Category: தேவ செய்தி

ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 & 28 இறைவனுடைய அன்பை ஆழமாக உணர்ந்த ஆசிரியர், இறையனுபவத்தை பகிர்ந்து கொள்கின்ற பாடல் தான், இந்த திருப்பாடல். இறைவனின் அன்பை முழுமையாக அனுபவித்திருக்கிற ஒருவர், இறையன்பைப் பற்றி சொல்கிறபோது, அது வலிமைமிக்கதாக மாறுகிறது. அந்த வகையில், இந்த திருப்பாடலின் கடவுள் அன்பு அனுபவப்பூர்வமாக எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆண்டவரின் அன்புக்கு எல்லையே இல்லை, என்பதாக இந்த திருப்பாடல் சொல்கிறது. இறைவனின் அன்பை எப்படி திருப்பாடல் ஆசிரியர் அனுபவித்திருக்கிறார்? திருப்பாடல் ஆசிரியர் சாதாரண மனிதர். ஆடு மேய்க்கக்கூடியவர். ஆனால், சாதாரண நிலையிலிருந்து அவரை, இறைவன் தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுத்தார். அவரை அபிஷேகம் செய்தார். அவர் வழியாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அவரது தலைமுறை வழி வழியாக நிலைத்திருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இதனை, ஆசிரியரால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. சாதாரணமான நிலையிலிருக்கிற தனக்கு, இவ்வளவு கொடைகளை வழங்குவது ஏன்? என்ற...

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொள்வோம்

பேறுபெற்றோர் என்று சொல்லப்படுவது ஒரு சிறப்பு அந்தஸ்தைக் குறிக்கக்கூடிய சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. முக்கியமான ஒருவரின் அன்பையும், பாசத்தையும் பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று சொல்கிறோம். திருச்சபையில் கடவுளின் அன்பையும், அருளையும் பெற்று, சிறப்பு பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று போற்றுகின்றோம். அப்படி கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடக்கக்காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் பலர் தங்களது உயிரை இழந்தனர். கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இப்படிப்பட்ட பிண்ணனியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று பலர் தயக்கம் காட்டினா். தங்களது உயிரை இழந்து கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதனால் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன என்று கேட்கத்தொடங்கினார்கள். இதுதான் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் அழிக்க நினைத்தவர்கள் எதிர்பார்த்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியாளரின் இந்த வார்த்தைகள், அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டால், கடவுளின் அன்பும் இரக்கமும் அவர்களுக்கு கிடைக்கும் என்கிற அந்த எண்ணம் தான், அவர்களை மீண்டும்...

`

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு...

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக? அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது. இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை...

எல்லாத்தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்

லூக்கா 1: 47 – 48, 49 – 50, 53 – 54 அன்னை மரியாள் உள்ளப்பூரிப்போடு இந்த பாடலை பாடுகிறார். இந்த பாடல் பழைய ஏற்பாட்டில், எல்கானாவின் மனைவி அன்னா பாடிய பாடல். அந்த பாடலை, அன்னை மரியாளுக்கு ஏற்ற வகையில், லூக்கா நற்செய்தியாளர் பொருத்துகிறார். கடவுளின் மகளை கருத்தாங்கப் போகிற பூரிப்பு, அன்னை மரியாளின் உள்ளத்தில் நிரம்பியிருக்கிறது. அன்னை மரியாள் கலக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் பாடுகிறார். ”நான் கன்னி ஆயிற்றே? இது எங்ஙனம் நிகழும்” என்கிற சந்தேகம், வானதூதரால் நிவர்த்தி செய்யப்பட்டவுடன், கடவுளின் மகனைத் தாங்குவதற்கு இறைவன் தனக்கு தந்திருக்கிற, இந்த வாய்ப்பை எண்ணிப் பார்த்து, அவர் மகிழ்ச்சியோடு பாடுகிறார். இனி வரக்கூடிய எல்லா தலைமுறையினரும், அன்னை மரியாளைப் போற்றுவர் என்று, எதற்காக அன்னை பாடுகிறார்? அன்னை மரியாள் தன்னை தகுதியற்ற நிலைக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். ஒரு பெண்ணாக, சமூகத்தின் பொருளாதாரப் பார்வையிலும் சாதாரணமானவராக இருக்கிற...