Category: Daily Manna

இறைவனின் குரல்

2 அரசர்கள் 24: 8 – 17 பாபிலோனி வரலாற்றை மாற்றி எழுதிய மிகச்சிறந்த அரசர் உண்டென்றால், நிச்சயம் அது நெபுகத்நேசராகத்தான் இருக்க முடியும். யோயாக்கின் அரசனின் நான்காவது ஆண்டு ஆட்சியில், இந்த படையெடுப்பு நிகழ்ந்தது. அது நெபுகத்நேசரின் முதலாவது ஆண்டு ஆட்சி. தன்னுடைய தந்தை இறந்ததால், படைப்பொறுப்பை ஏற்று, தன்னுடைய எல்கையை விரிவுபடுத்தத் தொடங்கினார். அவருடைய படை, தனக்கு கப்பம் கட்டும் நாடுகளின் படைவீரர்களைக் கொண்டிருந்த மிகப்பெரிய படையாக இருந்தது. நெபுகத்நேசர் யூதாவிற்கு எதிராக வெற்றி பெற்றாலும், அது அவர் பெற்ற வெற்றியாக யூதர்கள் கருதவில்லை. மாறாக, அது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த வெற்றியாகவே கருதினர். இஸ்ரயேல் மக்கள் எதற்காக, பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் வெற்றியை, ஆண்டவர் அவர்களுக்கு அளித்த வெற்றியாக கருதினர்? 2அரசர்கள் புத்தகத்தில்(24: 1, 2) பார்க்கிறோம்: “அவனது ஆட்சிக்காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின் மேல் படையெடுத்து வந்தான். எனவே, யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு...

இறைவன் காட்டும் பேரன்பு

எசாயா 49: 1 – 6 கடவுளுடைய மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இறைவனுடைய ஆலயம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு தகர்க்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொந்தநாட்டிலிருந்து, அவர்களுடைய கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய விசுவாசத்தை சோதிப்பதாக இருக்கிறது. விசுவாசத் தளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது. இன்னும் தாங்கள் கடவுளின் பிள்ளைகள் தானா? தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் தானா? கடவுள் தங்களை இன்னும் அன்பு செய்கிறாரா? இந்த அந்நிய தேசத்தில் நம் இறைவனைக் காண முடியுமா? அவரை வணங்க முடியுமா? என்கிற பல்வேறு கேள்விகள் அவர்களுடைய உள்ளத்தில் தோன்றி மறைகிறது. இந்த பகுதியில் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைகிறது. கடவுள் தன்னுடைய மீட்பரை அனுப்புவார் என்றும், அவர் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, நீதியை நிலைநாட்டுவார் என்றும் வாக்குறுதியை வழங்குகிறார். எசாயா 40 ம் அதிகாரம் முதல் 55 ம் அதிகாரம் வரை உள்ளவை, இரண்டாம் புத்தகமாகச் சொல்லப்படுகிறது. இந்த...

இறைவன் மீதான நம்பிக்கை

2 அரசர்கள் 19: 9 – 11, 14 – 21, 31 – 35, 36 அசீரிய மன்னன் சனகெரிபு, செதேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அவன் கடிதம் எழுதுகிறபோது, எத்தியோப்பிய மன்னன் திராக்கா, அவனுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். இந்த திராக்கா பிறப்பால் ஒரு எத்தியோப்பியன். தொடக்கத்தில் நபதாவில் தன்னுடைய ஆட்சியைத் தொடங்கிய அவன், மெல்ல மெல்ல எகிப்து முழுமைக்குமாக தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். பல போர்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். பல வெற்றிகளையும் பெற்றான். குறிப்பாக, அசீரியர்களுக்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டு வெற்றிகளைப் பெற்றான். கிரேக்கர்களால் மிகச்சிறந்த போர்வீரனாக அறியப்படுகிறான். கி.மு.699 ல், அவன் இன்னும் எகிப்தின் அரசனாகவில்லை. எத்தியோப்பியாவின் அரசனாகவே இருந்தான். ஆனால்,எகிப்தை தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே வைத்திருந்தான். அது அசீரிய மன்னன் சனகெரிபின் தாக்குதலுக்கு உட்பட்டதால், அதனைக் காப்பாற்றுவதற்காக, அசீரியர்களுக்கு எதிராக படைதிரட்டிக் கொண்டு வருகிறான். அதுதான், இந்த பகுதியில்...

இறைவனுக்கு கீழ்ப்படிவோம்

2அரசர்கள் 17: 5 – 8, 13 – 15, 18 வடக்கு மகாணத்தில் உள்ள, பத்து இனங்களும் வீழ்ந்து போகிற நிகழ்வுகளை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நெபாவின் மகனான் யெரோபாவின் தலைமையில் தொடங்கிய இந்த வடக்கு மகாண அரசு, 265 ஆண்டுகள் நீடித்தது. இந்த அதிகாரத்தின் முதல் ஆறு இறைவார்த்தைகள், இதன் அழிவைப்பற்றி நமக்கு விளக்குகிறது. அதற்கு பிறகான 25 வரை உள்ள வசனங்கள், அழிவுக்கான காரணத்தையும், கடவுள் அந்த அழிவைக் கொண்டு வந்ததை நியாயப்படுத்துவதையும், மற்றவர்களுக்கான எச்சரிக்கையாகவும் இது தருகிறது. அவர்களை அடக்கி ஆண்ட அரசுகளைப் பற்றி மற்ற இறைவார்த்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது. இந்த பகுதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம், இறைவனுடைய வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கவில்லை என்றால், அழிவு நிச்சயம் என்பதுதான். இறைவன் இந்த மனித இனத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார். முதல் மனிதன் ஆதாமைப் படைத்தபோதும், வெள்ளத்திலிருந்து...

வாழ்வின் சவால்களில் இறைப்பராமரிப்பு

கடவுளின் அன்பும், பராமரிப்பும் எந்த அளவுக்கு நம்மோடு இருக்கிறது என்பதை, எடுத்துரைக்கக்கூடிய அற்புதமான பகுதி. கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். நம்மோடு கூட இருந்து, நம்மைக்காட்டிக்கொடுக்கிறவர்கள், நம்மோடு நயவஞ்சகமாகப் பேசிக்கொண்டு, மறுதலிக்கிறவர்கள், நம்மை எப்போது சாய்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள், என்று பலவகையான மனிதர்களை நாம் பார்க்கிறோம். இந்த மனிதர்களுக்கு நடுவில் தான், நாம் வாழ வேண்டும். இவர்களோடு தான் நமது வாழ்வும் இணைந்து இருக்கிறது. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, இவர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தது போல இருக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பல தடங்கல்களை சந்திக்கிறோம். பல மனிதர்களின் மோசமான முகங்களை பார்க்கிறோம். ஒருகட்டத்தில் நாம் சோர்ந்து போகிறோம். பேசாமல், ஊரோடு ஒருவராக வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறோம். நாம் கொண்டிருக்கக்கூடிய மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம். இப்படியான...

%d bloggers like this: