Category: இன்றைய சிந்தனை

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்!

திருப்பாடல் 40: 6 – 7, 7 – 8, 9, 16 கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று திருப்பாடல் ஆசிரியர் எழுதுகிறார். கடவுளுடைய திருவுளம் என்ன? நாம் அவருக்கு பலி செலுத்த வேண்டும் என்பதா? அவருக்கு மகிமையையும், புகழ்ச்சியையும் செலுத்த வேண்டும் என்பதா? எது கடவுளுடைய திருவுளம்? கடவுள் ஒருநாளும் பலியை விரும்பியது கிடையாது. இரக்கத்தையே அவர் விரும்புகிறார். தனக்கு ஆபரணங்கள் வேண்டும். தங்க வைடூரியங்கள் வேண்டும், அதிகமான இறைச்சி வேண்டும் என்று கடவுள் விரும்புவது கிடையாது. தங்க நகைகள் கடவுளின் வெறும் படைப்பு. அதற்கு மனிதர்களாகிய நாம் தான், மதிப்பு கொடுக்கிறோம். விலைமதிப்பில்லாததைப் போல அவற்றை, நாம் வைத்திருக்கிறோம். ஆனால், கடவுளுக்கு அவை மதிப்பில்லாதது. ஆக, கடவுள் எதிர்பார்ப்பது இதுபோன்ற மதிப்பில்லாத பொருட்களை அல்ல. கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஏழைகளுக்கு இரங்க வேண்டும் என்பதைத்தான். அவர்களுக்கு நாம் இரக்க காட்ட வேண்டும் என்பதைத்தான். நறுமணப்பலிகளை விட, எரிபலிகளை...

உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்

திருப்பாடல் 110: 1 – 2, 3, 4 இந்த திருப்பாடலில் ”ஆண்டவர், என் தலைவரிடம்..” என்ற வரிகள் யாரைச் சுட்டிக்காட்டுகிறது? என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள்ளாக எழுகிறது. இதற்கு பலதரப்பட்ட விளக்கங்கள தரப்பட்டாலும், மெசியா தான் இங்கே குறிப்பிடப்படுகிறார் என்று சொல்வது, சற்று பொருத்தமானதாக இருக்கிறது. ஏனென்றால், வலது பக்கம் என்று சொல்லப்படுவது, அரியணையின் முக்கியத்துவத்தை, வாரிசைக் குறிப்பிடுகிற சொல்லாக நாம் பார்க்கலாம். ஆக, மெசியா வருகிறபோது, இந்த உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. ஆண்டவருடைய துணைகொண்டு, மெசியா இந்த உலகத்தை வழிநடத்துவார். அவர் வழியாக இந்த உலகத்தில் நிகழக்கூடிய தீமைகளை அழித்து ஒழிப்பார். எதிரிகளிடையே அவர் ஆட்சிசெய்வார். அந்த நாட்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த முன்னறிவிப்பு இன்றைய நற்செய்தியிலும், கடந்த வாரத்தில் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியிலும் நடப்பதை நாம் பார்க்கலாம். இயேசு தான் வரவிருந்த மெசியா என்பதற்கான பல்வேறு நிகழ்வுகள் நற்செய்தி நூல்களில் நமக்கு...

மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே

திருப்பாடல் 110: 1, 2, 3, 4 எபிரேயர் 6: 20 சொல்கிறது: ”மெல்கிசெதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக்குரு என்னும் நிலையில் நம் சார்பாக இயேசு அங்கு சென்றிருக்கிறார்”. யார் இந்த மெல்கிசெதேக்? பழைய ஏற்பாட்டு புத்தகத்தின் தொடக்கநூலில் 14 ம் அதிகாரத்தில் ஒரு நிகழ்வு நமக்குச் சொல்லப்படுகிறது. ஆபிராமின் சகோதரர் லோத்தை எதிரிகள் பிடித்துச் சென்றதைக் கேள்விப்பட்ட ஆபிராம், தன்னுடைய ஆட்களோடு சென்று, அவர்களை தோற்கடித்து, லோத்தை மீட்டார். அந்த நேரத்தில் மெல்கிசேதேக்கைச் சந்திக்கிறார். தொடக்கநூல் 14: 18 – 20 ”சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ”உன்னத கடவுளின்” அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி, ”விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!“ என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்....

திருமுழுக்கு யோவானின் எடுத்துக்காட்டான வாழ்வு

திருமுழுக்கு யோவானின் பெருந்தன்மை இன்றைய நற்செய்தியிலே வெளிப்படுகிறது. இதுவரை மக்கள் மத்தியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கு, இறைவாக்கினர் என்று மக்கள் மதித்த பாங்கு, அதிகாரவர்க்கத்தினருக்கு அவர் விடுத்த சவால், இவையனைத்தையும், ஒரு நொடியில் இழப்பதற்கு திருமுழுக்கு யோவான் தயாராகிறார். தன்னை மெசியா என்று மக்கள் நினைத்திருந்தாலும், அந்த நினைப்பை தனது சுயநலத்திற்காக அவர் என்றுமே பயன்படுத்த முயலவில்லை. தன்னுடைய சீடர்கள் தன்னிலிருந்து, இயேசுவுக்கு நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தின் வெளிப்பாடுதான், இன்றைய நற்செய்தி. அவர்களின் தேடல் நிறைவிற்கு வரப்போகிறது என்பதை திருமுழுக்கு யோவான வெளிப்படுத்துகிறார். அவர்களின் தேடல் அவரில் அல்ல, மாறாக, இயேசுவில்தான் நிறைவு பெறப்போகிறது என்பதை அவர் தன்னுடைய சீடர்களுக்குக்கற்றுத்தருகிறார். அதற்காக அவர் வருந்தியது இல்லை. தனது புகழ் முடிந்துவிட்டதே என்று, வருத்தப்படவும் இல்லை. இயேசுவை இந்த உலகத்திற்கு முழுமையாக அடையாளம் காட்டுகிறார். நமது வாழ்வில் நம்மை அடையாளப்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுக்கிறோம். எப்படியாவது நம் வாழ்வில்...

ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது என்று எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்லப்படுகிறது. இது வெறும் உதட்டளவில் வெளிப்படக்கூடிய வார்த்தை அல்ல. அனுபவித்து அறிந்து வெளிப்படுத்துகின்ற வார்த்தைகள். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை இறைவன் ஆரோன், மோசே வழியாக வழிநடத்தினார். அவர்கள் சீனாய் வனாந்திரத்தில் புகலிடம் பெற்றனர். அது ஒரு வறண்ட பாலைநிலம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரிசல்காடு. இவ்வளவு மக்களை வழிநடத்த வேண்டுமென்றால், அவர்களை அமைதியாக இருக்க வைக்க வேண்டுமென்றால், ஒழுங்குமுறைகள் கொடுக்கப்பட வேண்டும். அதைத்தான் சீனாய் மலையில் மோசே வழியாக, மக்களுக்கு வழங்கினார். இந்த ஒழுங்குமுறைகளை எதிர்மறையாகப் பார்த்தால், ஏதோ நம்மை கட்டுக்குள் வைக்கக்கூடிய சட்டங்கள் போல தோன்றும். ஆனால், அவற்றை நேர்மறையாகச் சிந்தித்தால், அது நமது வாழ்வை செதுக்கக்கூடியவைகளாகத் தோன்றும். நம் அனைவரையும் வாழ வைக்கக்கூடியதாக தோன்றும். ஆக, கடவுளின் வார்த்தைகள் எந்த அளவுக்கு வல்லமையுள்ளதாக இருக்கிறது. அதை எப்படி நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ள வேண்டும். அதனை எப்படி...