்பாடல் 89: 1 –...