Category: இன்றைய சிந்தனை

தவறுகளை தனியே திருத்து…

மத்தேயு 1:18-24 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். சிலர் தவறுகள் செய்யும்போது உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு நாம் பொது இடத்திலே திருத்த விழைகிறோம். இதனால் தவறு செய்தவரின் மனம் உடைகிறது. இப்படி செய்வதனால் அவருக்குள் இருக்கும் மகிழ்ச்சியும் மறைகிறது. தவறு செய்தவரை எப்படி திருத்த வேண்டும் என்பது பற்றி யோசேப்பு இன்றைய நற்செய்தி வாசகத்தில் சொல்லித் தருகிறார். அன்னை மரியாள் அவரோடு கூடி வாழும் முன் அவர் கருவுற்றிருந்தது அவருக்கு தெரியவந்தது. இருப்பினும் அவர் அன்னை மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிடத் திட்டமிட்டார். நாமும் மறைவாக தனியே அழைத்து தவறுகளை திருத்தினால் இரண்டு ஆச்சரியங்கள் நடக்கும். 1. அடுத்தவருக்கு உயர்வு தவறுகளை பொதுவில் சுட்டிக்காட்டும்போது அந்த...

மூதாதையரை நினையுங்கள் இன்று…

மத்தேயு 1:1-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நமக்கு வழங்குகிறது. இது நம் மூதாதையர்களின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது. அவர்கள் இன்றி நாம் இங்கில்லை. ஆகவே இன்று நம் மூதாதயரை நாம் நினைக்க வேண்டும். நினைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் இரண்டு செயல்களிலும் இறங்குவது இன்றைய நாளுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். 1. அவர்களைப் போல்… அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை நாம் நினைத்துப் பார்த்து அதைப் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த நல்ல படிப்பினைகளை, வாழ்க்கை முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் மூதாதையரின் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தார். அவர்களிடமிருந்த பண்புகள் அவரிடமும்...

இனி எப்போதும் மகிழ்ச்சி தான்…

லூக்கா 3:10-18 இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சியின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மெசியாவின் பிறப்பிற்கு நம்மையே தயாரிக்கும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியை மற்ற மனிதர்களிடம் பரப்ப வேண்டும், மகிழ்ச்சியின் ஆட்சி அகிலத்தில் நடக்க உழைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கங்களோடு திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு வந்திருக்கிறது. ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்க விரும்பி, ஊரில் சிலரிடம் ஆலோசனை கேட்டார். பணம் இருந்தால் போதுமென்றார்கள் சிலர். எனவே அவர் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார். குறுகிய காலத்தில் நிறையச் செல்வம் சேர்த்து, பெரிய ஆளானார். ஆனால் அவர் தேடிய மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் சிலரிடம் ஆலோசனை கேட்டார் அவர். செல்வத்தைச் சேர்த்தால்...

சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!

மத்தேயு 17:9, 10-13 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும். 1. கற்பதில் சீர்திருத்தம் நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து...

புறணி பேசுபவர்கள் தீவிரவாதிகளே!

மத்தேயு 11:16-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய ஒரு உரையில் புரணி பேசுபவர்கள் தீவரவாதிகள் என்கிறார். ஏனெனில் அவர்கள் அடுத்தவர்கள் மீது வெடிக்குண்டுகளை வீசிவிட்டு அமைதியான முறையில் கலைந்துச் செல்கிறார்கள். ஆகவே அவர்களைக் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் என்றும் திருத்தந்தை அவா்கள் கூறுகிறார்கள். நற்செய்தி வாசகமும் அதே கருத்தைதான் நம் முன்னே வைக்கிறது. ஒருவர் நமக்கு எதிராக புரணி பேசும்போது நாம் அதை எப்படி அணுகுவது என்று நமக்கு சொல்லி தருவதோடு அதற்கான இரண்டு வழிகளை கற்பிக்கிறது. 1. வேண்டு “தந்தையே! இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள்” என்று இயேசு ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்க வேண்டும்....