Category: இன்றைய சிந்தனை

ஆண்டவரே இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்

திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 10 – 11, 12, 15 இரக்கத்தின் பரிமாணங்களாக நாம் பலவற்றைப் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் பரிமாணங்களும் முக்கியமான ஒன்று மன்னிப்பு. அந்த மன்னிப்பு பற்றிதான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொதுவாக, நாம் கடவுளிடத்தில் செபிக்க வருகிறபோது, நமது மனநிலை எப்படிப்பட்ட மனநிலையாக இருக்கிறது? ஒருபோதும் மன்னிப்பிற்காக நாம் செபிப்பது கிடையாது. கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்காக மன்றாடுவது கிடையாது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் கடவுளிடம் செபிக்கிறோம், கடவுளைப் புகழ்கிறோம். ஆக, தேவையை நிறைவேற்றுவது தான், நமது செபத்தின் மையக்கருத்தாக இருக்கிறது. ஆனால், இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் நாம் செபிக்க வேண்டும். அதனையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. இந்த திருப்பாடலை “மன்னிப்பின் பாடல்“ என்று நாம் சொல்லலாம். கடவுளின் மன்னிப்பிற்காக, கடவுளின் அருளுக்காக, தாவீது கதறிய பாடல் தான் இந்த திருப்பாடல். இந்த...

நெருக்கமாகப் பின்பற்ற

(லூக்கா 5 : 27-32) இயேசு லேவியைத் தன்னைப் பின்செல்லுமாறு அழைத்தது இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றது. இயேசு பாவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார், காணாமல் போன ஆட்டினைத் தேடி வருகிறார் என்பதை மட்டுமன்று, பாவியெனக் கருதப்பட்ட லேவி எவ்வாறு இயேசுவைப் பின்பற்றினார் என்பதே இத்தவக்காலத் தொடக்கத்திலிருக்கும் நமக்கான பாடம். முதல் சீடர்களை அழைத்த போதும் லேவியைப் போன்று, “அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்கள்” என்பதை அறிந்து கொள்ள முடியும். லேவி இஸ்ரயேல் மக்களிடமிருந்து அநியாயமாக வரிவசூலித்து உரோமை அரசுக்கு அளித்ததால் பாவியெனக் கருதப்பட்டார். மொத்தத்தில் அனைவரும் அவரை ஒதுக்கி வைத்தனர். அவரை எதிரியாகக் கூட கருதக் கூடாது என்பதில் தெளிவாயிருந்து அவரைப் பாவி என்று முத்திரை குத்தினர். இன்றும் நம்மில் சிலரை ஆன்டி-இந்தியன்;, சமூக விரோதிகள் என்று முத்திரை குத்துவது யூதர்களின் மனநிலையே. இப்படி அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படுபவரையே ஆண்டவர் அழைக்கின்றார். அவர்களுடைய வீட்டிற்குச் சென்று விருந்து உண்ணுகின்றார். இதன் காரணம் லேவி...

நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை

திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 16 – 17 நொறுங்கிய உள்ளம் என்பது என்ன? ஒருவர் செய்த நன்மைகளை மறந்து, அவருக்கு எதிராகச் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து, மனம் வருந்துகின்ற உள்ளமே நொறுங்கிய உள்ளம். நன்மை செய்தவருக்கு எதிராகச் செய்த தவறுகளை நினைத்துப்பார்க்கிறபோது, குற்ற உணர்வுகள் மேலோங்கி, தன்னையே வெறுக்கக்கூடிய மனநிலை, இவ்வளவுக்கு கீழ்த்தரமாக இருந்திருக்கிறோமே என்று கழிவிரக்கம் கொள்கிற நிலை தான், நொறுங்கிய உள்ளம். தனக்கு மன்னிப்பு கிடையாதா? தான் தவறு செய்தவர், தன்னுடை பலவீனத்தைப் புரிந்துகொண்டு தனக்கு மன்னிப்பு வழங்கிட மாட்டாரா? என்று வேதனையோடு, மனத்தாழ்மையோடு, ஏக்கத்தோடு காத்திருக்கிற நிலை தான் நொறுங்கிய உள்ளம். திருப்பாடல் ஆசிரியர், நொறுங்கிய உள்ளத்தினராகக் காணப்படுகிறார். தன்னுடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்த இறைவனுக்கு எதிராக, தான் தவறுகளைச் செய்துவிட்டேனே, நன்றி உணர்வு இல்லாமல் வாழ்ந்துவிட்டேனே என்று வேதனைப்படுகிறார். அந்த நொறுங்கிய உள்ளத்தோடு கடவுளை ஏறெடுத்தும் பார்க்கத்...

இழப்பதில் பெறுகிறோம்

லூக்கா 9:22-25 நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வு, நம்மை நாமே பாதுகாத்து வைத்துக் கொள்வதற்காக அல்ல. பிறருக்கும் கடவுளுக்கும் ஈந்தளிப்பதற்காகவே என்ற சிந்தனைக்காக இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது. பிறருக்காக வாழ்தல் மனித இனத்திற்கு மட்டுமே சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் பிறருக்காகவே பிறக்கின்றன அல்லது தோன்றுகின்றன எனலாம். பிறர்க்காகப் பிறந்த நாம் மட்டுமே, அனைத்தையும் நமக்காக சேர்த்து வைக்கின்றோம் என்ற எண்ணத்தில் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு மாறாக ஒரு நபர் தன் உயிரையும் உடமையையும் பொருட்படுத்தாமல் எதையும் சேகரிக்காமல் பிறர்க்காகவும், இந்த குமூகத்திற்காகவும் உழைத்தார் என்றால், அவர் உடல் காலமாகினாலும் அவரது உயிர் காலாவதியாகாமல்; மக்கள் மனதில் நின்று என்றும் வாழ்வார். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அவர் இழப்பதை வேறு வாழ்வில் பெற்றுக் கொள்கிறார் எனலாம். இவ்வாறு பிறர் நலத்திற்காக நாம் உழைக்க முன்வரும் பொழுது நமது சுயபற்று ஐம்புலன்களின்...

தன்னிலன்பு, பிறரன்பு, இறையன்பு

மத்தேயு 6:1-6, 16-18 தவக்காலம் – திருநீற்று புதன் தவக்காலத்தைத் துவங்கும் இந்தப் புனிதமான நாளிலே, நம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்கத் திரு அவை அழைக்கின்றது. இந்த அருளின் காலத்தைக் கடவுளின் கொடையாகவும், அவரின் பேரிரக்கத்தின் பரிசாகவும் ஏற்றுக் கொள்வோம். கிறித்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து, நம் பாவங்களுக்கு மன்னிப்பையும், பரிகாரத்தையும் செய்ய முயற்சிப்போம். அதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள நாம் மூன்று பண்புகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். 1. ஈதல் : தருமம் சாவினின்று நம்மைக் காப்பாற்றும், எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை நிறைவுள்ளதாக்கும். (தோபி – 12:9) ஈதல் நாம் பிறரன்பில் வாழ்ந்திட நம்மை அழைக்கின்றது. ஈயென்று கேட்பவனுக்குக் கொடுப்பது மட்டுமன்று நாமே வலியச் சென்று வறியவரைத் தேடிக் கொடுப்பதினால் மட்டுமே இது முழுமை பெறும். 2. செபித்தல் : இன்று முதல் நாற்பது நாள் நாம் செபத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு...