Category: தேவ செய்தி

சட்டத்தை அனைவருக்கும் சமமாக்குவோம்

ஓய்வுநாள் என்பது எபிரேய மொழியின் “ஷாவத்” என்கிற வார்த்தையின் பொருளை மையப்படுத்தியதாகும். அதன் பொருள் “இளைப்பாறுதல்”, ”தவிர்த்தல்”, ”ஓய்வெடுத்தல்” என்பதாகும். யூதர்களின் ஓய்வுநாள் என்பது வெள்ளிக்கிழமை மாலை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை மாலை சூரிய மறைவு வரை இருக்கும். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள். ஏனென்றால், அன்றைய தினம் நம் ஆண்டவரின் உயிப்புநாள். இந்த ஓய்வுநாளில் செய்யக்கூடாதவை என்று, யூதர்களின் மறைநூல் அறிஞர்கள் பல ஒழுங்குமுறைகளை வகுத்திருந்தனர். இந்த ஒழுங்குகளில் ஒன்றுதான் இன்றைய நற்செய்தியில் வரும் ஓய்வுநாளில் கதிர்கொய்தல் பற்றியது ஆகும். அடுத்தவருக்கு சொந்தமான வயலில் கதிர்களைப்பறிப்பது தவறானது அல்ல. அது ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டது. அரிவாளால் பறிக்காதவரைக் குற்றமில்லை. எனவே, சீடர்களின் இந்த செயல் நியாயமானதாக, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் கதிர்களைப்பறித்தது ஓய்வுநாளில். அதுதான் ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது. இதைத்தான் பரிசேயர் குற்றப்படுத்துகின்றனர். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். இருந்தும் அவர்கள் அதைப்பறிக்கிறார்கள் என்றால், அதற்குக்காரணம், தாங்கமுடியாத பசி. பொறுத்து, பொறுத்துப்...

எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கட்டும்

யூதர்களின் நோன்பு என்பது ஒரு பெரிதான காரியம் அல்ல. காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நோன்பு நேரம். அதற்கு பிறகு வழக்கமான உணவு உண்ணலாம். பாரம்பரிய யூதர்களுக்கு நோன்பு என்பது வழக்கமான கடைப்பிடிக்கக்கூடிய ஒரு பழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாள் அன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருப்பார்கள். இன்னும் சில பாரம்பரிய யூதர்கள் வாரத்தில் இருமுறை அதாவது திங்களும், வியாழனும் இருந்தார்கள். இதைத்தான் இந்த நற்செய்தியிலும் பார்க்கிறோம். இயேசு நோன்பிற்கு எதிரானவர் அல்ல. ஏனென்றால் நோன்பு என்பது ஒருவன் தன்னையே அடக்கி ஆள, உதவி செய்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற உணர்வோடு, தன்னடக்கத்தோடு வாழத்தூண்டுகின்ற ஒன்றாகும். ஆனால், பரிசேயர்களை பொறுத்தவரையில், அவர்களின் நோன்பு சுய இலாபத்திற்கானதாக இருந்தது. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் வாய்ப்பாக, அவர்கள் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தங்களை மற்றவர்களைவிட உயர்வாக எண்ணுவதற்கும் நோன்பு ஒரு காரணமாக அமைந்தது. இதை இயேசு கண்டிக்கிறார். எந்தவொரு...

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப்போக்குபவர், என்று திருமுழுக்கு யோவான் இயேசுவைப்பற்றிச் சான்று பகர்கிறார். இயேசுவை எதற்காக ஆட்டுக்குட்டியோடு யோவான் ஒப்பிட வேண்டும்? என்று பார்த்தால், ஆட்டுக்குட்டியைப்பற்றி பழைய ஏற்பாட்டின் பார்வை நமக்கு தெரிய வேண்டும். ஆட்டுக்குட்டி என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் பாவம் போக்கும் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விலங்கு. விடுதலைப்பயணம் 28: 38 ல் வாசிக்கிறோம்: ‘ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.’ அதாவது இஸ்ரயேல் மக்களுடைய பாவம் போக்கும் பலியாக அன்றாடம் இது பலியிடப்பட்டது. அதேபோல் விடுதலைப்பயணம் 12 வது அதிகாரத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்திலே அடிமைகளாக இருந்தபோது ஆண்டவரின் கோபம் பார்வோன் மன்னன் மீது விழுவதை நாம் வாசிக்கிறோம். அப்போது எகிப்திய குடும்பங்களின் தலைமகன்கள் அனைவரும் இறக்க நேரிடுகிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை கதவு நிலைகளில் பூசியிருந்த இஸ்ரயேல் மக்களின் வீடும், பிள்ளைகளும் காப்பாற்றப்படுகிறார்கள். இவ்வாறு, ஆட்டுக்குட்டியின் இரத்தம்...

பொங்கல் 2017

அன்பார்ந்த இந்த இணையதள வாசகர் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பின் இனிய பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள். ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்னவென்றால் நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது; நான் உங்களுக்கு கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து வெள்ளாண்மை வைத்து அதை அறுவடை செய்யும் பொழுது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். உங்கள் சார்பாக ஏற்கத்தக்கதாக குரு அந்த தானியக் கதிர்க்கட்டினை ஆண்டவரின் திருமுன் ஆரத்திபளியாகவும், மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகவும்,செலுத்துங்கள், என்று லேவியர் 23ம் அதிகாரத்தில் 9 லிருந்து 14 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்த 23ம் அதிகாரம் பாஸ்கா, பெந்தகோஸ்தே, கூடாரப்பெருவிழா, புத்தாண்டுவிழா, பாவக்கழுவாய் நாள், ஆகிய சமயப் பெருவிழாக்கள் பற்றி கூறுகிறது.இந்த விழாக்களுக்கு மக்களைக் கடவுள் அழைத்து அவர்களை திருப்பேரவையாக ஓன்று சேர்க்கிறார். பாஸ்கா, என்றால் இஸ்ரவேலர் ஆடுமாடு மேய்ப்பவர்கள் என்ற முறையில் ஓர் ஆட்டை பலியாக்கும்...

“இறைவனின் செயல்களை மறவாதீர்”

இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் மையமாக இருந்தது யாவே இறைவான் மட்டும் தான். அவர் தான் அவர்களுக்கு எல்லாமுமாக இருக்கிறவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அந்த இறைவன் செய்த வல்லமையுள்ள செயல்களை அவர்கள் அடிக்கடி நினைவுகூர்ந்து, தங்களின் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தனர். அதனை ஒரு முக்கிய நிகழ்வாகவே, ஒவ்வொரு ஆண்டும் நினைத்துப்பார்த்தனர். அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் இங்கே நினைவுகூர்கிறார். இறைவன் செய்த செயல்கள் என்ன? அவற்றில் நினைத்துப் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? தொடக்கத்தில் இறைவன் இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைத்தார். மனிதன் கீழ்ப்படியாமையால் தவறு செய்தாலும், அவர்களை தொடர்ந்து பாதுகாப்பாக வழிநடத்தினார். தன்னுடைய விலைமதிப்பில்லா சொந்தமாக, இஸ்ரயேல் மக்களை தேர்ந்தெடுத்தார். உருத்தெரியாமல் இருந்த அவர்களுக்கு உருக்கொடுத்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை, விடுதலை வாழ்வை நோக்கி அற்புதமாக வழிநடத்தினார். பாலைநிலத்தில் நாற்பது ஆண்டுகள், யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் உணவளித்தார். தண்ணீர் வழங்கி, மக்களின் தாகம் தணித்தார். இயற்கையின்...

%d bloggers like this: