Category: Daily Manna

மிகவும் முக்கியமான நபராக நீங்கள் மாறலாம்…

மத்தேயு 13:10-17 நாம் அனைவரும் நன்கு அறிந்தபடி, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உவமைகள் வாயிலாக போதித்தார். அவர் போதனைகள் அனைத்தும் நம்மை செதுக்கி சீராக்கி நல்வாழ்விற்கு இட்டுச்செல்ல. நம் உடலில் அழுக்குகள், ஆபத்துக்கள் வந்து சேராமல் அணை போட வேண்டும் என்பதற்காக. மிகவும் குறிப்பாக நம் உடலிலுள்ள மூன்று உறுப்புகளில் அழுக்குகள் வந்து சேராமல் நாம் கருத்தாய் கவனமாய் இருந்தோம் என்றால் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆர்ப்ரிப்பு, ஆனந்தம் வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கும். மிகவும் முக்கியமான நபராக நாம் மாறலாம். கண், காது மற்றும் இதயம் இந்த மூன்றையும் பயன்படுத்தி மிகவும் முக்கியமான மனிதராக நாம் மாறலாம். ஒவ்வொன்றின் படைப்பின் முக்கிய அர்த்தத்தை உணர்ந்து பயன்படுத்தினால் அதன் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும். 1. ஆற்றல் நிறைந்த கண்கள் கண்களைக் கொண்டு புத்தகங்கள் வாசித்து நல்ல அறிவாளியாக, அறிஞராக மாறலாம். நல்லதைப் பார்த்து கவிதை எழுதி கவிஞராக உருவாகலாம்....

உறவுகளோடு உறவாடுவதில் வித்தியாசம் நல்லதா?

மத்தேயு 12:46-50 நாம் எல்லா உறவுகளையும் சரிசமமாக பார்ப்பதில்லை. அறவே தெரியாதவர்களோடு நம் உறவு என்பது மிகவும் தூரமாக இருக்கும். ஓரளவு தெரிந்தவர்களோடு நமது உறவு ஓரளவு நெருக்கமாக இருக்கும். நண்பர்களோடு நம் உறவு பக்கமாகவே இருக்கும். நம் உடன்பிறப்புகளோடு நம் உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம் அது மிகவே நெருக்கமாக இருக்கும். நம் உறவுகளை வைத்து நம் பழக்கத்தில் வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறோம். இப்படிப்பட்ட வித்தியாசத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதை சிறிது மாற்றலாம் என ஒரு வித்தியாசமான சிந்தனையைக் கொண்டு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய தாய் மற்றும் சகோதரர்கள் வருகிறார்கள். அவர்களுடைய வருகையானது அவருக்கு சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது உள்ளம் உயர்ந்து போகவில்லை, குரலில் ஆனந்த சத்தம் கேட்கவில்லை. அவர் இயல்பாகவே இருந்தார். ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்தவில்லை. உறவுகளிலே எல்லாருக்கும் ஒரே முக்கியத்துவத்தை அவர் கொடுத்தார். அவருடைய குடும்பத்திற்கென்று...

நீங்கள் நினைப்பதை விட பெரியவர்

மத்தேயு 12:38-42 பழைய ஏற்பாடு நாம் நினைப்பதை விட கடவுள் மிகவே பெரியவர் என்பதை பல இடங்கிளில் சொல்லித் தருகிறது. தொடக்கநூல் 1:1லே வெறுமையுற்று இருந்த உலகை ஒரே ஒரு வார்த்தையினால் அழகான பூஞ்சோலையாக்கினார். வானிலிருந்து மன்னாவை பொழந்து வியப்புக்குரிய கடவுள் யாவே என்பதை மக்களுக்கு அறிவிக்கிறார். செங்கடலை இரண்டாகப் பிரித்து இஸ்ரயேல் மக்களுக்கான பசுமை வழிச்சாலையாக அதனை மாற்றுகிறார். இப்போது உங்களுக்கு புரிந்ததா? உங்கள் கடவுள் நீங்கள் நினைப்பதை விட பெரியவர், அதிக ஆற்றல் நிறைந்தவர். புதிய ஏற்பாடு நாம் நினைப்பதை விட இயேசு கிறிஸ்து மிக மிக பெரியவர் என்பதை சொல்லித் தராமல் இல்லை. ஐயாயிரம் பேருக்கு அதிசய உணவளிக்கிறார், காலூனமுற்றவரை காலூன்றி நடக்கச் செய்கிறார். பேச்சிழந்தவரை பேச வைக்கிறார், ஆடையின் விளிம்பைத் தொட்டவர் அதிசயமாய் சுகம் பெறுகிறார். இதைவிட இன்னும் சான்றுகள் நமக்குத் தேவையா? உங்கள் கடவுள் நீங்கள் நினைப்பதை விட பெரியவர், அதிக ஆற்றல் நிறைந்தவர்....

ஆண்டவரே! நீர் மன்னிப்பவர்

திருப்பாடல் 86: 5 – 6, 9 – 10, 15 – 16 இந்த உலகத்தில் மன்னிக்க முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். மன்னிப்பைப் பற்றி அறியாதவர்களைப் பற்றியோ, அதனை நம்பாதவர்களையோ நாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், திறந்த உள்ளத்தோடு, கடவுளுக்கு பயந்து வாழக்கூடிய, மன்னிப்பதற்கு முயற்சி எடுக்கக்கூடிய மனிதர்களை நாம் சிந்தித்துப்பார்ப்போம். ஒருவேளை நாம் அந்த நிலையில் இருந்தால், நம்முடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது? என்று சிந்தித்துப்பார்ப்போம். மன்னிப்பது எளிதான காரியமா? நிச்சயம் இல்லை. அதனை எல்லாரும் சொல்லிவிட முடியாது. திறந்த உள்ளத்தோடு முயற்சி எடுத்தவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும். அதில் இருக்கிற சிக்கல்களை அவரால் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்களாகிய நாம் நமக்கெதிராக செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளை மன்னிப்பதற்கு இவ்வளவுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு எதிராக நாம் எவ்வளவு தவறுகளைச் செய்கிறோம். அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறோம். வெறுப்புணர்வோடு நடந்து கொள்கிறோம். நன்றியில்லாதவர்களாக இருக்கிறோம்....

எதுக்கு சண்டை? எதுக்கு சச்சரவு?

மத்தேயு 12:14-21 கடவுள் படைத்த உலகம் சண்டையில்லா சத்தமில்லா சந்தோசமான உலகம். அவர் படைத்த அந்த உலகை நல்லது எனக் கண்டார். ஆனால் அவர் நல்லது எனக் கண்ட உலகம் இப்போது நல்லது என்று கூறும் தகுதியை இழந்து நிற்கின்றது. காரணம் என்ன? எங்கும் சண்டை. எங்குப் பார்த்தாலும் சத்தம். சந்தோசமில்லை சங்கடம் தான் அதிகம். சண்டையுடனும் சத்தத்துடனும் சந்தோசமில்லாமல் இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் அமைதியை உருவாக்க ஒவ்வொருவரும் இயேசுவை பின்பற்ற வேண்டும் என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவைப் பற்றி நற்செய்தி வாசகம் ”இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்” என அறிமுகம் செய்கிறது. இயேசுவைப் பின்பற்றி நாமும் சமாதானத்தை உருவாவோம். சச்சரவு இல்லாத சந்தோசமான உலகத்தை சமைப்போம். மனதில் கேட்க… வாழும் குறுகிய காலத்தில் சண்டை எதற்கு? என்னை விட்டு பிரிந்து போன உறவுளில் சமாதானத்தை கொண்டு வருவேன்? மனதில் பதிக்க… இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்....

%d bloggers like this: