Category: இன்றைய சிந்தனை

ஜெயமோ [வெற்றியோ] கர்த்தரால் வரும்

அன்பான மாணவ,மாணவிகளே! கண்மணிகளே!! உங்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பான செல்லங்களே! இந்த வருஷம் பொது தேர்வு எழுதும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் எங்களுடைய MyGreatMaster.com  இணைய தளம் மூலம் ஜெபம் ஏறேடுக்கிறோம். நீங்கள் எந்த கவலையும் படாமல் நன்கு பரீட்சை எழுதுங்கள். முடிவை பற்றி கவலைப்படாதீர்கள். ஜெயம் கொடுக்கும் நம்முடைய ஆண்டவர் உங்கள் ஒவ்வொருவருடன் கூடவே இருந்து உங்களுக்காக தமது தூதர்களை அனுப்பி நீங்கள் எழுதும் ஒவ்வொரு கேள்வியின் பதிலை உங்களுக்கு நன்றாக ஞாபகம் வரும்படி அருள்செய்வார். நீங்கள் ஒவ்வொருநாளும் படிக்கும் பொழுது உங்களுக்கு புரியாத கேள்விகளை ஆண்டவரின் கரத்தில் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களுக்கு எளிதாக புரிய வைத்து, பதில் உங்கள் மனதை விட்டு நீங்காத படிக்கு காத்துக்கொள்வார். குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும். [நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 21:31] .ஆதலால் ஆண்டவர் பேரில் உங்கள் பாரத்தை போட்டுவிட்டு நீங்கள் நிம்மதியாக எழுதுங்கள். நமக்குள்...

நாம் ஆராதிக்கும் தேவன்,நம்மை தப்புவிக்க வல்லவர்.

கிறிஸ்துவுக்குள் அன்பான இறைமக்களுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இன்றும் கூட அநேக மக்கள் ஒவ்வொருவரும் தமது தேவைகளை நிறைவேற்ற பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறோம். அந்த தேவைகளை பெற்றுக்கொள்ள பல பாடுகளை அனுபவிக்கிறோம். ஆனால் நம் ஆண்டவராகிய தேவன் நம்முடைய எல்லா தேவைகளையும் அறிந்து இருக்கிறார். அவரை நோக்கி பார்த்து நமது மன விருப்பங்களை அவரிடத்தில் ஒப்புவித்து நம் எல்லா தேவைகளையும் பெற்றுக்கொள்வோம். சில வேளைகளில் நாம் கடவுளின் மகிமையை உணராமல் புலம்பி .தவிக்கிறோம். சரீரத்தின்படி நாம் கடவுளிடம் இருந்து தூரமாய் இருந்தாலும் ஆவியின்படி நாம் அவரோடு இணைந்திருக்கிறோம். ஆவியானவர் எப்பொழுதும் நம்மோடு கூடவே இருந்து நமக்காக கடவுளிடம் வேண்டுதல் செய்து கொண்டுதான் இருக்கிறார்.அவருக்குள் வேர் கொண்டு நிலைத்திருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய தேவையில்லை. எழுதியிருக்கிறபடி  [மறைநூலில்] கடவுள் அவர்மேல் அன்பு கூருகிறவர்களுக்கு அவர் உண்டாக்கி வைத்திருக்கும் ஆசீர்வாதங் களை நமது கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை,நம்...

மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் நம் கடவுள் ஒருவரே!!!

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்தும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த செய்தியை வாசிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்துவராகவோ அல்லது வேறு எந்த இடத்தில் இருந்தாலும் யோசித்து செயல்பட உங்களை அன்போடு அழைக்கிறேன். இது எங்கோ ஒரு இடத்தில் யாருக்கும் தெரியாத நடந்த சம்பவம் கிடையாது. இது வரலாற்று உண்மை. நீங்கள் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால் இதன் உண்மையை புரிந்துக் கொள்ளலாம். கி.மு 605 – 536 ஆகிய நிறைந்த வருஷங்களில் பாபிலோனில் அரசாண்ட நேபுகாத்நேசர் என்னும் மன்னன் யூதா நாடாகிய எருசலேம் என்னும் நாட்டை பிடித்து அங்குள்ள மக்களை சிறைபிடித்து, கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டு சென்று அங்கு அவர்களை 70 வருஷம் அடிமைப் படுத்தி வைத்திருந்தது வரலாற்று உண்மை. அவன் சிறைப்பிடிக்க காரணம் யூதா மக்களின் பாவத்தினால் கடவுள் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். ஆனாலும் இரக்கம் நிறைந்த கடவுள் அவர்களை 70...

உள்ளத்தில் வாசம் செய்யும் நம் இயேசுகிறிஸ்து

பிரியமானவர்களே! நம்முடைய தேவனாம் கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான நல்வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் முதலாவது கடவுள் ஆதாம், ஏவாள் இவர்களை படைத்து அவர்கள் உண்டு உயிர்வாழ ஏதேன் தோட்டத்தில் கனி தரும் மரங்களை உண்டாக்கி, நீங்கள் இங்கு உள்ள எல்லா கனிகளையும் புசிக்கலாம், ஆனால் நன்மை, தீமை அறிவதற்கு உண்டான கனியை நீங்கள் சாப்பிட கூடாது என்று அவர்களுக்கு கட்டளையிட்டார். [தொடக்க நூல் 2:16,17] ஆனால் அவர்களோ ஆண்டவரின் கட்டளைக்கு கீழ் படியாமல் அவர் சாப்பிடக் கூடாது என்று சொன்ன கனியை புசித்து தங்களின் தேவ மகிமையை இழந்து போனதால் பாவம் அவர்களை ஆற்கொண்டது. அவர்களின் வழி மரபில் வந்தவர்கள்தான் நாம் அனைவருமே. வாழ்வு தரும் வாழ்வாய் வந்த அவரை நாம் செய்த பாவத்தினால் அவர் நம்மை யாவரையும் மீட்கும் பொருட்டு மானிட தோற்றம் எடுத்து இந்த உலகத்தில் வந்து நம் பாவத்தை போக்க அவர் சிலுவை சுமந்து இரத்தம் சிந்தி நம்மை...

குணமாக்கும் அன்பு

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய  நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். அன்பானவர்களே! இந்த காலச் சூழ்நிலையில் நாம் சில சமயத்தில் பலவிதமான நோயினால் மனமும், உள்ளமும், உடலும் சோர்ந்து போய் எத்தனையோ டாக்டரிடம் காண்பித்தும் குணமாகாமல் துன்பத்தில் கலங்கி தவிக்கிறோம். சுகமளிக்கும் ஆண்டவர் நம்மோடு இருப்பதை அநேக வேளைகளில் மறந்து யார் யாரையோ நாடித்தேடிச்சென்று நம் பணத்தை இழந்து, நிம்மதியை இழந்து தவிக்கிறோம். வேதத்தில் வாசிக்கும் பொழுது நிறைய சம்பவங்கள் இதைக்குறித்து நமக்காக நம் விசுவாசத்தையும், நம்பிக்கையும் இழந்து போகாதபடிக்கு எழுதப்பட்டுள்ளது. 12 வருஷம் உதிரப்போக்கினால் கஷ்டப்பட்ட ஒரு பெண் தன் நம்பிக்கையினால் நான் சென்று அவரின் வஸ்திரத்தின் ஓரத்தையாவது தொட்டு சுகம் பெற்றுக்கொள்வேன் என்று நம்பி, அதே நம்பிக்கையோடு ஆண்டவரின் வஸ்திரத்தை தொட்டு உதிரப்போக்கில் இருந்து குணமானதை வாசிக்கிறோம். அந்த பெண்ணுக்கு தான் எத்தனை நம்பிக்கை பாருங்கள். நாமும் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்வோம். என்ன வியாதி யாய் இருந்தாலும் சரி அதிலிருந்து விடுபட நம் ஆண்டவரிடம் நம்பிக்கையோடு கேட்டு அற்புத சுகத்தை பெற்றுக்கொள்வோம். [மத்தேயு 9:20]  [மாற்கு 5:25]...

%d bloggers like this: