Category: இன்றைய சிந்தனை

நிபந்தனையில்லா நம்பிக்கை….

மாற்கு 8: 11-13 ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு அதுவும் யூதர் அல்லாதவர்களுக்கு பலுகி கொடுத்ததை அறிந்த பரிசேயர்கள் அவநம்பிக்கையோடு இயேசுவிடம் வாதிட வருகின்றனர். அப்பங்கள் என்றவுடன் அவர்களது விவாத அறிவுக்கு எட்டியது பாலைவனத்தில் மன்னா பொழியப்பட்ட நிகழ்வு. இந்த இஸ்ரயேல் இனம் இவ்வாறு இறைவனைச் சோதிப்பதும், நிபந்தனை விதிப்பதும் புதிதல்ல. ( காண்க வி.ப 17 : 7, எண் 14: 11-12) இதனால் அவர் “பெருமூச்சு” விடுகிறார். இந்த பெருமூச்சு என்பது விவிலிய மொழியில் “இறப்பின் மொழி, விரக்தியின் மொழி (டுயபெரயபந ழக னநயவா) (காண்க யோவான் 19: 30) இவர்களைத் திருத்தவே முடியாது என்ற எண்ணத்துடன் உங்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படவே மாட்டாது என்று கூறி அங்கிருந்து விலகிச் செல்கிறார். இவர்களுக்கும் இயேசுவினை பாலைவனத்தில் சோதித்த சாத்தானுக்கு எவ்வித வேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. காரணம் அவனும் கூறினான். “கல்லை அப்பமாக்கு, கோபுரத்தினின்று குதி” என்று சோதித்தான். இன்று...

ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 17 – 18, 33 – 34 இன்றைய திருப்பாடல் திருச்சட்டத்தைப்படி நமக்கு அறிவுரை கூறக்கூடிய பாடலாக அமைகிறது. திருச்சட்டம் என்பது என்ன? அது கடவுளின் சட்டம். அது கடவுள் கொடுத்திருக்கிற, அமைதியாக, நிறைவோடு வாழ கடவுள் கொடுத்திருக்கிற ஒழுங்குமுறை. நம்மை பக்குவப்படுத்தக்கூடிய வழிமுறைகள் அடங்கிய தொகுப்பு. நாம் கடவுளின் அரியணை நோக்கிச்செல்ல உதவும் வழித்தடம். வாழ்வைக் காட்டக்கூடிய வழி. கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், வாழ்வின் முழுமையான நிறைவை நாம் பெற்றுக்கொள்வதற்கு இதுதான் ஒரே வழி. கடவுளின் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே போதும், கடவுள் நம்மை வழிநடத்துவார் என்கிற நம்பிக்கையை இது நமக்கு முழுமையாக உணர்த்துகிறது. அதனைக் கடைப்பிடிப்பதற்கு நாம் கடவுளிடம் பலத்தைக் கேட்க வேண்டும். எந்தவொரு நன்மையான செயலையும் செய்கிறபோது, நமக்கு நிச்சயம் பலவிதமான சங்கடங்கள் வரும்....

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்

திருப்பாடல் 90: 2, 3 – 4, 5 – 6, 12 – 13 ஒருவரின் துன்பநேரத்தில் தான், கடவுள் செய்திருக்கிற அளவற்ற நன்மைகள் நமக்கு நினைவுக்குள் வரும். அந்த நிலையைத்தான் தாவீது அரசர் வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கிறார். கடவுளின் பலத்தையும், வல்லமைமிக்க செயல்களையும் முழுமையாக அறிந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். கடவுளின் வல்லமையை அவர்கள் மட்டும் தான், முழுமையாக வெளிப்படுத்த முடியும். அந்த அளவுக்கு கடவுள் அவர்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். இஸ்ரயேல் மக்களின் நன்றிகெட்டத்தனம் அவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தைக்கொடுத்திருக்கிறது. அந்த தருணத்தில் தான், இந்த திருப்பாடல் எழுதப்படுகிறது. கடவுள் மீது இஸ்ரயேல் மக்கள் வைக்க வேண்டிய நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. கடவுளை தலைமுறைதோறும் புகலிடமாக இருக்க இந்த பாடல் பணிக்கிறது. நம்பி வந்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடிய இடம் தான் புகலிடம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை நம்பிவந்தால், அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தால், கடவுள்...

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 32: 1 – 2, 5, 6, 7 கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் முழுமையாகப் பெற்றவர் தாவீது அரசர். உரியாவின் மனைவி பத்சேபாவுக்கு எதிராக பாவம் செய்தபோது, தாவீது கடவுளால் தண்டிக்கப்பட்டார். அவரது குழந்தை இறந்துபோனது. ஆனால், தாவீது தான் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்து, அழுது கடவுளிடம் மன்றாடினார். தனது தவறை அவர் ஒப்புக்கொண்டார். கடவுளிடம் அவர் மன்றாடினார். அவரது மனவருத்தம் மற்றும் மனமாற்றம் கடவுளின் மன்னிப்பை அவருக்கு வழங்கியது. கடவுளின் ஆசீரையும் பெற்றுக்கொண்டார். இந்த அனுபவம் தான் தாவீதை, இந்த திருப்பாடலை எழுதத்தூண்டியிருக்க வேண்டும். வழக்கமாக, நாம் தவறு செய்கிறபோது, மற்றவர்களின் மன்னிப்பைப் பெறலாம். ஆனால், தாவீது அரசர், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அதாவது, உண்மையான மனமாற்றம், கடவுளின் மன்னிப்பை மட்டுமல்ல, கடவுளின் அருளையும், ஆசீரையும் நிரம்பப்பெற்றுக்கொடுக்கும். இன்றைய நற்செய்தியிலும் கூட, திக்கிப்பேசுபவரை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். நோய்க்கு காரணம், ஒருவர் செய்த பாவம் என்பது இஸ்ரயேல்...

ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!

திருப்பாடல் 128: 1 – 2, 3, 4 – 5 நம்முடைய கடவுள் ஆசீர்வாதத்தின் கடவுள் என்று விவிலியம் முழுவதிலும் நாம் வாசிக்க முடியும். வரலாற்றில் கடவுள் பேசிய வார்த்தைகளாக விவிலிய ஆசிரியர்கள் கருதுவது, கடவுளுடனான ஆபிராமின் உரையாடல் தான். அதிலும் இந்த ஆசீர்வாதம் தான் முழுமையாகச் சொல்லப்படுகிறது. தொடக்கநூல் 12 வது அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம்: ”உனக்கு ஆசி வழங்குவேன். நீயே ஆசியாக விளங்குவாய்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, கடவுள் ஆசீர்வாதத்தின் தேவனாக இருக்கிறார். கடவுளின் ஆசீர்வாதம் எந்நாளும் நம்மோடு தங்கியிருக்கிறது. நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பதற்குக் காத்திருக்கிறார். நாம் அவருக்கு எதிராக குற்றங்களைச் செய்தாலும், அவற்றையெல்லாம் மன்னித்து ஏற்றுக்கொண்டு, நம்மை நிறைவாழ்வை நோக்கி அழைத்துச் செல்கிறவராக இறைவன் இருக்கின்றார். கடவுள் எப்போதும் நமக்காகவே இருக்கிறார். நாம் நன்றாக வாழ வேண்டும், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கமாக இருக்கிறது. அந்த கடவுளின்...