Category: தேவ செய்தி

அவரைப் போல …!

என் மட்டில் கடவுளின் அன்பு அளவற்றது என்பதை மறந்து பிறர் செய்த தவறுகளை நான் மன்னிக்கின்றேனா என்பதை சிந்திக்க இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. மன்னிப்பு, நாம் இன்னும் ஆன்மீகத்தில் ஆழச் செல்ல உதவுகின்றது. மன்னிக்கின்றவனே வாழத் தெரிந்தவன், வலிமையானவன். ஆனால் பல நேரத்தில் நாம் பிறரை அடக்கி ஆளும் போதும், பிறர் என் பேச்சினை அப்படியே கடைபிடிப்பார்கள் என்று கூறுவதில்தான் பெருமை கொள்கிறோம். பிறரைப் பழி வாங்குவதே சிறந்த தலைமைப் பண்பு என்று எண்ணி வாழ்ந்து வருகிறோம். காரணம் இவ்வுலகம், குறிப்பாக மாயக் கவர்ச்சிகளைக் கொண்ட திரைப்படங்களின் கதைக்கரு அனைத்தும் பழிவாங்கும் படலமாகவே இருக்கின்றது. பழிவாங்குபவனே கதாநாயகன், மன்னிப்பவன் கோழை என்ற மனநிலைக்கு இன்றைய உலகம் நம்மைத் தள்ளி விட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி நம் முதுகில் தட்டி ‘திரும்பிப் பார் ராஜா’ என்று அன்போடு அழைக்கின்றது. உவமையில் பெரிய கடன் தொகையைக் கொண்டவன், அரசனிடம் என் கடனையெல்லாம்...

இயேசுவின் போதனையும், தாக்கமும்

இதுவரை கேட்டிராத போதனை யூதர்களை குழப்பத்திலும், இயேசுவின் மீது கோபத்தோடு தாக்கவும் செய்கிறது. தாங்கள் மட்டும் தான் இறையாட்சி விருந்துக்கு தகுதியானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு, இயேசுவின் போதனை புதிய போதனையாக இருக்கிறது. இதுவரை கேட்டிராத போதனையாகவும் இருக்கிறது. அவர்களுக்கு குழப்பம் என்பதைக் காட்டிலும், கோபம் அதிகமாக இருக்கிறது. யூதர்கள் மத்தியில் வாழ்ந்த போதகர்கள் அனைவருமே, யூதர்கள் மட்டும் தான், இறையாட்சி விருந்திற்கு தகுதிபெற்றவர்கள், என்கிற ரீதியில் போதித்துக்கொண்டிருந்தனர். அவர்களது போதனை மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் சொல்வது யூதர்களுக்கு மகிழ்ச்சியைத்தருவதாக அமைந்திருந்தது. ஒருவிதமான மயக்கத்தில் இருந்தனர். கேட்கக்கூடிய பொய்யான வாக்குறுதிகளுக்கு அவர்கள் கட்டுண்டு கிடந்தனர். அதனைத்தாண்டி அவர்களால் எதையும் சிந்திக்க முடியவில்லை. வாழ்வு வறுமையாக இருந்தாலும், எதிர்கால இறையாட்சி விருந்து அவர்களுக்கு மகிழ்வைத் தந்தது. ஆனால், அதற்கு தடையாக வந்தது, இயேசுவின் புதிய போதனை. தான் போதிப்பது மக்கள் மத்தியில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை,...

வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டம்

மத் 21 : 33-43, 45-46 கொடிய குத்தகைதாரர் பற்றிய இவ்வுவமை பரிசேயர்களுக்கும், தலைமை குருக்களுக்கும் அவருடைய காலத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இது இன்று நமக்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஆண்டவர் பலவழிகளில் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறார். ஆனால் நாம் தொடர்ந்து அவரை எதிர்க்கிறோம். அல்லது கண்டும் காணாதது போல் இருந்து அவரைக் கொலை செய்வதற்கு நாமும் காரணமாகி விடுகிறோம். மிக சுருக்கமாக இந்த உவமையின் விளக்கத்தினை அறிந்து கொள்வோம்.  திராட்சைத் தோட்டம் – நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை  சுற்றிலும் வேலி – திரு அவை (நம்மை பிற தப்பறைகளிலிருந்து பாதுகாக்க)  பிழிவுக்குழி – நமக்குள் மிகச் சிறந்தவற்றை இறைவன் வைத்துள்ளார். இதனை வெளியே கொண்டுவர சவால்களையும், தடைகளையும் நமக்குத் தருகிறார்.  காவல் மாடம் – புனிதர்கள், ஆயர்கள், குருக்கள் இவர்களைக் கொண்டு தொலை தூரத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார். நமது வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டத்தை இவ்வளவு...

பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6 நற்பேறு பெற்றவர் யார்? என்கிற கேள்வி திருப்பாடல் ஆசிரியரால் முன்வைக்கப்படுகிறது. அதாவது, இந்த உலகத்திற்கு வாழ்வதற்குத் தேவையான எல்லா ஆசீர்வாதங்களையும், கடவுளின் அருளையும் பெற்றவர் யார்? என்பது தான், இந்த கேள்விக்கான விளக்கமாக இருக்கிறது. இதற்கு பல வகையான வாழ்க்கைநெறிகளைப் பதிலாக வழங்கினாலும், ஆசிரியர் கொடுக்கிற முதல் பதில், பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர். யார் பொல்லாதவர்? இந்த உலகத்தில் சுயநலத்தோடு சிந்திக்கிறவர்கள் அனைவருமே பொல்லாதவர்கள் தான். அவர்களின் பார்வை குறுகியதாக இருக்கிறது. அவர்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள். தங்களது தேவைகள் எப்படியாவது, எந்த வழியிலாவது பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறவர். அவர்களது சொல்லை நாம் எப்போதும் கேட்கக்கூடாது என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். ஏன் பொல்லாதவரின் சொல்லைக் கேட்கக்கூடாது? ஏனென்றால், அவர்கள் எப்போதும், பொதுநலனுக்காகச் சிந்திப்பவர்கள் கிடையாது. அவர்களது வழிகள் தீயதாகவே இருக்கிறது. அவர்களது எண்ணங்கள் வறண்டு போன எண்ணங்களாகத்தான்...

உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்

திருப்பாடல் 31: 4 – 5, 13, 14 – 15, 16 தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிற ஒரு நம்பிக்கையாளரின் செபம் தான் இந்த திருப்பாடல். துன்பங்களுக்கான காரணத்தை அவரே ஏற்றுக்கொள்கிறார். அவர் செய்த தவறுகள் தான், இப்போது துன்பங்களாக அவர் முன்னிலையில் வந்திருக்கிறது. கடவுளை விட்டு விலகிய அவரது தவறு தான், இன்றைக்கு மிகச்சிக்கலான கண்ணியில் அவரை சிக்க வைத்திருக்கிறது. இந்த சிக்கலிலிருந்து தன்னை விடுவிக்கக்கூடியவர் கடவுள் மட்டும் தான், என்று அவர் தீவிரமாக நம்புகிறார். அந்த நம்பிக்கையை செபமாக எழுப்புகிறார். கடவுளிடத்தில் அவருடைய அருளை வேண்டுவதற்கு தகுதியில்லாத நிலையில் இருப்பதாக, ஆசிரியர் நினைக்கிறார். ஏனென்றால், கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் மறந்து அவர் வாழ்ந்திருக்கிறார். இப்போது கடவுளிடத்தில் தேவைக்காக திரும்பி வந்திருக்கிறார். அவர் கடவுளின் அருளைப் பெற தகுதியற்ற நிலையில் இருக்கிறார். தகுதியற்ற நிலையில் இருக்கிற அவருக்கு, கடவுள் தன்னுடைய அன்பை வழங்கினால் மட்டும் தான், இந்த துன்பத்திலிருந்து...