Category: தேவ செய்தி

மூவொரு கடவுள் விழா

இணைச்சட்டநூல் 4: 32 – 34, 39 – 40 இறைவன் தரும் வாழ்வு இறைவன் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார், அந்த இறைவனுக்கு நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதுதான் இந்த பகுதி நமக்கு தரப்படுகிற செய்தி. இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில், இறைவன் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தனர். அதேவேளையில் அவர்கள் மற்ற நாட்டு தெய்வங்களையும் மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விட, தாங்கள் வழிபடுகிற இறைவன் வல்லமை மிகுந்தவர் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான், இந்த பகுதியாக அமைகிறது. கடவுள் மக்களிடமிருந்து எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை. அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பது மட்டும் தான். இறைவன் இஸ்ரயேல் மக்களை தன் சொந்த இனமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய திருவுளம். அதற்காகத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார்....

எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கட்டும்

யாக்கோபு 4:1-10 எண்ணங்கள் தூய்மையானதாக இருக்கட்டும் இந்த உலகத்தில் நடக்கிற அநீதி, அக்கிரமங்களுக்கு ஒருவருடைய தீய எண்ணமே காரணமாய் இருக்கிறது என்று யாக்கோபு சொல்கிறார். உலக நாடுகளிடையே அமைதி இல்லை. குடும்பங்களில் சமாதானம் இல்லை. மனிதர்களுக்கு நிறைவு இல்லை. அடுத்தவரின் வளர்ச்சி கண்டு பொறாமை எண்ணம் குடிகொள்கிறது. இவற்றிற்கெல்லாம் காரணம், ஒருவருடைய உள்ளத்தில் இருக்கிற தீய எண்ணமே. இந்த தீய எண்ணம் ஒருவருக்குள்ளாக எப்படி வருகிறது? ஒரு மனிதர் எப்போது சிற்றின்ப ஆசைக்கு அடிமையாகுகிறாரோ, இந்த உலகத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்போது அவருக்குள்ளாக தீய எண்ணம் வருகிறது. ஆக, ஆசைகளை விடுப்பதே நல்ல எண்ணத்தோடு வாழ்வதற்கான அடித்தளமாகும். ஆசையை எப்படி விடுப்பது? போதுமென்ற மனம் தான், ஆசையை துறப்பதற்கான திறவுகோல். நாம் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இருப்பதில் நிறைவு காண வேண்டும். இன்றைய நவநாகரீக உலகத்தில், மனிதர்களுக்கு நிறைவு இல்லை. ஒரு கோடி சேர்த்து வைத்தவனுக்கும் நிறைவு...

நம்பிக்கையின்மையை நீக்க உதவும்

தீய ஆவி பிடித்திருந்த இளைஞனின் தந்தை இயேசுவை நோக்கி, “உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்ட, இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்று சொல்ல, அச்சிறுவனின் தந்தை “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார். இயேசு அவரைக் குணமாக்கினார். அந்தச் சிறுவனின் தந்தையைப் போன்ற மனநிலையே நம்மிலும் இருக்கலாம். அப்படியானால், அவரைப் போன்றே நாமும் மன்றாட வேண்டும். பல நேரங்களில் நமது விசுவாசம், இறைநம்பிக்கை நிறைவானதான, முழுமையானதாக இல்லை. எனவேதான், இறைவனின் நன்மைத்தனத்தை, பேரன்பை நாம் சந்தேகிக்கிறோம். எனவே, நாமும் நமது நம்பிக்கையின்மை நீங்க உதவவேண்டும் என்று இறைவனிடம் மன்றாட வேண்டும். மேலும், இறைநம்பிக்கை என்பதே இறைவனின் ஒரு கொடைதான் என்பதையும் இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. அவரது அருளின்றி, இறைவன்மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது, அவரை அப்பா, தந்தாய் என்று அழைக்கவும் முடியாது....

பாவ மன்னிப்பு

இயேசுவின் சீடர்கள் கடைசி இரவு உணவு சாப்பிட்ட அந்த இடத்தில் சீடர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருந்த பயத்தைப்பற்றி நாம் விளக்கத்தேவையில்லை. யார் வந்தாலும், தங்களைக்கொல்லத்தான் வருகிறார்களோ என்று எண்ணியவர்களாக, சீடர்கள் கதிகலங்கிப்போய் .இருந்திருப்பார்கள் என்பது நாம் அனைவருமே உணரக்கூடிய ஒன்று. அப்படி பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிற சமயத்தில், இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, ”உங்களுக்குச் சமாதானம்” என்று சொல்கிறார். இங்கு சமாதானம் என்று சொல்வது, கடவுளின் அனைத்து ஆசீர்வாதங்களும் கிடைக்கும் என்ற பொருளில் அர்த்தப்படுத்தப்படுகிறது. இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியமான கொடை, மற்றவர்களின் பாவங்களை மன்னிப்பது. பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரத்தைக்கொடுக்கிறார். இங்கே, அதிகாரம் என்று சொல்லப்படுவது, சீடர்களுக்கான அதிகாரம் இல்லை. அந்த அதிகாரத்தை அவர்கள் தவறாகப்பயன்படுத்த முடியாது. அவர்கள் நினைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது. அவர்கள் நினைத்தால் தான், கடவுளின் மன்னிப்பு கிடைக்கும் என்று நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது. மாறாக, மன்னிப்புப் பெறுகிறவரின் மனநிலையைப்பொறுத்து, மன்னிப்பு அவர்கள் வழங்க வேண்டும். உண்மையிலே,...

நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்

திருப்பாடல் 11: 4, 5, 7 ”நேர்மையாளரையும், பொல்லாரையும் ஆண்டவர் சோதித்தறிகிறார்” ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று அறிவதற்கு, சோதனை செய்து பார்ப்பது மனிதர்களின் குணம். மிகப்பெரிய பொறுப்பை ஒருவரிடம் கொடுக்க விரும்பும் தலைவர், யாரிடத்தில் அதனைக் கொடுக்க விரும்புகிறாரோ, அவரை பலமுறை சோதித்திருப்பார். அந்த சோதனையில் எல்லாம், அவர் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே, அவரால் மிகப்பெரிய பொறுப்பை அவரிடம் கொடுக்கலாம் என்கிற எண்ணம் வருவதாக இருக்கும். இது மனிதர்களுக்குப் பொருந்தும் ஆனால், கடவுள் ஒருவரைச் சோதித்துப்பார்த்துதான் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது சோதித்து தான் அறிந்து கொள்ள வேண்டுமா? கடவுள் நேர்மையாளர்களையும், பொல்லாரையும் சோதித்து அறிகிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுளுக்கு ஒருவரை யாரென்று தெரிய, சோதித்து அறிய வேண்டியதில்லை. அப்படியென்றால், எதற்காக கடவுள் சோதித்தறிகிறார்? என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார்? கடவுள் அறிய வேண்டும் என்பதைவிட, மற்றவர்கள் ஒருவரை நேர்மையாளர் அல்லது பொல்லார் என்பதை அறிய வேண்டும்...