Category: Stories

Stories

மெல்லிய சத்தம்

இறைவாக்கினர் எலியாவின் காலத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரின் மனைவி ஈசபேல் எலியாவைக் கொல்ல நினைத்து அந்த ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி, எலியாவே நீர் என்னுடைய இறைவாக்கினர்களை கொன்றது போல நானும் நாளை இந்த நேரத்தில் உன் உயிரை எடுக்காவிடில் என் தெய்வங்கள் எனக்கு தண்டனை கொடுக்கட்டும் என்று சொல்லச் சொல்லி ஆள் அனுப்புகிறாள்.ஏனெனில் இதற்குமுன் பொய்யான இறைவாக்கினரை எலியா கொன்று போட்டார்.அதனால் அவளின் சொல்லுக்கு பயந்து எலியா தனது உயிரைக்காத்துக்கொள்ள தப்பி ஓடுகிறார்.அவர் பாலைநிலத்தில் ஒருநாள் முழுதும் பயணம் செய்து அங்கே ஒரு சூரைச்செடியின் அடியில் அமர்ந்துக்கொண்டு தான் சாகவேண்டும் என ஆண்டவரிடம் மன்றாடுகிறார். ஆண்டவரே! நான் வாழ்ந்தது போதும்,என் உயிரை எடுத்துக்கொள்ளும்,என சொல்லிவிட்டு உறங்கிவிடுகிறார். அப்போது வானதூதர் அவரை தட்டி எழுப்பி எழுந்து சாப்பிடு,என்று சொல்லி ஒரு தட்டில் அப்பமும்,ஒரு குவளையில் தண்ணீரும் இருக்கக்கண்டு அவற்றை சாப்பிட்டுவிட்டு மறுபடியும் படுத்து உறங்குகிறார். இரண்டாம்முறை தூதன் அவரை எழுப்பி எழுந்திரு நீ பயணம் செய்ய...

ஒரு குழந்தையின் ஏக்கம்

விமலா தனக்கு வந்த விசாவை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் பெரிதும் மகிழ்ந்தாள். ஏனெனில் இன்னும் ஒரு வாரத்தில் அவள் லண்டன் போகப் போகிறாள். அதற்கான விசா வந்து விட்டது. இனி என் வாழ்வில் எல்லாம் சந்தோசமே என்று பயணத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தாள். அதற்குமுன் இங்கு உள்ள எல்லா காரியங்களையும் ஒழுங்குபடுத்தவேண்டும் என்று அதற்கான யோசனையில் மூழ்கினாள். விமலா நன்கு படித்தவள். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புபவள். அவளின் பெற்றோர் எட்டு வருடங்கள் முன் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்தி வைத்தனர். நல்ல கணவர்.திருமணமான அடுத்த ஆண்டிலேயே அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இபொழுது தனது குழந்தைக்கு ஏழு வயதாகிறது. ஆனால் குழந்தை சிறிது ஊனமுடன் இருப்பதால் மற்ற குழந்தைகள் போல் அதுவால் ஓடியாடி விளையாட முடியாது. போன வருஷம் தனது கணவர் ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் மனது உடைந்துபோன விமலா மிகவும் கவலைக்குள்ளானாள். கணவனும் இல்லை. குழந்தையும் ஊனம் . அதனால் வாழ்க்கையே...

ஞானத்தைக் கொடுப்பது நம் ஆண்டவரே!

