Category: இன்றைய சிந்தனை

தூய ஆவியின் ஆற்றல்

இயேசுவின் சீடர்கள் வருத்தமடைவதற்கு பல காரணங்கள் இருந்தது. அவற்றுள் முதன்மையான காரணம், இயேசு விரைவில் அவர்களை விட்டு பிரிய இருக்கிறார் என்பதுதான். தான் சீடர்களை விட்டுப்பிரிந்தாலும், அது சீடர்களுக்கு ஆதாயம் தான் என்பது இயேசுவின் எண்ணம். ஏனென்றால், இயேசுவின் பிரிவு அவர்களுக்குத் தூய ஆவியானவரின் துணையைத்தரும். உடல் என்பது வரையறைக்கு உட்பட்டது. உடலுக்கு என்று எல்லை இருக்கிறது. ஆனால், ஆவிக்கு எல்லை கிடையாது. எங்கும் செல்லலாம். உடலுக்கு இருப்பது போல, குறிப்பிட்ட காலம் தான் வாழ்வு என்பதெல்லாம் கிடையாது. எனவேதான் இயேசு இறந்து உயிர்த்த பிறகு தனது சீடர்களிடம் ”இதோ! உல முடிவுவரை எந்நாளுமு் நான் உங்களோடு இருக்கிறேன்” என்று மத்தேயு 20: 20 ல் சொல்கிறார். இந்த ஆவியின் ஆற்றல் தான் இயேசுவை நம்புகிற, இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்குகிற ஒவ்வொரு மனிதர்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறது. அவற்றிலெல்லாம் தனித்தன்மை வாய்ந்தது விவிலியம் என்று நாம் சொல்கிறோம். ஏன்?...

திக்கற்றவர்களாக விடமாட்டேன்

நாம் ஒருவர் ஒருவரை எவ்வாறு அறிமுகம் செய்கிறோம் என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம். அது இயேசு விரும்பும் சமூகத்தை உருவாக்கும். நாம் பொதுவாக ஒருவரை அறிமுகம் செய்யும்போது, இவர் படித்திருக்கிறார்; இவர் ……. சம்பளம் வாங்குகிறார்; இவர் இந்தப் பதவியில் இருக்கிறார் என்றுச் சொல்லி அறிமுகம் செய்கிறோம்.இவர் அன்புள்ளம் கொண்டவர்; ஏழைகளுக்கு இரங்குபவர்; நியாயம் நீதியோடு வாழ்பவர் என்று யாருடைய நற்பண்புகளையும் சொல்லி அறிமுகம் செய்வது மிக அரிதாகிவருகிறது. இறைவன் தன்னை வெளிப்படுத்தும்போதெல்லாம் தன்னை அன்புசெய்யும் இறைவனாக அறிமுகம் செய்கிறார். அன்புசெய்து அவர்களோடு குடிகொள்ளும் தெய்வமாக அறிமுகம் செய்கிறார். “நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்”(யோவான் 14:23). “திக்கற்றவர்களாக விடமாட்டேன்”(யோவான்14:18) “கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்”(1 யோவான் 1:9) நம்மை திக்கற்றவர்களாக கைவிடாத இறைவன், நம்மோடு குடிகொள்ள விரும்பியதால், இம்மானுவேல் இறைவனாக இவ்வுலகில் பிறந்தார். தொடர்ந்து நம்மை வாழ்விக்க விரும்பிய...

இயேசுவோடு இருத்தல்

”ஊரோடு ஒத்து வாழ்” என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். இது இந்த உலகக் கண்ணோட்டத்தை நமக்கு அறிவிக்கக்கூடிய சொற்றொடராக இருக்கிறது. இந்த உலகப்போக்கு எப்படி இருக்கிறதோ, அதற்கேற்ப நாம் வாழ வேண்டும். விழுமியம், மனச்சான்று போன்றவைகளுக்கு அங்கு வேலை இல்லை. நீதி, நியாயத்திற்கா நிற்க வேண்டும் என்பதல்ல. பத்து பேர் அநியாயத்தை, நியாயம் என்று சொன்னால், அதற்கு நாம் துணை நிற்பதுதான், இந்த பழமொழியில் பொருள். இயேசுவின் வார்த்தைகளைப் பின்பற்றினால், நாம் ஊரிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் இருப்போம். ஏனென்றால், இன்றைக்கு 99 விழுக்காடு மக்கள் ஊரோடு ஒத்துவாழ பழகிவிட்டார்கள். புதிதாக நாம், விழுமியங்களுக்கு ஆதரவாகப் போராடுகிறபோது, நாம் தனித்து விடப்படுவோம். மற்றவர்களிடமிருந்து விலக்கி வைக்கப்படுவோம். அப்படி இருக்கிறபோது, நாம் கவலைப்படுவதற்கு பதிலாக மகிழ்ச்சி அடைய வேண்டும். காரணம், நாம் இயேசுவின் அருகில் இருக்கிறோம். இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். உண்மையை எடுத்துரைத்தார். அவரை இந்த அதிகாரவர்க்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால், அவர் கவலைப்படவில்லை....

வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்

ஒரு மரத்தை நாம் நடுகிறோம்? எதற்காக? அதிலிருந்து பயன் பெறுவதற்காக, பலன் பெறுவதற்காக. எதை நாம் செய்தாலும், அதிலிருந்து பலன் எதிர்பார்க்கிறோம். இந்த உதாரணத்தைத்தான் நமது வாழ்விற்கு ஒப்பிட்டு இயேசு இன்றைய நற்செய்தியில் (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17) பேசுகிறார். ”நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இந்த இறைவார்த்தையில் இரண்டு அர்த்தங்களை நாம் பார்க்கலாம். 1. கனி தர வேண்டும். 2. அந்த கனி நிலைத்திருக்க வேண்டும். சீடர்களை இயேசு அழைத்தது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். சீடர்கள் அனைவரும் பலன் தர வேண்டும். சீடர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதாவது சீடர்கள் நற்செய்தி அறிவிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நற்செய்தி மக்களுக்கு போய்ச் சேர வேண்டும். அந்த நற்செய்தி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, போதிக்கக்கூடிய சீடர்களின் வாழ்வும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த...

அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

எருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, எருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் (திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5) இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக் கொள்ள வேண்டும். அந்த இல்லத்தில்...

%d bloggers like this: