Category: இன்றைய சிந்தனை

செபத்தின் மேன்மை

செபமா? உழைப்பா? இரண்டில் எது சிறந்தது? என்ற கேள்வி ஒவ்வொரு அருட்பணியாளருக்கும் எழக்கூடிய இயல்பான கேள்வி. ஒருபுறம் செபம் தான் சிறந்தது என்று, ஆலய வழிபாடுகளோடு நிறைவு காண்கிறவர்கள். மறுபுறம், மக்கள் பணிதான் இறைவன் பணி என்று, முழுக்க, முழுக்க உழைப்பிற்கும், சமுதாயப்பணிக்கும் முன்னுரிமை கொடுக்கக்கூடியவர்கள். இரண்டுமே அவசியம் என்பது நமக்குத்தெரிந்திருந்தாலும், ஏதாவது ஒன்றினை மையப்படுத்தி நமது வாழ்வை அமைத்துக்கொள்கிறோம். இன்றைய நற்செய்தி, இந்த கேள்விக்கு சிறந்த பதிலைத்தருகிறது. அதாவது, கிறிஸ்தவ வாழ்வை நாம் சிறந்த முறையில் வாழ்வதற்கு, கடவுளுடனான நமது உறவுதான் சிறந்த உந்துசக்தி என்பதுதான் அந்த பதில். ஒருவர் எவ்வளவுதான் சமுதாயப்பணிகள், மக்கள் பணியில் சிறந்து விளங்கினாலும், அவர் தனது வாழ்க்கையில் கடவுளுக்கோ, செபத்திற்கோ நேரம் கொடுக்கவில்லை என்றால், அவருக்கு நிச்சயமாக நிறைவு என்பதே இருக்காது. இயேசுவின் வாழ்வில் இது உறுதியாக வெளிப்படுகிறது. இயேசு பகலெல்லாம் கால்நடையாக நடந்து, பல இடங்களுக்குச் சென்று, போதித்தாலும், அவருக்கு களைப்பு இருந்தாலும்,...

ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்

இந்த திருவிழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின் தூய்மைச் சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு ஒரு பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்ததால், இவ்வாறு அழைக்கப்பட்டது. இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நற்செய்தி பகுதியை அடிப்படையாகக் கொண்ட இவ்விழா, கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு அடுத்த 40 நாட்களில் கொண்டாடப்பட்டது. தொடக்கத்தில் இந்த திருவிழாவானது கி.பி400 ம் ஆண்டிலே, எருசலேமில் கொண்டாடப்பட்டதாக நாம் அறிகிறோம். அதன்பிறகு, ஐந்தாம் நூற்றாண்டில், இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக, மற்றொரு வரலாறு கூறுகிறது. பின்பு ஒளி பவனியும் இத்தோடு இணைக்கப்பட்டது. இது புறவினத்து மக்களின் பாவப் பரிகார சடங்கிற்கு பதிலாகச் சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஒளியேற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு பவனியாக ஊரைச்சுற்றி வந்தார்கள். இது இயேசு வரும்போது உலகில் உள்ள இருள் மறைந்துபோகிறது என்பதை உணர்த்துகிறது. இயேசு இதற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார். ஏனென்றால், இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறபோது, சிமியோன் இயேசுவை புறவினத்தார்க்கு வெளிப்பாடு...

முன்சார்பு எண்ணங்களைக் களைவோம்

இயேசு ஒரு புதிய மனிதராக தன்னுடைய சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். போதகர் என்ற அடையாளத்தோடு, அவருடைய சீடர்களோடு தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். பொதுவாக, இயேசு வாழ்ந்த காலத்தில் போதகர்கள் எனப்பட்டவர்கள் தங்களுடைய சீடர்களோடு ஊர், ஊராகச்சென்று, போதிப்பது வழக்கமாக இருந்தது. போதகர்களை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். போதகர்களுக்கு மக்கள் நடுவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. நோய்கள் குணமாக போதகர்களை செபிக்க சொல்வதும், அவர்களின் போதனைகளைக்கேட்பதற்கு செல்வதும் மக்களுக்கு பழக்கமானதாக இருந்தது. இந்த நற்செய்தியில் இயேசுவின் போதனையைக்கேட்க இயேசுவுடைய நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அங்கே நிச்சயம் இருந்திருப்பார்கள். இயேசுவைப்பற்றி மக்கள் பேசுவதைக் இதுநாள் வரை கேள்விப்பட்டிருந்தார்கள். இப்போது நேரிடையாக அவரின் போதனையைக் கேட்பதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அவருடைய போதனையைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தவர்கள், இயேசுவைப்போற்றுவதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள். அதற்குக்காரணம் இயேசு நன்றாக போதிக்கவில்லை என்பது அல்ல: மாறாக, அவர்களின் முன்சார்பு எண்ணம். ஏனென்றால், இயேசுவினுடைய போதனையைக்கேட்ட அவருடைய சொந்த ஊர் மக்களும், அவருடையப்போதனையைக்...

அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்!

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43) உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது. துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார். அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் “போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்?” என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள். ஊக்கம்: இயேசுவோ “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார். அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன. துணிவான நம்பிக்கை: “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள். நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்பு வியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் “மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்”. இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும்,...

வாழும் நற்செய்தியாய் மாறுவோம்

காடுகளும், திராட்சைத்தோட்டங்களும், பாழடைந்த இடங்களும், கல்லறைத்தோட்டங்களும் பேய்களின் வாழிடம் என்று யூத மக்கள் நம்பினர். இயேசுவும் அவருடைய சீடர்களும் வந்தநேரம் இருளடைந்திருந்த நேரமாக இருந்திருக்க வேண்டும். தீய ஆவி பிடித்திருந்த அந்த மனிதனின் பெயர் இலேகியோன் என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை உரோமைப்படைப்பிரிவில் பயன்படுத்தப்படுகிற வார்த்தை. ‘இலேகியோன்’ என்பது உரோமைப்படையின் 6,000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. பேய் பிடித்திருந்த அந்த மனிதனுக்கு இந்த வார்த்தை பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்திருக்க வேண்டும். தனக்குள்ளாக பெரிய தீய ஆவிகளின் படையே குடிகொண்டிருக்கிறது என்கிற அவனது எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்தப்பதில். மேலும் பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமையாக இருந்த இந்த காலக்கட்டத்தில், வன்முறைகள், கலகங்கள் ஏற்பட்டால், அதனை அடக்க இந்த படைப்பிரிவு கொடுமையான முறையில் மக்களை அடக்கி ஒடுக்கியது. இதுவும் இந்தப்பெயரை தீய ஆவி பிடித்தருந்த மனிதன் பயன்படுத்தியதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள்ளாக வன்முறையான தீய ஆவிகள் குடிகொண்டிருப்பதை இப்படி அவன் வெளிப்படுத்தியிருக்கலாம். தீய...