Category: இன்றைய சிந்தனை

எருசலேமே! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக

திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5, 6 – 7, 8 – 9 இந்த திருப்பாடல் முழுவதும் எருசலேம் நகரைப்பற்றியும் அதன் மேன்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கின்றது. எருசலேம் என்பது சாதாரண நகர் மட்டுமல்ல. அது இஸ்ரயேல் மக்களின் அடிநாதம். இஸ்ரயேல் மக்களின் உயிர்முடிச்சு. எப்போதெல்லாம் எருசலேம் நகருக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களின் இதயத்தில் வலி பெருக்கெடுத்து ஓடும். அந்த எருசலேம் நகரத்தின் மகிமையை, மகத்துவத்தைப் போற்றக்கூடிய பாடலாக இந்த திருப்பாடல் முழுவதும் அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. எருசலேம் இவ்வளவு மகிமைக்கு உரியதாக விளங்குவதற்கு காரணம் என்ன? எருசலேமில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். கடவுளின் பிரசன்னம் எருசலேம் நகரில் இருக்கிறது. எருசலேம் கடவுளின் பாதுகாப்பில் இருக்கிற நகரம். எனவே, யாரெல்லாம் எருசலேமில் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருமே இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் நிறைவான ஆசீரைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எருசலேம் நகரில் இருக்கிறவர்களுக்கு கடவுளே...

இறைவனின் வருகையும் நமது வாழ்வும்

திருவருகைக்காலத்தின் முதல் வாரத்தில் இருக்கிறோம். கடந்த வழிபாட்டு ஆண்டை நேற்றோடு நிறைவு செய்திருக்கிறோம். புதிய ஆண்டை இன்றோடு தொடங்குகிறோம். ஏறக்குறைய நமது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்தது இது. கடந்த ஆண்டு முழுவதும் இயேசுவின் பிறப்பு, போதனை, நமக்காக இறந்து உயிர்த்து, விண்ணகம் சென்று, அனைத்துலக அரசராக அவரை நிலைநிறுத்திக்கொண்டதை தியானித்து நம்மையே புதுப்பித்துக்கொண்டிருக்கிறோம். மற்றொரு புதுப்பித்தலுக்கான தொடக்கம் தான் இன்றைய திருவருகைக்காலத்தின் முதல் வாரம். இந்த நாளிலே நாம் அனைவரும் சிந்திப்பது புதிய ஆண்டிற்கான தயாரிப்பு மட்டுமல்ல. பழைய ஆண்டு எந்தளவுக்கு நம்மைப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்வதும் தான். இயேசுவின் வாழ்வு முழுவதையும் அறிந்து தியானித்திருக்கிற நாம், எப்படி அவரது வாழ்வை நமது வாழ்வாக மாற்றியிருக்கிறோம்? அல்லது மாற்ற முயற்சி எடுத்திருக்கிறோம்? அதிலே எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம்? அல்லது சறுக்கியிருக்கிறோம்? இந்த கேள்விகளை நாம் மீண்டும், மீண்டுமாகக் கேட்டுப்பார்த்து, அதற்கான பதில்களையும் நாம் காண முயல வேண்டும்....

இறைவனின் உடனிருப்பு

திருவெளிப்பாடு 22: 1 – 7 வழிபாட்டு ஆண்டினுடைய இறுதிநாட்களில் கொடுக்கப்படுகிற வாசகங்கள் பெரும்பாலும், திருவெளிப்பாடு நூலை மையப்படுத்தியதாக இருக்கிறது. இந்த திருவெளிப்பாடு புத்தகம் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அந்த காட்சிகளில் வெளிப்படும் உருவகங்கள் உலக முடிவை நமக்கு அறிவிப்பதாக அமைந்திருக்கின்றன. எதற்காக உலக முடிவு மற்றும் அழிவு சார்ந்தவை இந்த நாட்களில் நமக்குத் தரப்படுகின்றன? நம்மை பயமுறுத்துவதற்காகவா? வாழ்வு தரக்கூடிய இறைவார்த்தை, அழிவு தொடர்பானவற்றை வெளிப்படுத்துவதேன்? அனைத்துலக அரசராக கிறிஸ்து இயேசு திருவிழாவை கொண்டாடியிருக்கிற நாம், கிறிஸ்து அரசருடைய ஆட்சி எப்படி அமைவதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இப்படிப்பட்ட வாசகங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கண்டிப்பாக இருளின் ஆட்சி நிறைவுக்கு வரும் என்பதையும், ஒளியின் ஆட்சியை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அமைப்பார் என்கிற நம்பிக்கைச் செய்தியையும் இது வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் அரசு அனைவருக்கும் வாழ்வளிப்பதற்காக அமைய இருக்கிறது. இந்த அரசில் தகுதி பெறுவதற்கு, நாம்...

இயற்கையைப் பாதுகாப்போம்

இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார். இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட...

ஆவலோடு எதிர்பார்த்தது இதோ விரைவில்…

லூக்கா 21:20-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது கிடைக்கும் போது நமக்கு பெருமகிழ்ச்சி கிட்டுகிறது. நாம் எதிர்பார்த்திருந்தன் நோக்கமும் நிறைவு பெறுகிறது. நமது மனதின் ஏக்கமும் முடிவுக்கு வருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவார் என எதிர்பார்த்திருக்கும் நமக்கு மிக உடனடியாக அவரது இரண்டாம் வருகை இருக்கும், நம் ஏக்கம் நிறைவேற போகிறது என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு இரண்டு ஆசீரைத் தருகிறது. 1. மீட்பு இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பியிருக்கும் எல்லோருக்கும் இயேசுவின் வருகை மீட்பு அளிக்கும். அந்த மீட்பிற்கான நாள் வெகுதொலையில் இல்லை. மாறாக மிகவும் அருகில் உள்ளது. நாம் அனைவரும் மெசியாவைப் பார்க்க...