Category: தேவ செய்தி

பிணி தீர்ப்பதற்கான வல்லமை !

இயேசு போதித்துக்கொண்டிருந்தபொழுது முடக்குவாதமுற்ற ஒருவரை சிலர் கொண்டு வருகிறார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார் என்று இயேசுவைப் பற்றிச் சொல்கிறார் நற்செய்தியாளர் லூக்கா. பிணிகளைத் தீர்ப்பதற்கு ஒரு வல்லமை தேவை. அதைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே நோய்களைக் குணப்படுத்த முடியும். இயேசுவிடம் அந்த வல்லமை இருந்தது. காரணம், அவர் தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டிருந்தார். தந்தை இறைவனின் அன்புக்கு உரியவராக இருந்தார். அந்த வல்லமையைக் கொண்டே இயேசு பேய்களை ஓட்டினார். நோய்களைக் குணப்படுத்தினார். நம்மிடம் அந்த வல்லமை இருக்கிறதா? நோய்களைப் போக்கும், தீமைகளை விரட்டும், துயரங்களைப் போக்கி மகிழ்ச்சியைத் தரும் வல்லமை நம்மிடம் உண்டா? இருந்தால்தான், நாம் கிறித்தவர்கள். இல்லாவிட்டால், நாம் வலிமையற்ற பெயர்க் கிறித்தவர்கள் மட்டுமே. கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர் கிறிஸ்தவரே அல்லர். எனவே, நாமும் தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டு, சான்றுகளாய் வாழ்வோம். மன்றாடுவோம்: தூய ஆவியின் வல்லமையைக் கொண்டவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். பிணி போக்கும்...

இயேசுவின் வருகைக்காக தயாரிப்போம்

மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தியை இயேசுவின் பணிவாழ்விலிருந்து தொடங்குகிறார். அவரது குழந்தைப்பருவ நிகழ்ச்சிகள் தரப்படவில்லை. திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் இருந்த நிகழ்விலிருந்தும் தொடங்கவில்லை. மாறாக, இறைவாக்கினர்களின் கனவு வார்த்தைகளோடு தனது நற்செய்தியைத்தொடங்குகிறார். மாற்கு நற்செய்தியாளர் இறைவாக்கினரின் வார்த்தையோடு தொடங்குவதின் பொருள் என்ன? என்று பார்ப்போம். ”இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது. ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்கிற இந்த இறைவார்த்தை மலாக்கி 3: 1 ல் காணப்படுகிற வார்த்தைகள். மலாக்கி இறைவாக்கினர் காலத்தில், குருக்கள் தங்கள் கடமையில் தவறினார்கள். பலிப்பொருட்கள் இரண்டாம் தரமானதாகவும், குறைபாடுள்ளதாகவும் இருந்தது.ஆலயப்பணி அவர்களுக்கு களைப்பை தருவதாகவும், சுமையாகவும் இருந்தது. எனவே, தூதர் வந்து, இந்த வழிபாட்டு முறைகளின் குறைபாடுகளை அகற்றி, மீட்பர் வருவதற்காக வழியை ஆயத்தம் செய்வார் என்று, இறைவாக்குரைக்கப்பட்டது. அதாவது, மீட்பரின் வருகை தகுந்த தயாரிப்போடு இருக்க வேண்டும் என்ற செய்தியை நாம்...

அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்!

இந்த குருக்களின் ஆண்டில் குருக்களுக்காக மட்டுமல்ல, இறை அழைத்தலுக்காகவும் மன்றாட நாம் கடமைப்பட்டிருக்கிறோம். திருச்சபை ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தமது மீட்பரி;ன் பணி என்னும் சுற்றுமடலில் மூன்று விதமான நற்செய்தி அறிவிப்புப் பணிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1.நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களில் நற்செய்தி புதிதாக அறிவித்தல். 2. ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்ட விசுவாசத்தைப் பெற்ற மக்கள் அந்த விசுவாசத்தை இழந்து வாழும் இடங்களில் மறுநற்செய்தி அறிவித்தல். ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த நிலையில்தான் இன்று இருக்கின்றன. ஒருகாலத்தில் ஆசிய நாடுகளுக்கு மறைரப்பாளர்களை அனுப்பிய ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இன்று புதிதாக நற்செய்தி அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது. பிற நாடுகளிலும் விசுவாசத்தை இழந்துகொண்டிருக்கிற மக்கள் ஏராளம் இருக்கின்றார்கள். அவர்களை வென்றெடுக்க வேண்டும். 3. கிறித்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்து வாழ்வோரை உறுதிப்படுத்தும் மேய்ப்புப் பணி. இன்றைய நுகர்வுக் கலாசார வெறியும், பெந்தகோஸ்து சபைகளும் விரிக்கின்ற வலையில்...

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா

மரியாள் தன் தாய் அன்னம்மாளின் வயிற்றில் இருக்கிறபோதே, கடவுளின் அருளால் பாவ மாசின்றி பாதுகாக்கப்பட்டிருந்தாள் என்பதுதான், இந்த விழாவின் மையப்பொருளாகும். இது மரியாளின் மாசற்ற உற்பவத்தின் உன்னதமான நிகழ்வை கூருகின்றது. இதற்கு விவிலிய ஆதாரம் ஏதும் இல்லை. இது ஒரு மறையுண்மை. இதை கி.பி 1854 ம் ஆண்டு, டிசம்பர் 08 ம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ”மரியாள் அமல உற்பவ” என்ற அப்போஸ்தலிக்க மடலிலே பிரகடனப்படுத்தியுள்ளார். இது பெரும்பாலும் பாரம்பரியத்தையும், இறையியல் மற்றும் திருவழிபாட்டு மரபு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது ஆகும். மரியாள் கடவுளின் மகனைக் கருத்தாங்கியதால், மரியாளின் பிறப்புநிலையைப்பற்றி பல விவாதங்கள் எழுந்தன. இந்த கருத்து பரவத்தொடங்கியபோது, பல இறையியலாலர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இச்சிக்கலுக்கு கீழ்க்காணும் விளக்கம் மூலமாக தீர்வு காணப்பட்டது. டன்ஸ் ஸ்காட்டஸ் என்பவர் 1300 ம் ஆண்டு, கடவுளின் அருள் இரண்டுவிதங்களில் செயல்படுகிறது என ஒரு விளக்கம் கொடுத்தார். கடவுளின் காக்கும் அருள்...

பாறைமீது கட்டப்பட்ட வீடு

ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்பவர், செபிப்பவர் விண்ணரசு சேரமாட்டார். மாறாக, தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வார் என்னும் ஆண்டவரின் மொழிகள் இறை நம்பிக்கையுடைய அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வசனம் இது. நமது இறைப்பற்று சொல்லில் முடங்கி விடாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும். செப ஆர்வலர்களுக்கும் வெல்விளியாக இச்சொல் அமைந்துள்ளது. செபக்குழுக்களில் சேர்ந்து செபிக்கிறவர்கள் தங்கள் வாழ்வு தந்தையின் விருப்பப்படி அமைய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், செபம் பயனற்றதாக மாறிவிடும். நமது இறைப் பற்றும் பாறைமீது கட்டப்பட்ட வீடு போல அமையட்டும். மன்றாடுவோம்: அழைத்;தலின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். புனித சவேரியாரை மறைப்பணியாளராக அழைத்து, அவர் வழியாக நீர் எங்களுக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அவரது எடுத்துக்காட்டாலும், பரிந்துரையாலும், எங்கள் வாழ்வும் தந்தையின் திருவுளத்திற்கேற்ப அமைவதாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். — அருள்தந்தை குமார்ராஜா