அரண்மனை தெருவில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அங்குள்ள ஒரு பள்ளியில் தனது பிள்ளைகளை படிக்க வைத்தார். ஒரு நாள் அந்த குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லும்பொழுது வழியில் ஒருவர் நிறைய கைவினைப் பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும் அந்த குழந்தைகள் தன் அப்பாவிடம் அந்த பொருட்களை எல்லாம் வாங்கித் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது அவர்களின் தந்தை அந்த பொருட்களை தனது குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும்படி சென்று அதன் விலையை கேட்டார். வியாபாரி விலையை சொன்னதும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்று நினைத்து தனது குழந்தைகளிடம் இந்த பொருட்களை நானே உங்களுக்கு செய்து தருகிறேன். நான் சிறு பையனாக இருந்தபொழுது இவைகளை செய்யும்படி கற்றுக்கொண்டேன். ஆனால் அதை தொழிலாக செய்யாமல் விட்டுவிட்டேன். ஆனாலும் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்று சொல்லி தனது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். பிறகு தன் குழந்தைகள் விரும்பிய பொருட்களை அவரே அழகாக செய்துக்கொடுத்தார். குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம்.ஏனெனில் விற்ற இடத்தில் பார்த்த மாதிரியே நம் அப்பா செய்துக்கொடுத்துவிட்டாரே!...

உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்

ரகு முதன் முதலாக வீட்டை விட்டு பிரிந்து ஹாஸ்டல் செல்ல அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான். + 2 வரைக்கும் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த ரகு காலேஜில் சேர்வதற்காக, அங்கு ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்காக கிளம்பினான். ரகு மிகவும் பொறுமையான, அன்பான மாணவன். ஏனெனில் அவனின் பெற்றோர் அவனை நல்ல முறையில் கடவுளுக்கு பயந்து நடக்கும் வழியில் வளர்த்து இருந்தார்கள். சிறிது பயத்தோடு முதல்நாள் வகுப்புக்கு சென்றான். அங்கு இவனோடு படித்த இரண்டு மாணவர்களும் இருந்தார்கள். அதனால் ரகுவிற்கு கொஞ்சம் தைரியமாக இருந்தது. இவர்கள் மூவரும் ஒரே அறையில் தங்கிக்கொண்டனர். அதனால் எங்கு போனாலும் மூவரும் சேர்ந்தே போவார்கள், வருவார்கள். இரண்டு மாதம் கழித்து லீவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு விடுமுறை முடிந்ததும் மறுபடியும் காலேஜிக்கு சென்றான். ஏதோ காரணத்தால் மற்ற இரண்டு பேரும் வரவில்லை. ரகு அலைபேசியில் அழைத்து கேட்டதற்கு இரண்டுநாள் கழித்து வருகிறோம் என்று சொன்னார்கள். அதனால் அன்று ரகு தனியாக ஹாஸ்டலில் இருந்து தன் வகுப்புக்கு போனான். மூன்றாம்...

உள்ளத்தில் உள்ள அன்பினால் குடும்பத்தை ஆதாயப்படுத்தலாம்

ஒரு ஊரில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த பெற்றோருக்கு 2 பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இவர்களின் மூத்த மகளுக்கு வரன் தேடி வந்தார்கள். அப்பொழுது பக்கத்து ஊரில் இருந்த ஒரு குடும்பம் இவர்களை அறிந்துக்கொண்டு அந்த மூத்த மகளை பெண் கேட்டு வந்தார்கள். அந்த பெண்ணின் தகப்பனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவர் விசாரித்த வரைக்கும் அந்த குடும்பமும் மிகவும் நல்ல குடும்பம் தான் என்று கேள்விப்பட்டார். அதனால் அந்த குடும்பத்துக்கு தன் மகளை கொடுக்க சம்மதித்தார். ஆனால் பெண்ணின் அம்மாவுக்கோ அதில் கொஞ்சம் விருப்பம் இல்லை ஏனென்றால் அந்த மாப்பிள்ளையோடு பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் கள்.அதனால் பெரிய குடும்பமாக இருக்கிறது. நம் மகள் அங்கு வாழ்க்கை பட்டு போனால் நிறைய வேலை இருக்கும், எல்லோரையும் கவனிக்கும் கூடுதலான பொறுப்பு இருக்கும், மகளுக்கு ஓய்வே கிடைக்காது என்று பல சிந்தனைகளால் பயந்தார்கள். ஆனால் அந்த பெண்ணின் தகப்பனோ இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்களும் ஒரு கிறிஸ்துவ குடும்பம், கடவுளுக்கு பயந்து நடப்பவர்கள்....

%d bloggers like this: