Category: இன்றைய சிந்தனை

இறைப்பிரசன்னத்தின் இருப்பிடம் ஆலயம்

தொழுகைக்கூடத்தில் நடக்கும் இந்த நிகழ்வு ஒரு மிகமுக்கியமான நிகழ்வு. ஏனென்றால், யூத மதத்தின் பாரம்பரியவாதிகளுக்கும், இயேசுவுக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தொழுகைக்கூடங்களில் போதிக்கும் இயேசுவின் போதனைக்கு எதிர்ப்பு அவர்களிடமிருந்து கிளம்ப ஆரம்பித்துவிட்டது. ஆனால், இயேசு தனது பாதுகாப்பைத்தேடி ஒளிந்துகொள்ளாமல், ஆபத்தான அந்த சூழ்நிலையை எதிர்கொள்கிறார். தொழுகைக்கூடங்களில் இயேசு போதிக்கிற இடங்களுக்கெல்லாம், தலைமைச்சங்கத்தினால் நியமிக்கப்பட்ட தூதுக்குழுவினர் சென்று, இயேசுவின் போதனையைக் கணக்கெடுக்க ஆரம்பித்தனர். தொழுகைக்கூடத்தின் முதல் இருக்கைகள் மதிப்பிற்குரியது. அந்த இருக்கைகள் தலைமைச்சங்க உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மக்களை தவறாக வழிநடத்துகிற போதனையாளர்களை எதிர்கொண்டு, அவர்களை விசாரிப்பது இவர்களுடைய முக்கியமான கடமைகளுள் ஒன்று. அந்த வகையில், தலைமைச்சங்க உறுப்பினர்கள் இயேசு போதிக்கும் இடங்களுக்குச் சென்று வருவது, அவர்கள் இயேசுவை எப்படிப்பார்த்தார்கள் என்பதற்கு சிறந்த சான்றாகும். அவர்களின் நோக்கம் இறைவார்த்தையைக் கேட்பது அல்ல, செபிப்பது அல்ல. மாறாக, குற்றம் கண்டுபிடிப்பது. குற்றம் கண்டுபிடிப்பதற்காக, ஆலயத்தின் முன்னால் அமர்ந்து, தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற முன்னுரிமையைத்...

சட்டத்தை அனைவருக்கும் சமமாக்குவோம்

ஓய்வுநாள் என்பது எபிரேய மொழியின் “ஷாவத்” என்கிற வார்த்தையின் பொருளை மையப்படுத்தியதாகும். அதன் பொருள் “இளைப்பாறுதல்”, ”தவிர்த்தல்”, ”ஓய்வெடுத்தல்” என்பதாகும். யூதர்களின் ஓய்வுநாள் என்பது வெள்ளிக்கிழமை மாலை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை மாலை சூரிய மறைவு வரை இருக்கும். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள். ஏனென்றால், அன்றைய தினம் நம் ஆண்டவரின் உயிப்புநாள். இந்த ஓய்வுநாளில் செய்யக்கூடாதவை என்று, யூதர்களின் மறைநூல் அறிஞர்கள் பல ஒழுங்குமுறைகளை வகுத்திருந்தனர். இந்த ஒழுங்குகளில் ஒன்றுதான் இன்றைய நற்செய்தியில் வரும் ஓய்வுநாளில் கதிர்கொய்தல் பற்றியது ஆகும். அடுத்தவருக்கு சொந்தமான வயலில் கதிர்களைப்பறிப்பது தவறானது அல்ல. அது ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டது. அரிவாளால் பறிக்காதவரைக் குற்றமில்லை. எனவே, சீடர்களின் இந்த செயல் நியாயமானதாக, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் கதிர்களைப்பறித்தது ஓய்வுநாளில். அதுதான் ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது. இதைத்தான் பரிசேயர் குற்றப்படுத்துகின்றனர். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். இருந்தும் அவர்கள் அதைப்பறிக்கிறார்கள் என்றால், அதற்குக்காரணம், தாங்கமுடியாத பசி. பொறுத்து, பொறுத்துப்...

ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?

‘தங்கியிருத்தல்’ உண்மையிலே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இன்றைய காலகட்டங்களில் ஆ.டு.யு களை கடத்தி தங்களோடு தங்க வைப்பது இந்த அனுபவம்தானே. ஒருவனோடு தங்கி, உண்டு, உறங்கி சில நாட்கள் இருந்தால் அது அவனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதல்லவா!. இத்தகைய பெரும் மாற்றத்தை, புரட்சியை இயேசுவோடு தங்கியிருப்பதும் செய்யவல்லது. இயேசுவோடு தங்கிய யாவரும் இந்த அனுபவம் பெற்றனர். எம்மாவு “எங்களோடு தங்கும்”(லூக்24’29) என்ற அழைப்பு மாபெரும் மாற்றத்தை அச்சீடர்களில் ஏற்படுத்தியது. “சக்கேயு,இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” (லூக் 19’5) என்ற இயேசுவின் வார்த்தை சக்கேயுவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் நமக்கு தெறியும். இவ்வாறு தங்க ஆசைப்பட்டு “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” எனக் கேட்டு அவரோடு தங்கியவருள் ஒருவர் அந்திரேயா. அவர் பெற்ற அனுபவம் “மெசியாவைக் கண்டோம்” என்பது. பெற்ற பெரு மகிழ்ச்சியை பேதுருவோடும் பகிர்ந்துகொள்கிறார். தானும் பேரானந்தம் அடைகிறார். பலரையும் இயேசுவில் மகிழச் செய்கிறார். இதேபோல் நாம்...

ஆண்டவருடைய வார்த்தை அருமருந்து

தொழுகைக்கூடங்களில் இயேசு கற்பிப்பதற்கு உறுதியான எதிர்ப்பு கிளம்பிவிட்டது இன்றைய நற்செய்தியில் தெளிவாகிறது. எனவே, இயேசு தனது போதனையின் இடத்தை மாற்றுகிறார். இயேசுவின் போதனைக்கு இடையே வந்தவர்கள், யூதப்பாரம்பரியவாதிகள். ஏரிக்கரையில் நடந்துகொண்டு அவர் போதிக்கிறார். பாலஸ்தீனப்பகுதி போதகர்களின் போதனை இப்படித்தான் அமைந்திருக்கும். மத்தேயு மக்களால் வெறுக்கப்பட்ட மனிதர். ஏனெனில் அவர் ஒரு வரிதண்டுபவர். மத்தேயுவின் இதயத்தில் இது மிகப்பெரிய வலியாக இருந்திருக்கும். அவர் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும், இந்த சமுதாயம் அவர் பாவி என்று முத்திரை குத்தியிருக்கிறது. பாரம்பரிய யூதர்கள் நிச்சயம் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த நேரத்தில் இயேசுவின் போதனை, அவருக்கு பெரிய ஆறுதல். இயேசுவின் போதனை அவருடைய உள்ளத்தை துளைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. மனம் மாற வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு இயேசுவின் வார்த்தை என்றுமே ஆறுதல்தான். ஆண்டவருடைய வார்த்தை, துன்பப்படுகிறவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. அது சாதாரணமாக வாசிக்கிறவர்களுக்கு அல்ல. மாறாக, உள்ளத்தில் துயரத்தினால்,...

பாவ மன்னிப்பு

பின்தொடர்ந்தது. இயேசுவை அவர்கள் கடவுளின் பிரதிநிதியாகவே பார்த்தார்கள். இயேசுவிடத்தில் ஏதோ அதிசயிக்கத்தக்க ஒன்றை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதனால் தான் அவரை ஏராளமான மக்கள் பின்தொடர்ந்தார்கள். இயேசு மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார் என்பதையே மறைநூல் அறிஞர்களின் வருகை எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால், போதிப்பவர்களில் உண்மையானவர் அல்லது போலியானவர் என்பதை, தலைமைச்சங்கம் முடிவு செய்தது. மக்கள் மத்தியில் இயேசு புகழ்பெற்றதனால், அவரைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக, அறிஞர்கள் அங்கே வந்திருந்தனர். இயேசு எப்படி பாவங்களை மன்னிக்கலாம்? என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது. ஏனென்றால், கடவுள் ஒருவர் மட்டும் தான் பாவங்களை மன்னிக்க முடியும். அப்படியிருக்க இயேசு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, என்று எப்படிச் சொல்லலாம், என்று அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இயேசு தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இருக்கிறது என்பதை, அழகாக அவர்களுக்கு, எடுத்துக்காட்டு மூலமாக விவரிக்கிறார். அவர்களால் பதில் சொல்லவும் முடியாமல், என்ன சொல்வதென்றும் புரியாமல் விழிக்கிறார்கள். இங்கே இயேசு ஒரு ஆழமான செய்தியைத்தருகிறார்....