Category: தேவ செய்தி

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...

மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்

இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியமான வார்த்தைகள் இயேசுவின் பணிவாழ்வின் மையமாகக் கருதப்படுகிறது. மனம்மாற்றம், நற்செய்தி மற்றும் நம்பிக்கை என்பதுதான் அந்த மூன்று வார்த்தைகள். மனம்மாற்றம் என்பது பாவத்தை வெறுப்பது. இதுவரை பாவத்திலே வாழ்ந்தவன், பாவத்தோடு வாழ்ந்தவன், பாவியாக இருந்தவன், இப்போது பாவத்தை வெறுக்கிற நிலைதான் மனமாற்றம். இயேசுவின் இரண்டாம் செய்தி நற்செய்தி. இயேசு நற்செய்தி அறிவிப்பதற்காக வந்திருக்கிறார். அது என்ன நற்செய்தி? நம்பிக்கை தரும் நற்செய்தி. முற்காலத்தில், வாழ்வே நம்பிக்கையின்மையினால் நிறைந்திருந்தது. அனைத்தையும் எதிர்மறையாக சிந்திக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இயேசுவின் மண்ணக வாழ்வு நம்பிக்கை தரும் நற்செய்தியாக இருக்கிறது. அவரது போதனைகளும், அவர் செய்த புதுமைகளும் நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு, புதிய ஒளியைத்தருவதாக இருக்கிறது. இயேசு தரும் மூன்றாவது செய்தி நம்பிக்கை. நம்பிக்கை எதை வெளிப்படுத்துகிறது? நம்பிக்கை கடவுளின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, பராமரிப்பை உணர்த்துகிறது. கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கிறார் என்பதையும், அவரிடத்திலே நாம் நம்பிக்கை வைக்கிறபோது, நாம் மகிழ்வோடு...

ஆண்டவரே! உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்

திருப்பாடல் 85: 7, 9, 10 – 11, 12 – 13 இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்கள். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கிருந்த திரும்பி வந்த நிலையில் எழுதப்படுவதாக, விவிலிய அறிஞர்கள் நம்புகிறார்கள். கடவுளுக்கு எதிராக இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களுக்கு, பாபிலோன் சிறைவாசம் கடவுளின் தண்டனையாக அமைந்தது. கடவுளுக்கு எதிராக பாவம் செய்ததும், கடவுளின் குரலுக்கு செவிகொடுக்காமல் புறக்கணித்ததும் இந்த தண்டனைக்கான காரணங்கள். பாபிலோனில் இஸ்ரயேல் மக்கள் சந்தித்த கொடூரங்கள், கொடுமைகள் நிச்சயம் கடவுளின் அன்பை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இருந்திருக்கிறது, என்பதை இந்த திருப்பாடலின் வரிகள் நமக்கு உணர்த்துகிறது. புதிய விடியலை, புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கக்கூடிய இஸ்ரயேல் மக்கள், தங்களின் கடந்த கால கசப்பு வாழ்வை மறந்து, இனியாவது கடவுளின் மீது நம்பிக்கை வைத்து, தங்களது வாழ்வை வாழ. இது அழைப்புவிடுக்கிறது. கடவுளின் கோபம் தங்கள் மீது முழுமையாக தணிந்துவிட்டதா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு...

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்!

திருப்பாடல் 40: 6 – 7, 7 – 8, 9, 16 கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். கடவுளுடைய திருவுளம் என்ன? நாம் அவருக்கு பலி செலுத்த வேண்டும் என்பதா? அவருக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் செலுத்த வேண்டும் என்பதா? எது கடவுளுடைய திருவுளம்? கடவுள் ஒருநாளும் பலியை விரும்பியது கிடையாது. இரக்கத்தையே அவர் விரும்புகிறார். தனக்கு ஆபரணங்கள் வேண்டும். தங்க வைடூரியங்கள் வேண்டும், அதிகமான இறைச்சி வேண்டும் என்று கடவுள் விரும்புவது கிடையாது. தங்க நகைகள் கடவுளின் வெறும் படைப்பு. அதற்கு மனிதர்களாகிய நாம் தான், மதிப்பு கொடுக்கிறோம். விலைமதிப்பில்லாததைப் போல அவற்றை, நாம் வைத்திருக்கிறோம். ஆனால், கடவுளுக்கு அவை மதிப்பில்லாதது. ஆக, கடவுள் எதிர்பார்ப்பது இதுபோன்ற மதிப்பில்லாத பொருட்களை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்பதைத்தான். அவர்களுக்கு நாம் இரக்க காட்ட வேண்டும் என்பதைத்தான். நறுமணப்பலிகளை விட, எரிபலிகளை...

உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்

திருப்பாடல் 110: 1 – 2, 3, 4 இந்த திருப்பாடலில் ”ஆண்டவர், என் தலைவரிடம்..” என்ற வரிகள் யாரைச் சுட்டிக்காட்டுகிறது? என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள்ளாக எழுகிறது. இதற்கு பலதரப்பட்ட விளக்கங்கள தரப்பட்டாலும், மெசியா தான் இங்கே குறிப்பிடப்படுகிறார் என்று சொல்வது, சற்று பொருத்தமானதாக இருக்கிறது. ஏனென்றால், வலது பக்கம் என்று சொல்லப்படுவது, அரியணையின் முக்கியத்துவத்தை, வாரிசைக் குறிப்பிடுகிற சொல்லாக நாம் பார்க்கலாம். ஆக, மெசியா வருகிறபோது, இந்த உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. ஆண்டவருடைய துணைகொண்டு, மெசியா இந்த உலகத்தை வழிநடத்துவார். அவர் வழியாக இந்த உலகத்தில் நிகழக்கூடிய தீமைகளை அழித்து ஒழிப்பார். எதிரிகளிடையே அவர் ஆட்சிசெய்வார். அந்த நாட்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த முன்னறிவிப்பு இன்றைய நற்செய்தியிலும், கடந்த வாரத்தில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியிலும் நடப்பதை நாம் பார்க்கலாம். இயேசு தான் வரவிருந்த மெசியா என்பதற்கான பல்வேறு நிகழ்வுகள் நற்செய்தி நூல்களில் நமக்கு...